19

பறவை பறக்கும் உதட்டுக்காரி
பஞ்சவர்ண சிரிப்புக்காரி
சிந்தாமணி கண்ணுக்காரி
சிணுங்கிச் சிவக்கும் மூக்குக்காரி

பால்வாழை நாக்குக்காரி
பறித்தெடுக்கும் பேச்சுக்காரி
மச்சமுள்ள காதுக்காரி
மரிக்கொழுந்து வாசக்காரி

வாழையிலை வயித்துக்காரி
வளையலளவு இடுப்புக்காரி
வசந்தம்பூத்த மார்புக்காரி
வழுக்கிவிழும் கழுத்துக்காரி

என்னை நினைக்கும் இதயக்காரி
என்னைத்தேடும் உணர்வுக்காரி
எப்போதும் என் கனவுக்காரி
எனைப்பிரியா உயிர்க்காரி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

9 comments:

சீனா said...

ஆகா ஆகா அருமை அருமை காதல் கவிதை அருமை

காரியின் காரிகளைக் காதலிக்கும் புகாரி

நன்று நன்று நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா

--------------------------------

சாந்தி said...

காரியமாய் வாரிவிட்ட
யாரந்த சிங்காரி
அன்புடன் புகாரி ?

காந்தி ஜெகன் said...

புகாரிரிரிரிரிரிரிரி....!!!!

கொன்னுட்டீங்க!

இதைவிட எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை!

:-)))

ஹரன் ஜாபர் said...

வர்ணனைகளை படித்தவுடன், வசமாக மாட்டிக்கொண்டீர்கள் என நினைத்தேன். தாண்டி விடுவீர்களா.. இல்லை மீண்டு விடுவீர்களா எனத் திகைத்தேன்.

‘வாழைப்பூ' கவிஞர்களை வென்று
‘வசந்தம் பூக்க' வைத்தீர்கள் புகாரி.

வாழ்த்துக்கள்

-அன்புடன்
ஹரன்.

பூங்குழலி said...

சிணுங்கிச் சிவக்கும் மூக்குக்காரி

வாழையிலை வயித்துக்காரி

வளையலளவு இடுப்புக்காரி

தித்திப்பான கவிதை புகாரி

வேந்தன் said...

யார் அந்த காரிகை?
புகாரியின் இதயம் புக்காரி


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

அன்புடன் புகாரி said...

>>>>யார் அந்த காரிகை?
புகாரியின் இதயம் புக்காரி<<<<

ஆழ்கடலளவு அன் புக்காரி
துவல் நெஞ்சின் தெம் புக்காரி
கனவிலும் விலகா வம் புக்காரி
காதல் கவிவிழி அம் புக்காரி

அன்புடன் புகாரி

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

காரியைக் காதலித்த அன்பு
பு காரியின் கவிதை கண்டு
காரிகளின் கண்ணழைப்பில்
காளையர் தமை இழந்து விடும்
காரியங்கள் கண்ணுற்று
காதலின் பெருமை கொண்டு
காரிய காரணத்தால் மகிழ்ந்திருந்தேன்

அன்புடன்
சக்தி

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அருமை