என்ன கவிஞன் நான்


என்ன கவிஞன் நான்

இங்குதான் எனச்சொல்லி
என் சுட்டுவிரல் தொட்டுவிடாமல்
எங்கெங்கிலுமே
காட்டாறாய்ப் பிரவாகமெடுக்கும்
என் ஆத்மத் துடிப்புகளுக்குச்
சரியான வார்த்தை வடிகால்
தேடத் தெரியாமல்

என்ன கவிஞன் நான்

அறிவே
உள்ளே கனலும் என்
நெஞ்ச எரிமலை
மிகச் சத்தமாய் வெடிக்க
நித்தம் முடிவு வெல்லாத
ஆவேசச் சொற் குழம்புகளை
என்னுள் கொப்பளிக்கச் செய்

இல்லையேல்
வெறித்தனமாய் என்னுள்
எழுந்து எரியும்
அந்த ராட்சசத் துடிப்புகளையேனும்
அணுவளவும் மிச்சமின்றி
தீயச் செய்

1 comment:

mohamedali jinnah said...

நீங்கள் நல்ல கவிஞன் என்பதனை அனைவரும் அறிவோர்.
இதுதான் அவை அடக்கமோ!