இது உங்கள் கவிதை

எழுதும் வரைதான் என் கவிதை
எழுதி முடித்ததும்
அது உங்கள் கவிதை

நேசியுங்கள்
நிறைவான இடங்களில்
சுவாசியுங்கள்

கூண்டேற்றுங்கள்
குறையல்லவெனத் தெளிந்தால்
நியாயமருளுங்கள்

உமிழுங்கள்
உண்மையறிய நேருங்கால்
உயர்த்துங்கள்

அது
உங்கள் கவிதை

உங்களைப் போலவேதான் நானும்
ரசிக்கிறேன் ரசிகனாய்
விமரிசிக்கிறேன் விமரிசகனாய்

எனவே
வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்

நானெழுதிய
என் கவிதைகளின்
முதல் ரசிகனும்
முதல் விமரிசகனும்
நானல்லவா

7 comments:

புன்னகையரசன் said...

ரசிக்கத் தெரிந்தவன் மட்டுமே கவிஞன் ஆசான்...
அருமையான கவிதை...

விமர்சனத்திகுள் நான் வரவில்லை....
இரண்டாம் ரசிகன் நானாக இருக்கணும்....

vasu balaji said...

/விமர்சனத்திகுள் நான் வரவில்லை....
இரண்டாம் ரசிகன் நானாக இருக்கணும்..../

;)). நானும்.

சத்ரியன் said...

//வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்...//

புகாரி,

ம்ம்ம்ம்ம்ம்......உச்சம்.!

சிவா said...

கவிதை மிக அருமை ஆசான் ..

பூங்குழலி said...

எனவே
வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்

அருமையான கவிதை

பிரகாஷ் said...

உங்கள் கவிதையின் கருவைப்போல அதை கவிதையாய் அளித்த விதமும் மிகவும் அருமை
அன்பரே…

தமிழ் said...

/எழுதும் வரைதான் என் கவிதை
எழுதி முடித்ததும்
அது உங்கள் கவிதை/

அருமை