16 இதற்கும் புன்னகைதானாஉலகத்தையே தன் அகிம்சையால் வென்றெடுத்தார் அண்ணல் காந்தி
வன்முறையோ அவரைத் தன் தோட்டாக்களால் கொன்றுபோட்டது


*
முதன் முதலின் பத்திரிகையில் வெளியான என் கவிதை இதுதான்

*

இதற்கும் புன்னகைதானா?

*
அண்ணலே
மண்ணுயிர் யாவுக்கும்
பிறவிகள் உண்டாமே

உனக்கொரு
பிறவியில்லையா

தினம்
உன்னைத் தேடித்தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல்
போய்விட்டன

கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும்
பிறவிகளெடுத்து விட்டனர்

உனக்கு மட்டும்
பிறவியே இல்லையா

அண்ணலே
இன்று
என்னுடைய மனுவையும்
கேள்

நீ
பிறவி எடுக்காதே

கோட்சேக்களுக்கே சொந்தமாகிவிட்ட
இந்த மயாணத்தில்
நீ ஜெனித்ததுமே
உன் ரோஜா இதயத்தைச்
சல்லடைக் கண்களாய்த்
துளைக்க
துப்பாக்கிகள்
துடித்துக் கொண்டிருக்கின்றன

என்ன
இதற்கும் புன்னகைதானா?Comments

ஜெயபாரதன் said…
உள்ளத்தைத் தொடும் இரங்கற்பா புகாரி.

பிறவிப் பெருங்கடலில்
நெறியுடன் நீந்தி
நம்மை யெல்லாம்
கரை சேர்த்து விட்டுத்
தான் மூழ்கிப்
போன
கூன் கிழவர் !


ஜெயபாரதன்
அருமையான கவிதை! மகாத்மாவை நினைத்துப் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!
ஜெயபாரதன், தங்க முகுந்தன் இருவருக்கும் என் நன்றி
விஷ்ணு said…
மிக அருமை ஆசானே ..
நல்ல கவிதை நமது தேச பிதாவிற்கு ...

அன்புடன்
விஷ்ணு ..
பூங்குழலி said…
கோட்சேக்களுக்கே சொந்தமாகிவிட்ட
இந்த மயாணத்தில்
நீ ஜெனித்ததுமே உன் ரோஜா இதயத்தைச்
சல்லடைக் கண்களாய்த் துளைக்க
துப்பாக்கிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன

வெட்கப் படவேண்டும் இதற்காக ....

அருமையான கவிதை
துரை said…
உள்ளம் சுடும் தோட்டாக்கள்
வார்த்தை வடிவினில்...

வாழ்த்துகள் ஆசானுக்கு ...:)
கவி அருமை
வாழ்த்துக்கள் நண்பரே

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ