20161028 முகநூல்

**

குற்றம் ஒருபோதும் பாதுகாப்பாகாது
இன்னொரு பெரிய குற்றத்திற்கான
வேராகவே அது வளரும்

*

தெற்கு
தேய்க்கப்படுகிறது
ஆனாலும்
தெற்கே வாழ்கிறது

*

மரம்விட்டுப் பிரிந்த பின்னும்
இந்த இலைகளுக்குத்தான்
எத்தனை மகிழ்ச்சி
எத்தனைக் கவர்ச்சி
கனடிய
இலையுதிர் காலம்

*

எந்தப் பண்டிகை என்றாலும்
கொண்டாடப் போவது
வணிகர்கள்தாம்

*

பட்டாசுக்கு
நெருப்பு வைக்கும்
பிஞ்சு

பிஞ்சுக்கு
நெருப்பு வைக்கும்
பட்டாசு

வெற்றி யாருக்கு?

*

ஆமாம் உங்களுக்கென்ன RSS தான் இந்துக்கள் ISIS தான் முஸ்லிம் என்று சொல்லிப் பினாத்திக்கொள்வீர்கள். ஒருங்கிணைந்து இவர்களை உண்டு இல்லை என்று ஆக்க முன்வரமாட்டீர்கள். ஒளிந்தோடுவதே உங்கள் வேலை. கேட்டால் பகுத்தறிவு என்பீர்கள் ;-)
உண்மையான பகுத்தறிவு ஓரமாய் நின்று அழும், பாவம்!

*

எல்லாம் அந்நிய மோகம்தான். உள்ளூர்க் காரன் அரைவேக்காடு வெளிநாட்டுக்காரன் அதிமேதாவி என்பதும், தன் வேரின் பண்பாட்டையே நெருப்பு வைத்துக்கொளுத்தும் பாதையும் இவர்களுடையது. நல்ல இலக்கியக்காரனுக்கு வேர் தன் இலக்கியம்தான் தன் பண்பாடுதான், ஆனால் அவன் ஒரு பறவையாய் உலகமெங்கும் பறந்து ஒப்பீடு செய்து கொண்டு தன் கூட்டை நேசித்து மகிழ்வான் பெருமை பொங்க

*

Jeyaruban Mike Philip 

திரு.புகாரி! மதங்கடந்த மனிதாபிமானத்தைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். மதம் என்பது மனிதாபிமானமற்ற சூழலில் அவரவர்களால் அறிவுறுத்தப்பட்ட போதனை.

ஜெயரூபன், நீங்கள் கானலைக் கண்டு நிஜமென்று நம்புகின்றீர்கள்.
மார்க்கங்களின் நோக்கம் அறம் வளர்ப்பது மட்டுமே. அது பிழையானதா?

பிழைப்புவாதிகளும், ஆதிக்கவெறியர்களும், அரசியல் சில்லுண்டுகளும் மார்க்கத்தைப் பிழையாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

நெருப்பு என்பது புனிதமானது. அதை கூரையில் வைப்பவனின் கையே வக்கிரமானது! இல்லை என்று சொல்வீர்களா?

*

முட்டி முட்டி மோதி மோதி கருகக் கருகத் துளிர்விட்டுத் துளிர்விட்டு முளைப்பதென்ன சாதாரணமா?

ஆனாலும் ஏற்க முடியவில்லையே இந்த வைரப்பயிரை, ஏன்?
உச்சகட்ட ஊழல்?
பிச்சைக்காரர்களாய்ப் பார்க்கும் பணக்காரம்?

எழுந்தால்தானே கவிழ்க்க வருவாய் என்று தரையோடு தரையாய்க் கட்டிவைத்திருக்கும் அதீத அதிகாரம்?

எல்லாம் தொலையட்டும்
மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே அம்மா!

ஆனாலும் நீ நலம்பெற வேண்டும் எழுந்து நடமாடவேண்டும்!

நீ இல்லாததால் மட்டுமே இங்கே தங்கம் விளையப் போவதில்லை அதே ஊழல்தான் இன்னும் அதிக விளைச்சல் காணப் போகிறது!

*

>>> மதமாகி சகமனிதனை எதிரியாக பார்க்க வைக்கும் போது அதை விமர்சிப்பது தேவையாகி விடுகிறது ஐயா!<<<

அடுத்த ஊர்க்காரனையும் எதிரியாய்ப் பார்ப்பது மனித இயல்பு. அதுதான் ஒழிக்கப்பட வேண்டும். நான் அறிந்து எந்த மதமும் இன்னொரு மதத்தவனை அழிக்கவோ வெறுக்கவோ சொல்லவில்லை. அயலானை நேசி என்பது கிருத்தவம் முஸ்லிம் இரண்டிலும் சொல்லப்பட்டவை. புத்தரோ மகாவீரரோ எவரையும் எதிரியாகப் பார்க்கச் சொல்லவில்லை. மனித வக்கிரங்களை எதனோடு முடிச்சுப் போட்டாலும் அது கெட்டது என்றாகிவிடும்.
அரசியல் அவசியமானது அதனுள் வக்கிரம் புகும்போது அது கேடுகெட்டதாகிறது. சுத்தம் செய்ய வேண்டும் அதற்குக் காமராஜர்கள் தேவையே தவிர அரசியல் ஒழிப்பால் நாடு அனாதையாகிவிடும்!

*

மூடநம்பிக்கைகளிலிருந்து தனிமனிதன்தான் திருந்த வேண்டும்.
அவன் காதுகொடுக்கத் தயாராக இருந்தால் ஒரு கோடி மூடநம்பிக்கைகளைக் கொட்டிவிட்டு ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலிக்க ஆட்கள் நிறையவே உண்டு. அந்தப் பிழைப்பில் வாழ்ந்தவர்கள் அன்று ஏராளம். ஆனால் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் நம் கல்வி தந்த அறிவுக்கான சவால்.

*

ஆணுக்குக் கிடைக்கும் எல்லாமும் எல்லா வயதிலும்
எல்லாப் பெண்களுக்கும் கிடைத்தலே வேண்டும்!


Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே