கவிஞர் க.து.மு.இக்பால் சிங்கையைச் சேர்ந்த மூத்த கவிஞர்களுள் ஒருவர். ’அன்புடன்’ வழியாக எனக்கு அறிமுகம் ஆனார்.  ’காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ என்ற என் நூல் எங்கே கிடைக்கும் என்று கேட்டிருந்தார். ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு ஒரு வழக்கம். எந்த நூலைக் கையில் எடுத்தாலும் மனம் போன போக்கில் ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்புவார். அதை அப்படியே வாசிப்பார். அதுதான் அவர் பார்க்கும் ஒரு சோறு பதம். அப்படி பிரித்து வாசித்த அடுத்த நொடி அவர் எனக்கு எழுதிய மடல்தான் இது.

*
அன்புக் கவிஞர் புகாரி அவர்களே

உங்களின் “காதலிக்கிறேன் உன்னை எப்போதும் “ கிடைத்தது.. மிக்க நன்றி..
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள்போல என்ன வயது ஆனாலும் நாம் காதலில் காணாமல் போகிறோம்....

“ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள்
தொலைந்து போகலாம்..
ஆகாயமே தொலைந்து போகும்
நிகழ்வுதான்
காதல் “

கண்சிமிட்டும் உங்கள் கவிதை நட்சத்திரங்களிடம் நான் “தொலைந்து” போவேன் போல் தெரிகிறது

அருமை கவிஞரே !
வாழ்த்துக்களுடன்

க.து.மு.இக்பால்

உங்கள் கவிதைகளும் காதலிகளே..

டிசம்பர் 12, 2010

1 comment:

சத்ரியன் said...

அன்பன் புகாரி,

எங்கள் கவி ஆசான் திரு.க.து.மு.இக்பால் அவர்களே சொக்கிக் கிடக்கிறார் உங்கள் காதலில்... நாங்கள் என்னாவோம்...!