வாழ்வெனும் தமிழே வாழ்க வாழ்க

சித்தர்கள் மொழியாம்
செந்தமிழே 
அழகு
முத்திரை பதிக்கும்
முத்தமிழே

கணினிக்குள் கமழும்
கணித்தமிழே
எங்கும்
இணையத்தில் இனிக்கும்
இகத்தமிழே

உயர்தனிச்
செம்மொழியே
எங்கள்
உயிரின் திருமொழியே

உன்னில் கரைந்தே
உயர்கின்றேன்
எங்கள்
வாழ்வெனும் தமிழே
வாழ்க வாழ்க

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

தமிழிற்கு வாழ்த்து - அருமை அருமை - செந்தமிழ் முத்தமிழ் கணித்தமிழ் இகத்தமிழ் செம்மொழி திருமொழி - அடடா - வாழ்க வாழ்க

அன்புடன் புகாரி said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சீனா