15

கண்ணுக்குக் கனவு வேண்டாமா
கனவுக்குச் சிறகு வேண்டாமா
சிறகுக்குக் கவிதை வேண்டாமா
கவிதைக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

நிலவுக்கு முகம் வேண்டாமா
முகத்துக்கு இதழ் வேண்டாமா
இதழுக்கு முத்தம் வேண்டாமா
முத்தத்துக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா


உயிருக்கு இளமை வேண்டாமா
இளமைக்குச் சுகம் வேண்டாமா
சுகத்துக்குத் தழுவல் வேண்டாமா
தழுவலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

ரசனைக்கு உணர்வு வேண்டாமா
உணர்வுக்கு உள்ளம் வேண்டாமா
உள்ளத்துக்குக் காதல் வேண்டாமா
காதலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

11 comments:

பிரியமுடன் பிரபு said...

நல்லாயிருக்கு

பிரியமுடன் பிரபு said...

எழுதிய கவிதைக்கு பாராட்டு வேண்டாமா???


பராட்டுக்கள்

இளங்கோவன் said...

அற்புதம் புகாரி அண்ணன்

அன்புடன் இளங்கோவன்

சா.கி.நடராஜன் said...

அன்பு புஹாரி கவிதை அருமை

நதியானவள் said...

அருமை...

துரை said...

டும் , டும்,டும் டும்,டும் டும் டும் டும்....

பூங்குழலி said...

டும் , டும்,டும் டும்,டும் டும் டும் டும்.......................................

????????????

சாந்தி said...

வேண் ”டும்” என்கிறார்..

சிவா said...

அனைத்துமே வேண்டும் ஆசான்

சிவா said...

அனைத்துமே வேண்டும் ஆசான்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை