வாழ்த்து அட்டைகளையும்
வேண்டாப் பொருட்களையும்
வாங்கிக் குவிக்காதீர்...

காதலர் தினம்
வணிகர் தினம் ஆகிவிடும்

அணைப்புகளின் சூட்டில்
நனையலாம்
முத்தங்களின் ஈரத்தில்
காயலாம்

ஆனால்
இதயங்களை
நிரந்தரமாக்கிக்கொள்ளாமல்
நனைவதும் காய்வதுமாய்க்
கிடந்தால்...

காதலர் தினம்
காமுகர் தினம் ஆகிவிடும்

1 comment:

Jam@Ramanujam said...

முதல் பத்தியிலேயே எங்களை சிறை வைத்து விட்டீறே அருமை ...

காதல் உடை அல்ல
உயிர் ... சுவை