அழகு என்பது பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்றார்கள். அதைத் தொடர்ந்து புற அழகு ஒன்றுமே இல்லை என்பதுபோல் முடிக்கப்பட்டது ஒரு கருத்தாடலில்.
புற அழகு பொதுவானது, அதுதான் ஒருவருக்கான ஆரம்ப வரவேற்பு. தமிழ்ப்படங்களில் ஸ்ரேயா, அசின், ஜோதிகா, நயன்தாரா என்று கதாநாயகிகளாகப் போடுவது அதற்காகத்தான். கொஞ்சம் சுமார் ஃபிகரைப் போட்டால் படம் ஊத்திக்கும்.
வாழ்க்கைத் துணை, நட்பு, காதல் என்று வரும்போது மிக முக்கியம் இந்த புற அழகு அல்ல. அக அழகு. புற அழகு மாறலாம் சிதையலாம் ஏதும் ஆகலாம். அக அழகுதான் இனிமையான வாழ்க்கைக்கான அஸ்திவாரம்.
இது தொடர்பாக என் கவிதை ஒன்று மிகுந்த வரவேற்பைப் பெற்ற கவிதை. என் ஆழ்மனதிலிருந்து பொங்கி வந்த கவிதை:
அழகு
முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு
விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு
புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு
நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு
இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு
சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு
கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு
மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு
கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு
கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு
விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு
இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு
கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு
மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு
அப்படி அக அழகு மிகுந்தவர்களுக்கு புற அழகும் கூடி இருந்தால் அது மேலும் சிறப்பு.
கண்ணுக்கு லட்சணம் என்பதே பெண் பார்க்கும் படலத்தின் முதல் நோக்கம். பின் பெண்ணுக்கு லட்சணம் ஆன பண்பு குணம் எல்லாம் பரிசீலிக்கப்படும்.
ரத்தக்காட்டேரிபோல நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொடூரமான கண்களோடும் வானம் நோக்கிய மூக்கோடும் அகண்ட பெரிய வாயோடும் ஒரு பெண் இருந்தால் அவளும் சில கண்களுக்கு அழகுதான். ஆனால் பொது நிலைப்பாட்டில் புற அழகில் அவள் பாவம்தான். அவளுக்கான வரவேற்பு மிகமிக குறைவு.
அவளை ஒரு விமானத்திற்கான பணிப்பெண்ணாக நியமிக்க மாட்டார்கள். மாடலிங் செய்ய அழைக்க மாட்டார்கள். விளம்பரங்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள். வரவேற்புகளில் முன் நிறுத்த மாட்டார்கள். பொது நிகழ்ச்சிகளை எடுக்கும்போது சன் டீவி விஜய் டிவி போன்றவையெல்லாம் அடிக்கடி அடிக்கடி அவர்கள் பக்கமே திரும்பி சில நொடிகள் நொண்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்.
உலகப் பேரழகிகள் முதல் உள்ளூர் கரகாட்டக்காரிகள் வரை புற அழகு ரொம்பவே பேசும். கண்களின் ஆதிக்கம் மனிதர்களுக்கு அதிகத்திலும் அதிகம்.
ஒரு ஆடை எடுக்க கடைக்குப் போனாலும் புற அழகுதான் அங்கே முக்கியம். ஆயிரத்தெட்டு அழகு சாதனங்கள் நிரம்பி வழிவது புற அழகை மேம்படுத்தவே.
உலகப்புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் புற அழகை மேம்படுத்த என்னென்ன எழவெல்லாமோ செய்து தொலைத்தார்.
ஸ்ரீதேவி அழகாகத்தான் இருந்தார். ஆனாலும் ஓடிப்போய் மூக்கை ரிப்பேர் செய்துகொண்டு வந்தார். ஏன்?
ஓமகுச்சியையும் பிந்துகோஷையும் இங்கே புற அழகு இல்லை என்பதாகத்தான் உதாரணத்திற்கு எடுத்துவந்தார்கள். ஏன் ஓமகுச்சியும் எனக்கு அழகுதான் என்று ஒரு ‘உம்’ சேர்த்தார்கள்? கமலஹாச’னும்’ அழகுதான் என்று ஆரம்பத்திலெயே சொல்லவில்லை. அஜித்’தும்’ அழகுதான் என்று உதாரணம் கொண்டுவரவில்லை.
பிந்துகோஷும் அழகுதான் என்று ‘ உம்’ சேர்த்தவர்கள், நயந்தாராவும் அழகுதான் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம், ஏன் சொல்லவில்லை?
தாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மேம்பட்டவர்கள் உயர்ந்த பண்புடையவர்கள் என்று போலியாகக் காட்டிக்கொள்வதற்காகவா?
முக அழகும், நிற அழகும் அழகல்ல. அகத்தின் அழகே அழகு. எனக்கும் இந்த விஷயத்தில் கமலை பிடிப்பதில்லை என்று ஒருவர் சொல்கிறார். ஏன் சொல்கிறார்? கமலுக்கு அக அழகு இல்லையா? அவரின் சாதனைகளின் அழகைவிட உயர்ந்த அழகு ஒன்று உண்டா?
ஓமகுச்சியையும் கமலஹாசனையும் அக அழகைப்பார்த்தா இங்கே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்கிறார்கள்? இல்லையே ஓமகுச்சியின் அக அழகு யாருக்குத் தெரியும்? கமலின் அக அழகாவது ஓரளவுக்கு ஊடகங்கள் மூலம் தெரியும்.
கண்தானம் மட்டுமல்லாமல் தன் உடலையே தானம் செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கமல். ரசிகர்மன்றங்கள் அர்த்தமற்று ஆகக்கூடாதென்று கண் தானம் செய்வோராக அனைவரையும் ஊக்குவிப்பவர் கமல்.
அவர் அகத்தின் அழகு குறைவானதா?
தனக்கு வாய்ப்பளித்து வாழவைத்து ந்டிப்பு சொல்லித்தந்த பாலச்சந்தரை இன்னமும் உயர்ந்த மரியாதை தந்து பூஜிப்பவர் கமல்.
அவர் அகத்தின் அழகு குறைவானதா?
பண்ம் மட்டுமே பிரதானம் என்று நடிக்கவரும் திரையுலகில், சாதனையே பிரதான்ம் என்று புதிய முயற்சிகளில் இறங்கி சொந்த வீடும் இல்லாமல் அல்லாடுபவர் கமல்.
அவர் அகத்தின் அழகு குறைவானதா?
"ஜீன்ஸ் போட்ட கமலா காமேஷ்" , குஷ்பு பெரியார் போன்ற விமரிசனங்கள் நடிகை நடிகர்களுக்கு எப்போதும் வரக்கூடியதே. ஆனால் அந்த த்ரிஷா போன்றோரும் குஷ்பு பொன்றவர்களும்தான் கோவில் கட்டி கொண்டாடப்படுபவர்கள். ஒரு சிலரின் விமரிசனம் மோசமென்றால் 98% விமரிசனம் அழகில் நடிப்பில் வியந்து கனவுக் கன்னிகளாக்கிக்கொள்ளும் நிலைதான் என்பது பொய்யா?
கமலை பிடிப்பவரெல்லாம் அவர் அழகுக்காகத்தான் பிடிக்கிறது என்பது மிகத் தவறான எண்ணம்.. என்று மிக அழகாக ஒருவர் சொன்னார். கமலைப் பிடிப்பதற்கான மிக முக்கிய காரணம் எது?
அவர் திரையுலகுக்கு உலக நாய்கன். திறமைகளின் கூடாரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சலங்கை ஒலியைப் பார்த்துவிட்டு, இந்த முறையும் உனக்குத்தாண்டா விருது என்றார். அது!
இல்லாவிட்டால் கமலோடு அறிமுகமான அதன் பின் அறிமுகமான எத்தனையோ புற அழகால் மேம்பட்ட நடிகர்கள் அவரைப்போல் நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார்கள்.
கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி!

6 comments:
இது அக அழகு பற்றிய பதிவா இல்லை கமல் பற்றிய பதிவா புரியவில்லை. கமல் பற்றி என்றால் சாரி அவரை எல்லோரும் வேண்டிய அளவு புகழ்ந்து விட்டனர்.
எனக்கு நயன்தாராவும் அழகு , கமலும் அழகு என்று யாராவது உம் சேர்த்து சொன்னால் அவர்களை லூசு என்று மற்றவர் புரிந்து கொள்ளும் சாத்தியக்கூறு மிகவும் அதிகம்

நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்!!
/
அழகு
முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு
விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு
புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு
நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு
இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு
சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு
கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு
மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு
கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு
கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு
விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு
இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு
கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு
மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு/
அருமை
எங்கள் உலகநாயகனை நடிப்புக்காக மட்டுமல்ல அவரின் கண்தானம், இரத்த தானம், உடல் தானம் போன்ற நற்பணி மன்றத்தின் நற்செயல்களுக்காகவும் பலருக்கும் பிடிக்கும். அன்பே சிவம் படத்தில் தன் முகத்தின் வெளி அழகை அலங்கோலமாக்கி தன் அக அழகை வெளியே காட்டியவர்.
மனிதத்தை போற்றும், எதையும் யாருக்காகவும் என்று பார்க்காமல் மனதில் பட்டதைச்செய்யும் துணிச்சல்கார கமலின் அழகை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். கடவுள் இருந்தா நல்லாத்தான் இருக்கும்....என்ற வசனம் போல தமிழை ஆங்கிலம் கலந்து பேசுபவர்களை பல படங்களில் நையாண்டி செய்திருப்பார்....ஒரு நல்ல கலைஞன்.
Post a Comment