Showing posts with label * * * * * * * * * * For Tamils Info. Show all posts
Showing posts with label * * * * * * * * * * For Tamils Info. Show all posts

பொய் பொய்யல்ல பொய்தான் பொய்

பொய் என்பது கள்ளம் என்பதோடு தொடர்புடையது. அப்படியான ஒன்றையே பொய் என்று சொல்ல வேண்டும்.

அன்பே உன் நாணம்
கோடி நிலாக்களின்
ஊர்வலம்

என்று காதலன் காதலியைப் பார்த்துக் கவிதை சொல்லும்போது அது பொய்யல்ல. அவன் மன உணர்வுகளின் இலக்கிய வடிவம்.

ஓர் ஊரில் ஒரு ராசகுமாரி இருந்தாளாம் என்று ஆரம்பித்து கற்பனையின் உச்சம்வரை செல்லும் கதாசிரியன் பொய் சொல்லவில்லை. தன் கற்பனையை இலக்கியமாக்குகிறான்.

நீ ஒரு வாய் வாங்கிக்கலேன்னா நான் அந்த நிலாவுக்குக் கொடுத்துடுவேன் என்று ஒரு தாய் சொல்வது பொய்யல்ல. உணவு ஊட்டுவதற்கான அளவற்ற பாசம்.

காந்தியின் கதை முழுவதையும் மூன்று மணி நேரத்தில் ஒரு படமாக எடுத்துக் காட்டியது பொய்யல்ல. திரைக்கலை. காந்தி தூங்கி எழுந்திருக்கவே குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும், பிறகு எப்படி அவர் கதையை மூன்றுமணி நேரத்தில் சொல்லமுடியும்?

இதுபோன்ற பொய்கள் ஏராளம். அவை யாவுமே பொய்களல்ல.

உண்மையான பொய் என்பது கள்ளம் நிறைந்தது.

நீதான் என் உயிர், உன்னைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன். இல்லாவிட்டால் சத்தியமாய் நான் செத்துவிடுவேன், இது உன் மீது சத்தியம் ஆகவே இப்போ.... அவசரமா.... என்று கள்ள உள்ளத்தோடு காமம் தேடுகிறவன் சொல்வது பொய். சொல்லும்போதே அவன் அறிவான் அது பொய் என்று.

ஆகவே நோக்கமே ஒரு விசயத்தை பொய்யாக மாற்றுகிறது.

பெண்டாட்டியை ஏமாற்றுவதற்காக, அலுவலகத்தில் இன்று ஆடிட் என்று கூறுவது பொய்தான்.

இலக்கியத்திலும் கலையிலும் சொல்வதும் செய்வதும் பொய்யெனக்கொள்வது கற்பனையையும் உணர்வுகளையும் அவமதிப்பதன்றி வேறில்லை.
தமிழ் ஆங்கிலம் இந்தி தமிழ்நாடு இந்தியா

கடந்த வருடம் நான் டொராண்டோ ’பாங்க் ஆஃப் மான்றியலில்’ ஒன்றரை ஆண்டு ஒப்பந்தப் பணி செய்தேன். அங்கே எனக்கு ஒரு நண்பன் வாய்த்தான். அவன் ’கனடியன் டயரில்’என்னோடு வேலை செய்தவன்தான். மான்றியல் வங்கியிலும் என்னோடு வேலை செய்தான்.

அவன் பெயர் வருண், பஞ்சாப்காரன். பழகுவதற்கு இனிமையானவன்.  நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வோம். ஒரு நாள் ‘நீ நல்லே இருக்கே’ என்றான். 'வருண், என்னாச்சு எப்படித்தெரியும் உனக்குத் தமிழ்' என்றேன். எனக்குத் தமிழ் தெரியாது. இந்த வரி மட்டும்தான் தெரியும், நான் தமிழ்நாட்டில் 5 வருடங்கள் வேலை செய்தேன் என்றான்.

5 வருடங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இரண்டு வருடங்கள் கொச்சின் - கேரளாவிலும் வேலை செய்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் தமிழும் தெரியாது மலையாளமும் தெரியாது. இந்தி தெரியும் ஆங்கிலம் தெரியும். அவ்வளவுதான்.

அவன் பஞ்சாபி என்றாலும் டெல்லிதான் அவனது வாழ்விடம்.

அவன் இன்னொரு தகவலையும் சொன்னான். நான் மட்டுமல்ல, ஏராளமான வட இந்தியர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெகுகாலம் பணி செய்கிறார்கள் என்றான். ஏன் என்றேன். கணினித் துறையில் தென் இந்தியாதானே கொடி கட்டிப் பறக்கிறது என்றான். எனக்குக் கிடைத்த முதல் வேலையே தமிழ்நாட்டில்தான் என்றான்.

இந்தியா மட்டும் நேற்று பிறந்த மொழியான இந்தியை விட்டுவிட்டு பழம்பெரும் மொழியான தமிழை, நாடு முழுவதும்  கல்வி மொழியாய் ஆக்கி இருந்தால், எத்தனை நன்றாக இருக்கும்?

செம்மொழியான தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழி என்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு எத்தனை உயர்ந்துவிடும்?

அடர்ந்தியான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட சிந்து சமவெளி நாகரிகம் கண்ட ஒரு மொழியை ஏற்பதால் இந்தியாவின் பழம்பெரும் பண்பாடு கலாச்சார மெல்லாம் எப்படியெல்லாம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கும்?

என்றெல்லாம் பட்டியல் இட்டு, நான் ஆதங்கப்படவில்லை பேராசை கொள்ளவில்லை.

ஒரு பெரிய உண்மையைச் சாட்சியோடு உணர்ந்தேன்.

ஆங்கிலம் எங்கள் கல்வி மொழி அதுவே எங்கள் அலுவல் மொழி எனும்போது வருணுக்கும் எனக்கும்தான் எத்தனை நெருக்கம்? நான் தமிழ் அவன் பஞ்சாபி என்பது மறந்துபோய், அதற்காக அடித்துக்கொள்ளாமல் இந்தியர்களாய்த் தோள்சேர்ந்து நிற்கிறோம்.

நான் என் பள்ளியில் இருமொழி படித்தேன். ஆங்கிலம் + தமிழ்.
வருண் அவன் பள்ளியில் இருமொழி படித்தான். ஆங்கிலம் + இந்தி. ஒரு மலையாளி அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + மலையாளம். ஒரு தெலுங்கன் அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + தெலுங்கு.

இந்தியா செழுமையான பாரம்பரியங்களைக் கொண்டது. அதன் செழுமையில் மிகப் பெரும் செழுமை அதன் மொழி வளம். ஒவ்வொரு மொழியுமே உயர்ந்த மொழி. எந்த மொழியின் மீதும் எந்த மொழியும் ஏறி மிதித்து அழிக்கப்பார்க்கும் கேடு இந்தியாவை அழித்துவிடும்.

ஐரோப்பாவைப் போல தமிழ்நாடு தனி நாடு, கேரளா தனிநாடு, ஆந்திரா தனிநாடு, பஞ்சாப் தனிநாடு, வங்காளம் தனி நாடு. என்று அத்தனையும் தனித்தனி நாடுகளாய் இருந்தால்தான் அவரவர் தாய் மொழியைக் காப்பாற்ற அவர்களால் முடியும், அல்லாமல் சேர்ந்து ஒற்றுமையாய் ஒரே நாடாக இருந்தால் நடுவண் அரசின் இந்தி மொழி மாநில மொழிகளை அழித்துவிடும் என்றால் அங்கே மிகப் பெரும் பிழை இருக்கிறது. பிழையல்ல குற்றம் இருக்கிறது  குற்றமும் அல்ல கொடுங்கோல் இருக்கிறது.

உலகில் ஏராளமான மொழிகள் உண்டு. எல்லோரும் தாராளமாகப் படிக்கலாம். யார் தடுத்தார்? ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று நடுவண் அரசு இந்தி மொழியைத் தூக்கிக்கொண்டு வந்தால் தீப்பொறிதான் பறக்கும், இரத்த ஆறுதான் ஓடும், நாடுகள் வெட்டுப்பட்டுத் துண்டுகளாகித்தான் போகும்.

வெறுப்புதான் எகிறும் ஒற்றுமைதான் சுக்குநூறாகும்.

இதற்கு மேல் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

மொழி வெறியைக் கைவிடு இந்திய நடுவண் அரசே!

அன்புடன் புகாரி
அத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. நான் இப்படி பதில் எழுதி இட்டேன்.

அத்தான் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்த சொல். ஏனெனில் என் துவக்கப்பள்ளிப் பருவத்தில் வந்த திரைப்படங்களில் எல்லாம் மிக கவர்ச்சியாகக் கதாநாயகிகள் அத்தான் அத்தான் என்றுதான் தன் காதலனையும் கணவனையும் அழைப்பார்கள். அது அப்படியே நெஞ்சில் பசுமையாய்ப் படிந்துவிட்டது.

அத்தான் என்று சொல்லும்போது அது சாவித்திரியாய் இருக்கட்டும் அல்லது பத்மினியாய் இருக்கட்டும், ஒரு வெட்கம் காட்டுவார்கள் பாருங்கள், அது காணக் கண்கொள்ளாக் காட்சி. அப்படியான ஒரு வெட்கத்தை இன்று எந்தக் கதாநாயகியிடம் கண்டுவிடப் போகிறீர்கள்?

அத்தான்...என்னத்தான்... அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னிச் சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

இப்போது அந்த அத்தானைக் கைவிட்ட சைத்தான்கள்

காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை

என்று பாடுகின்றன

இப்போது பழைய பாடல்களையெல்லாம் அப்படியே ரீமிக்ஸ் என்ற பெயரில் புதிதாகக் கொண்டுவருகிறார்கள். இதோ  இனி வரப் போகும் அத்தான் பாட்டு

சைத்தான்
என்ன சைத்தான்
அவர் என்னை சைத்தான்
எப்படி சொல்வேன் சைத்தான்

ஆகவே அத்தான்தான் மருவி சைத்தான் என்று ஆனது நம் இன்றைய நாகரிக வாழ்வில்

பின் குறிப்பு:

அத்தான் சைத்தான் ஆவதும் தேவன் ஆவதும் பெண், பெண்ணாகத்தான் இருக்கிறாளா அல்லது பிசாசாக ஆகிவிட்டாளா என்பதிலும் இருக்கிறது

சங்க இலக்கியத்தில் சைத்தான் என்ற சொல் இருக்கிறதா என்று கூறுவீர்களா என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. எனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். குற்றம் குறை கண்டு சொல்லலாம் பிழையே இல்லை.

சாத்தான் என்பது ஹிப்ரு மொழிச் சொல். (Satan). அதன் பொருள் எதிரி. பழைய கிரேக்க மொழியிலும் சாத்தான்தான். அரபு மொழியில் அது சைத்தான். தமிழில் சாத்தான் என்றும் சைத்தான் என்றும் அழைக்கிறோம். சைத்தான் என்றால் பிசாசு என்று பலரும் புரிந்துகொள்கிறார்கள்.

யூதர்களின் நம்பிக்கையில் சாத்தான் என்பவன் எதிரி. இறைவனை வணங்குவதைத் தடுக்கின்ற துரோகி. பாவச் செயல்களைத் தூண்டுபவன்.  மனிதர்களைக் கடுமையாகச் சோதிக்க இறைவனையே தூண்டுபவன்.

கிருத்தவர்களுக்கு சாத்தான் என்பவன் இறைவனுக்கு அடிபணிய மறுக்கும் தீய சக்தி, கெட்டவைகளின் உற்பத்திக் கிடங்கு. இறுதிநாளுக்கான யுத்தத்தில் பங்குபெறும் மகா தீய சக்தி.

குர்-ஆனில் சைத்தானுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதன் பெயர் இப்லிஸ். நெருப்பால் உருவானவன். ஆதாம் என்ற முதல் மனிதனை வணங்கச் சொல்லி இறைவன் சைத்தானுக்கு ஆணை இடுகிறான். வணங்க மறுத்ததால் சைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் என்று குர்-ஆன் சொல்கிறது.

மனிதர்களை இறை வணக்கத்திலிருந்தும், அறச்செயல்களிலிருந்தும் திசை திருப்பும் தீய சக்திதான் சைத்தான். பண்டைய காலத்தில் சைத்தானை மக்கள் வணங்கிக்கொண்டிருந்தார்கள். அது கூடாது என்று குர்-ஆன் சாத்தானுக்குக் கல்லெறியச் சொல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் சாத்தானின் தூண்டுதல்களில் சிக்கித் தீயவழியில் சென்றுவிடாமல் நல்ல எண்ணங்களை வளர்த்து இறைவனின் வழி செல்ல வேண்டும் என்பதே இஸ்லாத்தின் மையக் கருத்து.

இறுதிநாளில் சைத்தான் நரக நெருப்பில் எறியப்பட்டு அழிக்கப்படுவான். இஸ்லாம்படி சைத்தான்தான் இறைவனை மறுத்த முதல் நாத்திகன். ஆகவே நாத்திகன் என்பவனை இஸ்லாம்படி இறைவன் இல்லை என்று சொல்பவன் என்பதைவிட இறைனின் சொல்லை மறுப்பவன் என்று சொல்வது சரியாக இருக்கும்.

இறைவனை மறுப்பவனும் இறைவன் இல்லை என்பவனும் கிட்டத்தட்ட ஒருவனே என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துதான்.

சங்க இலக்கியத்தில் சாத்தான் சைத்தான் என்ற சொற்கள் இருக்க வழியில்லை. மதங்களின் வரவுகளுக்குப் பின்னர்தான் இந்த நரகாசுரன், சனி, சைத்தான், சாத்தான் எல்லாம்.

அன்புடன் புகாரி





இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்துகொண்டே வந்திருக்கிறோம். வருகிறோம்.
குறிப்பாக சமீபகாலமாக வெகு வேகமாக இழந்திருக்கிறோம்
முப்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்றைய வாழ்வை ஒப்பிட்டால் தலை சுற்றுகிறது
உண்ணும் உணவு பொய் உடுத்தும் உடை பொய் காணும் காட்சி பொய் கேட்கும் குரல் பொய் ஆளும் ஆட்சி பொய் என்று எங்கும் எதிலும் பொய்மை நிரம்பி வழிகிறது
அன்றெல்லாம் ஒரு பத்திரிகையில் செய்தி ஒன்று வருகிறது என்றால் நாம் அதை அப்படியே நம்புவோம். இன்று நம்பமுடிவதில்லை
வீடியோக்கள் எல்லாம் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. எல்லோரும் கைதேர்ந்த பொய்யர்களாய் ஆகிவிட்டார்கள்.
மனிதன் பாதி எந்திரம் பாதி என்று ஒரு ஸ்மார்ட்போன் இல்லாதவன் மனிதனாகவே இல்லை இன்று
மனதும் மூளையும் கையடக்க ஸ்மார்ட்போனில் இருக்கிறது மனிதனிடம் இல்லை
நான் என்ன சிந்திக்க வேண்டும் நீ என்ன சிந்திக்க வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. நாம் எல்லோரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளாய் ஆனோம்
நாளை?
நீயும் எந்திரம்
நானும் எந்திரம்
நினைத்துப் பார்த்தால்
எல்லாம் எந்திரம்
அன்புடன் புகாரி
தமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும்?

நான் பல தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்றிருக்கிறேன், பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஈழத் தமிழர்கள் வாழும் கனடாவில் வாழ்கிறேன், தமிழகத் தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்கள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறேன்.

அங்கெல்லாம் நான் கண்ட ஓர் கசப்பான உண்மை இதுதான். நாற்பதைக் கடந்தவர்களே அவை நிறைய வீற்றிருப்பார்கள். இளைஞர்கள் மிக அரிதாகவே தென்படுவார்கள்.

ஏன்?

இளைஞர்களை ஏந்திக்கொள்ளாமல் தமிழ் நாளைய தமிழாய் ஆகுமா? வெல்லத் தமிழ் இனி வெல்லுமா? நாம் அடிப்படையில் ஏதோ தவறிழைக்கிறோம்.

தமிழை அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் இருக்கையில் அமர்த்துவது அவசியம்தான் மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிட செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் ஒன்று உண்டல்லவா?

இன்றெல்லாம் இரண்டரை வயதிலேயே பிஞ்சுகள் பள்ளிக்குச் சென்றுவிடுகின்றன. ஆனால் அங்கே அவர்கள் தமிழையா கற்கிறார்கள், தாய் மொழியோடா உறவாடுகிறார்கள்? அந்த அந்த நாட்டு மொழியையல்லவா கற்கிறார்கள்?

நாம் அதனைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் புலம்பெயர்ந்த நாட்டில் தமிழுக்கு ஏது எதிர்காலம்?

ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிலிருந்து தமிழ்க் குழந்தைகள் தமிழோடு அயல்நாடு வருவதும், சில வருடங்களில் அப்படியே தமிழறியாதவர்களாய் ஆவதும், பின் புதிய வரவுகள் வருவதும், பின் அவர்களும் விழுங்கப்படுவதும் என்ற அவல நிலையல்லவா நிகழ்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் என்ன முதியவர் - ’சீனியர் சிட்டிசன்’களுக்கான மொழியா?

நாம் முயன்றால் நம்மால் நாற்பது மில்லியன் ஐம்பது மில்லியன் டாலர்கள் என்று வசூலிக்க முடிகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன?

இலவசமாக பிஞ்சுகளுக்குத் தமிழ்ப்பள்ளிகள் அமைப்பதும், தமிழ் சொல்லித் தருவதும், சிறுவர் பராமரிப்புக் கூடம் நடத்துவதும்தானே?

புலம்பெயர்ந்த ஒவ்வொரு ஊரிலும், அப்படியான தமிழ்ப் பள்ளிகள் பல்கிப் பெருகுதல் வேண்டும். அதுவன்றி தமிழின் பெருமை பேசுவதும் தொன்மை பேசுவதும் வெட்டிப் பேச்சு என்றே இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாம் இங்கே ஆயிரம் காமராசர்களாய்ச் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நான் அயல்நாட்டில் எந்த ஊர் சென்றாலும் அங்கே முதலில் பாராட்டுவது தமிழ்ப்பள்ளி நடத்துவோரையும் அதன் ஆசிரியர்களையும்தான். அவர்களே தமிழுக்காகப் பாடுபடும் களப் பணியாளர்கள் என்பேன்.

அன்புடன் புகாரி

தமிழ் சமஸ்கிருதம்

பிறமொழிச் சொற்களில் தவிர்க்கமுடியாதனவற்றை மட்டும் திசைச்சொற்கள் என்று தமிழ்ப்படுத்திப் பயன்படுத்த தொல்காப்பியம் இலக்கணம் தந்தது.
அதற்காக தமிழ் சொற்கள் அனைத்தையும் அழித்துவிட்டு பிறமொழிச் சொற்களை மட்டும் வைத்துக்கொள்ளச் சொல்லவில்லை.
ஒரு பழந்தமிழ்ப் பாடலை வாசித்துப் பொருள் அறிய ஒரு தமிழன் தமிழ் ஆசிரியரையே நம்பி இருக்கிறான். இது தமிழனுக்கு அவமானம். இதற்குக் காரணம், நாம் தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திலிருந்து அழித்துவிட்டு பிறமொழிச் சொற்களைத் தமிழில் அதிக அளவில் ஏற்றுக்கொண்டதுதான்.
குறிப்பாக சம்ஸ்கிரதம் தமிழை அழிக்க அரும்பாடுபட்டிருக்கிறது

*
சிலப்பதிகாரத்திற்கு முன்பே வடமொழி தமிழுக்குள் வந்துவிட்டது.
ஞானம் என்பது சிலம்பில் இருப்பதால் அது தமிழ்ச் சொல் ஆகிவிடாது.
தமிழ்ச்சொல்லான அறிவு என்பதைவிட ஒரு துளியும் மேம்பட்டும் விடாது.
தமிழர்களே தமிழைத் தாழ்த்திப் பிறமொழியை உயர்த்துவதுதான் சாபக்கேடு!

*


*
>>>ஏன் சமஸ்கிருதம் அழிந்து தமிழ் இன்றும் வாழ்கிறது?<<<
ஒரு மொழி வாழவேண்டும் என்றால் அது மக்கள் மொழியாய் இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் மொழி. எளிய மக்களின் இனிய மொழி.

அந்த மொழியால்தான் அவர்கள் பல்துலக்குகிறார்கள் பசியாறுகிறார்கள் கற்பனை செய்கிறார்கள் காதல் கொள்கிறார்கள் மொத்தத்தில் வாழ்கிறார்கள்.
தமிழர்களின் மரபணுக்களில் தமிழ் மொழி பல்லாயிரம் வேர்கள் பரப்பி விரிந்து கிடக்கிறது.
சமஸ்கிருதம் மக்கள் மொழி இல்லை. அது தேவ மொழி என்று அவர்களால் சொல்லப்பட்ட தெய்வ மொழியாகிவிட்டது. அதுவே அதற்கான கேடாகவும் ஆகிவிட்டது.
சமஸ்கிருதத்தை மிக உயரமான இடத்தில் உயர்த்தி வைக்க வந்தேறிய வடவர்கள் அரும்பாடு பட்டார்கள். வந்து சேர்ந்த அந்த மொழியைக் கொண்டு மண்ணின் வாசம் வீசும் மண்ணோடு வேர்களாய் வாழும் மொழியான தமிழைச் சிதைக்க அழிக்க வேரில் தீவைக்க அரும்பாடு பட்டார்கள்.
ஆனால் அவர்கள் மிக உயரத்தில் ஏற்றிவைத்து உச்சிமுகர்ந்து தேவமொழி என்று உயர்த்திச் சொன்னதே அந்த மொழிக்கு மகா தீங்கினைச் செய்தது.
கோவில்களில், புரோகிதர்களிடம், பண்டிதர்களிடம் இருந்தது சமஸ்கிருதம், ஆனால் சாதாரண மக்களிடம் அது இல்லாமலேயே போனது.
நான் புலம்பெயர்ந்து வாழும் கனடாவுக்கும் ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்வேன், தமிழைக் காக்க வேண்டுமென்றால், அதன் சங்க இலக்கியங்களை உயர்ந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கானதாய் ஆக்குவதால் அது நிகழப் போவதில்லை.
மூன்று முக்கியமான விசயங்களால் மட்டுமே தமிழ் என்றென்றும் வாழும். அழிக்கவே முடியாததாய் இன்றுபோலவே நிலைக்கும்.
1. தமிழன் தமிழில் பேசவேண்டும்
2. தமிழன் தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
3. தமிழனின் வாழ்வாதாரம் 50 விழுக்காடாவது தமிழிலேயே இருக்க வேண்டும்

*
>>>இரண்டும் அடிப்படையில் தூரத்து உறவுமொழிகளே, இரண்டுக்கும் இடையில் பல சொற்கள் மயக்கமான முறையில் உள்ளன,அதன் மூலம் தமிழா சமஸ்கிரதமா என அறிவது கடினம், ஏனெனில் இரண்டும் ஆபிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதே. பேசப்பட்ட மொழிகளே. <<<
தமிழ் ஆப்பிரிக்க மொழியல்ல! அப்படியாயின் இன்று ஆப்பிரிக்காவில்தான் அதிகம் தமிழர்கள் இருக்க வேண்டும்.
தமிழ் பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மொழி. தம்மொழி தமிழ்மொழி!
அதை எத்தனைச் சுருக்கியும் அதைத் தென் இந்தியப் பரப்பைவிட்டு நீக்க முடியவில்லை.
தமிழிலிருந்து பிறந்த தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதம் தன் கைவரிசையை வெகுவாகக் காட்டி இருந்தாலும், தமிழ்நாட்டை அத்தனை தூரம் அழிக்க முடியவில்லை.
கடைசியாக சமஸ்கிரத்தை ஏற்றி எற்றி தமிழிலிருந்து மலையாளம் பிரித்தார்கள். அது நடந்தே ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.
சிலப்பதிகாரம் எழுதிய தமிழன் இன்றைய கேரளக்காரன்தானே?
சமஸ்கிருதம் வந்தேறிய மொழி. அதை வாழ்ந்த மொழியாம் தமிழோடு ஒப்பிடுதல் கூடாது.
மொழி என்ற நிலைப்பாட்டில் எல்லா மொழிகளையும் அள்ளி அணைக்கலாம். ஆனால் வேரில் தீ வைக்க வந்த மொழி என்றறிந்தால் அது இயலுமானதாக ஆவதில்லை.
சமஸ்கிருதம் ஈரானியர்களின் பெர்சியாவின் ஈரோப்பியர்களின் மொழி. அதற்கும் தமிழுக்கும் அனைத்து அமைப்பிலும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டென அறிஞர்கள் சொல்வார்கள்.
Sanskrit is a member of the Indo-Iranian subfamily of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Avestan and Old Persian.

*
>>>யப்பான் மற்றும் தாய்லாந்த மொழிகளில் திராவிட அல்லது தமிழின் கலப்பு இருக்கிறது என அறிஞர்கள் கூறுகிறார்கள். <<<
தமிழ், சைனாவிற்கும் ஜப்பானுக்கும் கொரியா தாய்லாந்து இந்தோநேசியா என்று பலநாடுகளுக்கும் பயணப்பட்ட மொழி.
அன்றைய தமிழர்கள், அறிவியல், வர்மக் கலை, சித்தமருத்துவம் என்று மிகவும் அறிவார்ந்தவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருந்தார்கள்.
ஆகவே தமிழ் தமிழன் செல்லும் இடமெல்லாம் பயணப்பட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சொல்கிறான் என்றால் அவன் எங்கெல்லாம் தமிழைக் கொண்டு சென்றிருப்பான் என்று சொல்லத் தேவையில்லைதானே?
*
Defend Snowden அன்பினிய முகமூடியாரே நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்கிறேன் ஆனால்
>>>தமிழும் இனி மெல்லச்சாகும் என்பது அசைக்க முடியாது இயங்கியல் விதியாகம்.<<<
இதை மட்டும் ஏற்பதற்கில்லை.

தமிழ்மீது பற்றால் மட்டுமே மகிழ்வோடு வாழும் மக்கள் இருக்கும்வரை அது மாண்டுபோகாது.
அப்படியான மக்கள் எந்நாளும் இருப்பார்கள் என்று நான் இன்னமும் காண்கிறேன்.
தமிழ் *போஜன* மொழியாக இல்லாவிட்டாலும் உயிரின் உரத்துக்கான மொழியாக இருப்பதால், தமிழர்கள் ஈரமுள்ளவர்களாக இருப்பதால் தமிழுக்கு இறப்பில்லை!

*

20160816

தேவி பாலா Padmanabhamn Sivathanupillai///
இதுபோன்ற நாகரீகமற்ற கேள்விகளை
நான் கடந்து போகவே விரும்புவேன்
ஆனால் இந்த கேள்விக்கு
நான் பதில் சொல்வதே சிறப்பாக
இருக்கும் நான் மதம் மாறல இந்துதான்
இந்துவாக கேட்கிறேன்
நம் மதத்தின் சிறப்புகளை சொல்லுங்கள்
நானும் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்
இன்னும் சாதீயால் அழுகி சீழ்பிடித்து போன
நமக்கு இன்னொருவரை கேக்கும் தகுதி இருக்கா?
தலையீல் இருந்து பிறந்தவன்
மூக்கில் இருந்து பிறந்தவன்
காலில் இருந்து பிறந்தவன் என்று
மனிதனை பிரித்து சாதீயால்
அடிமைப்படுத்தும் இழிவான செயலைதானே இன்று வரை செய்கிறிர்
எல்லா மனிதனும்
அதிலிருந்துதான் பிறக்கிறான்
இதிலென்ன தாழ்வு உயர்வு
இப்போது சில நாள் முன்பு கூட
சாதியால் ஒரு சமுகத்தை கோவில் உள்ளே விட மறுத்தீர்களே
இப்படிப்ட்ட மதம் எனக்கு ஏன்
நீயும் சேர்க்க மாட்டாய் பிறகு நான்
எந்த மதம் மாறினால் உங்களுக்கு
எங்க வலிக்கு
காலமெல்லாம்! ஏன் நான் அடிமையா இருக்கனும்
என் விருப்பம் எதை நோக்கி போவது
என்பது
முதலில் நம் மேல் படிந்திருக்கும்
சாக்காடை புத்தியை சீர் செய்து
பிறகு பிறரை கேள்வி கேட்பதே சரியாக
இருக்கும்
உங்கள் கேள்விகளை என்னிடமே
கேளுங்கள்
நான் சொல்கிறேன்
அன்புடன் புகாரி
நன்றி தேவிபாலா, இப்படியெல்லாம் நான் பிறமதங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்றுதான் அமைதியாக இருக்கிறேன்.
இஸ்லாம் சொல்கிறது அவன் வழி அவனுக்கு உன் வழி உனக்கு. நீ அவனை மதிக்கத்தான் வேண்டும் வெறுக்கக்கூடாது என்று.
அந்த இணக்கத்தை நான் விரும்புகிறேன்.
நீ நடக்கும் நடத்தையைக் கண்டு ஒருவன் உன் பின்னால் வந்தால் அதுதான் சிறப்பானது.
எவன் கையையும் பிடித்து நீ இழுத்துவிடாதே!
இதுதான் இஸ்லாத்தின் கட்டளை!

*
உலகெலாம் அறம் தழைக்க வேண்டும் அதற்கொரு வழி சொல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
யாருமே பதில் சொல்லமாட்டேன் என்கிறார்கள்!

*

////தாயையும் தந்தையையும்
இஸ்லாம் பெரிதும் மதித்துப் பாராட்டச் சொல்கிறது.
அவர்களுக்குச் சேவை செய்யச் சொல்கிறது.
ஆனால் அந்தத் தாய்க்கும் தந்தைக்குமே
அறம் என்ற பாடம் சொல்லியும் தருகிறது.///
>>>>>>>>
முகமதுநபிகள் என்ற
புனிதரை இந்த உலகிற்கு தந்தது
ஒருதாய்தானே
அன்பையும் அறத்தையும்
அவருக்கு போதித்து வளர்த்து
இந்த சமுகம் சீர்பட
வாழ்வெல்லாம் சேவை செய்த நபிகளை
உருவாக்கியது தாய் எனும் தெய்வம்
நானும் அதைதானே சொல்கிறேன்
எனக்கு சரியான பதில் தரவும்
>>>>>>>>>>
அன்பை அள்ளித் தருவதில்
தாய் நிகரில்லாதவள்
பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வதில்
அவளை விஞ்ச யாருமில்லை
தன் சுகங்கள் எல்லாம் இழப்பாள்
தன் உறக்கமெல்லாம் துறப்பாள்
தன் உயிரையும் தருவாள்
இப்படியாய் தாயின் பெருமையைப்
பேசிக்கொண்டே இருக்கலாம்
நாளும் பொழுதும்
அன்பு, பணிவிடை, தியாகம்
இந்த மூன்றின் மொத்த உருவம்தான்
தாய் என்று சுருக்கமாகவும் சொல்லலாம்
நாம் இங்கே அறம் பற்றிப் பேசுகிறோம்.
அறம் என்பது அன்பு அல்ல
அறம் என்பது பணிவிடை அல்ல
அறம் என்பது தியாகம் அல்ல
தாயே இல்லாத பிள்ளைகளுக்கும்
அன்பைத் தர வழிசெய்வது அறம்
பணிவிடை செய்ய வழிசெய்வது அறம்
தியாகம் செய்ய வழிசெய்வது அறம்
ஒரு தாய் சில பிள்ளைகளுக்குத்தான்
தாயாய் இருக்கிறாள்
ஆனால் அறம் என்பது
உலகின் அனைத்துக்
குழந்தைகளுக்கு மட்டுமல்ல
வயோதிகர்களுக்கும்
அனாதைகளுக்கும்
தூக்கியெறிப்பட்டவர்களுக்கும்
தாயாய் இருக்கிறது
அறம் மட்டும் மண்ணில் நிறைந்துவிட்டால்
ஒப்பில்லாத் தாயின் அன்பு
ஏதோ ஓர் மூலையில் இருக்கும்
யாரோ ஒருவருக்கும் பூரணமாய்க் கிடைக்கும்
பெற்ற குழந்தையைக்
குப்பைத் தொட்டியில் இடும் நிலை
ஒரு தாய்க்கு ஏன் வந்தது
உலகில் அறமின்றிப்
போனதால்தானே
வயிற்றில் இருப்பது
பெண்சிசு என்றறிந்ததும்
அதை கலைக்கும் நிலை
ஒரு தாய்க்கு ஏன் வந்தது
உலகில் அறமின்றிப்
போனதால்தானே
பெற்ற பிள்ளைகளைக்
கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு
தானும் மடியும் நிலை
ஒரு தாய்க்கு ஏன் வந்தது
உலகில் அறமின்றிப்
போனதால்தானே
ஒரு பிள்ளைக்கு
அன்பை அள்ளித் தரும் தாய்க்கு
இந்த உலகை மிகச் சரியாகச்
சொல்லித் தரத் தெரியுமா?
அதைச் செய்ய
தந்தையல்லவா தேவையிருக்கிறது
தாயும் தந்தையும் சேர்ந்து
சொல்லித் தருவனதானே
அன்பும் அறமும்
அந்தத் தாய்க்கும் தந்தைக்கும்
எந்த அளவுக்குத் தெரியுமோ
அந்த அளவுக்குத்தானே
அன்பையும் அறத்தையும்
சொல்லித்தரமுடியும்
உலக மக்கள் எல்லோரும்
நலம் வாழத் தேவையான
அறத்தைச் சொல்லித்தர
தாய்க்கும் தந்தைக்குமே
கல்வி தேவையில்லை
அந்தக் கல்வியைத் தருவதுதானே
மார்க்கத்தின் பெரும்பணி
நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்பதிலே என்றால்
இங்கே நிறைந்திருக்கும்
தீயவர்கள் எல்லோரும் தாயின்
வளர்ப்புதானே?
தாய் என்பவள்
உலகப் பொது அறம் அறியாது
தன் பிள்ளைக்கு சொல்லித் தரும்
எல்லாம் சுயநலம் கொண்டதல்லவா
முகம்மது நபி என்கிற புனிதரைத்
தந்த தாய்க்கு அன்புதான் தெரியும்
ஆனால் உலக அறம் தெரியுமா
தெரிந்திருந்தால்
அந்தத்தாய்தான்
இஸ்லாத்தைத் தந்திருப்பார்
ஆனால
ஒரு முக்கிய செய்தியை
நான் இங்கே கூறவேண்டும்
அண்ணல் நபிகளாரின் தந்தை
அவர் பிறக்கும் முன்னேயே
இறந்துவிட்டார்
அவரின் தாய்
நபிபெருமானாருக்கு
விபரம் தெரியும் முன்பேயே
மறைந்துவிட்டார்
அந்த நபிபெருமானருக்க்குத்தானே
மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும்
உலக அறத்தின் அவசியம்
என்னவென்று

*
உலக மக்கள் அனைவருக்குமான
ஒரு பொது அறம் வளர்க்க 
நாம் என்ன செய்யவேண்டும்

*
ஜெ. அப்துர் ரஹ்மான் ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம், ஹலால் என்பது இறைவன் அனுமதித்த ஒழுக்க முறைதானே
>>>>>>>>>>>
அருமையான விளக்கம் தந்தீர்கள். அற்புதமாய் இருக்கிறது.
அறம் என்பதே ஹலால் என்பது ஏகப்பல இஸ்லாமியர்களுக்கே தெரியாது.
உங்கள் விளக்கம் எல்லோரையும் சென்றடையட்டும்.
நன்றிகள் பல!

*
நம்மைச் செதுக்குவோம். இங்குள்ளோர் யாவரும் அவரவரை அவரவர் செதுக்கிக்கொள்வோம்.
அதற்கு நாம் அனைவருமே துணை நிற்போம்
முகநூல் முழுவதும் இந்த நற்பணி வளரட்டும் முதலில்...
அப்படியே இந்த உலகம் முழுவதிலும் நுழைவோம்...
ISIS RSS எல்லாம் களத்தில் நிற்கிறார்கள்
நல்லவர்கள் நாம் முடங்கிக்கிடப்பதா?
அறம் உயர்த்தி அன்பு போற்றி அறிவு வளர்த்து ஆயிரம் ISIS வந்தாலும் RSS வந்தாலும் அடக்கி அழித்து அகிலம் காப்போம்!

*
அன்றுமுதல் இன்று வரை அறம் எத்தனையோ அறிஞர்களால் வகுத்துக் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஏத்தனையோ மார்க்கங்களால் அழகாகச் சொல்லப்பட்டுவிட்டது.
இன்றைய கல்வி அறிஞர்களால் அவற்றைத் தொகுத்து பொதுவான ஒன்றைத் தேர்வு செய்து கல்வியாய்ப் போதிப்பது இயலாத காரியமா?
வெறும் வயிற்றுக்கே கல்வி வளர்த்து என்ன கண்டோம்?
வாழ்க்கைக்குக் கல்வி வளர்ப்பதல்லவா மிக மிக அவசியம்.
*
>>>>
என் கேள்வி மிக எளிதான சார்
ஏதேனும் ஒரு மதத்தை
பின் பற்றாமல்
ஒரு மனிதனால்
அறத்தோடு வாழ முடியாதா???
இதற்கு விடை தெரிந்தால் போதும்
தெளிவுறுவேன்
---தேவி பாலா
>>>>>
நீங்கள் எந்தக் கடவுளையும் நம்ப வேண்டாம்
கடவுள் மறுப்பாளராகவே இருங்கள்
அதில் யாதொரு பிழையுமில்லை
சில நட்டங்களே உண்டு
ஆனால் அதுபற்றிய கவலை
உங்களுக்கு இல்லை எனும் பட்சத்தில்
அவை உங்களைப் பொருத்தவரை
நட்டங்களே இல்லை
கடவுள் நம்பிக்கை என்பதை எவரும்
வலுக்கட்டாயமாக ஏற்கவும் முடியாது
விலக்கவும் முடியாது
இருந்தால் அது இருக்கவே செய்யும்
இல்லாவிட்டால் அது இல்லாமலேயே போகும்
ஆனால் ஆள்மனதில் இருந்து
கொள்கைகளுக்காக இல்லாமலிருந்தால்
நிச்சயம் ஒருநாள்
வெடித்துக்கொண்டு வெளிவரும்
அப்படியானவர்களில்
கண்ணதாசன் ஒருவர்
எம் ஜி ஆர் ஒருவர்
கலைஞரையும் நான் இதில்
சேர்த்துக்கொள்வேன்
அவர் உண்மை மறுப்பாளராக
இந்த விடயத்தில் இருக்கிறார்
என்றே எனக்குத் தோன்றுகிறது
எது எப்படியோ
இதுதான் முடிவு
நீங்கள் கடவுள் மறுப்பாளராகவே
தாரளமாக இருக்கலாம்
அடுத்து மதம்!
நீங்கள் எந்த மதத்திலும்
இருக்கத் தேவையில்லை
அப்படியாரும் உங்களைக்
கட்டாயப்படுத்தவும் முடியாது
மதத்துக்குள்ளேயே
இருந்துகொண்டு
மதமற்ற நிலையில் இருபோரே
என்னைப் பொறுத்தவரை
ஏராளமானோர்
ஆனால் அறம் போதித்து
வாழ்க்கையின் வழிகளைச் சொல்லித் தந்ததில்
மார்க்கங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு
வீதியில் சொல்லப்படும்
எதையும் கேட்காதீர்கள்
எல்லா மார்க்கங்களையும்
அதன் அடிப்படை நூல்களை எடுத்துப் படியுங்கள்
உங்கள் மனதுக்கு நெருக்கமானதாக
ஏதோ ஒரு மார்க்கம் இருக்க வழி இருக்கிறது
அந்த மார்க்கத்திலும்
உங்களுக்கு ஏற்புடையவைகளை மட்டும்
ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள்
நீங்கள் அந்த மார்க்கத்தினராய்
ஆகத் தேவையில்லை
ஆனால் ஒன்று
ஏதோ ஒன்றைக் கையில் எடுத்தபின்
எந்த நிலையிலும் மாறாமல்
அதை அப்படியே பின்பற்ற வேண்டும்
அந்த நிர்பந்தத்தைத் தரத்தான்
மார்க்கமும் இறைவனும்
அதை உங்களாலேயே
தானாகவே செய்யமுடியும் என்றால்
எப்போதும்..... செய்யமுடியும் என்றால்
மார்க்கமும் வேண்டாம் இறைவனும் வேண்டாம்
இயல்பிலேயே
உங்களிடம் அறம் இருப்பதால்
நீங்கள் சரியான பாதையைக் கண்டுபிடிப்பீர்கள்
அதே சமயம்
இப்போது உலக மக்கள்
அனைவரைப் பற்றியும் சிந்தியுங்கள்
எத்தனை வகை மக்கள்
எல்லோரும் உங்களைப் போலவா?
சிலருக்கு அறிவு உண்டு
சிலருக்கு இல்லை
சிலர் நல்லவர்
சிலர் மூர்க்கர்
அவர்களுக்கெல்லாம்
எதை எப்படிப் பரிந்துரைப்பது என்பதை
அறிய முயற்சி செய்யுங்கள்
எல்லோரும் மாறினால் மட்டுமே
நாம் வாழும் சூழல் நமக்கு அமையும்
மாறாதவர்களை என்ன செய்யலாம்
என்றும் சிந்திக்க மறக்காதீர்கள்
ஒற்றை மரம் தோப்பாகாது
தோப்புக்குள்
பாதுகாப்பாய் இருக்கும்
அழகிய கூட்டுக்குள்தான்
நம் உட்கிளி
நிம்மதியாய் உறங்கமுடியும்
அந்தத் தோப்புதான்
வன்முறையற்ற உலகம்

*
இறைவனுக்கு இணைவக்காதே என்கிறது இஸ்லாம்.
இணைவைப்பதன் மூலம் இறைவன் பலராய் பெருகுகிறான். பலகோடி கடவுளர்களாய் ஆகிறான். அறம் பொதுநிலை மாறி ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் மாறிநிற்கிறது. அதனால் வேற்றுமைகள் அதிகரிக்கிறது. வன்முறை எழுகிறது
இறைவன் ஒருவனே, அவன் உருவமில்லாதவன்.
இறைவன் மிகப் பெரியவன். அவனிலும் பெரிதென்று ஒன்றில்லை, ஏதுமில்லை, எதுவுமில்லை!
அளவற்ற அன்பும் நிகரற்ற கருணையுமே அவன் குணங்கள்.
இதுதான் இஸ்லாம் சொல்லும் இறைவனின் முக்கியமான வர்ணனை.
இனி அவரவர் விருப்பம்போல் ஆய்ந்து தெளிந்துகொள்ளவேண்டியது அவரவர் பணி.
இதில் முட்டிக்கொண்டு நிற்கவேண்டிய அவசியமே இல்லை.
அதன் பெயர்தான் இணக்கம்.
உன் வழி உனக்கு
என் வழி எனக்கு
எந்த வழி யாருக்குச் சரியெனப் படுகிறதோ அவ்வழி செல்ல எல்லோருக்கும் முழு உரிமை உண்டு.

*

நீ செய்யும் பாவங்கள் கணக்கெடுக்கப்படும். நீ செய்யும் புண்ணியங்கள் கணக்கெடுக்கப்படும். புண்ணியத்திலிருந்து பாவம் கழிக்கப்படும். புண்ணியம் மீந்தால் நீ சொர்க்கம் செல்வாய். பாவங்கள் மீந்தால் நீ நரகம் செல்வாய்-- இது இந்துமதம்
நீ செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டால் உன் பாவங்கள் எல்லாவற்றையும் ஈசா ஏற்றுக்கொள்வார். நீ எப்படியும் சொர்க்கம் போவாய் --இது கிருத்துவம்
நீ செய்யும் பாவங்கள் கணக்கெடுக்கப்படும். நீ செய்யும் புண்ணியங்கள் கணக்கெடுக்கப்படும். செய்த பாவத்துக்கு நரகமும், செய்த புண்ணியத்துக்கு சொர்க்கமும் விதிக்கப்படும் --இது இஸ்லாம்

*
உலக அறம் வகுத்துத் தந்த ஒவ்வொருவரும் தாயுமானவர் தந்தையுமானவர்.
அவர்களை வணங்குவதை விடுவிட்டு அவர்களின் சொல்கேட்டு வழிநடப்பது அவர்களுக்கு மிகப் பெரிய புகழையும் பெருமையையும் நன்றியையும் சேர்க்கும்.
அவர்களின் மனிதநேய சேவைக்கு அது ஒன்றே முழு அர்த்தம் தரும்.
கடவுள் இல்லை என்று சொல்லி பொது அறம் பேணி வாழும் வாழ்வும் உறுதியாக அறவாழ்வுதான்.
அறத்தை வலியுறுத்த கடவுள் நம்பிக்கை என்பது ஓர் ஆக்கப் பூர்வமான பெருஞ் சக்தி.
அந்தச் சக்திக்கே அவசியமில்லை, துளியும் மாறாமல் நாங்கள் அறவாழ்வு வாழ்வோம் என்றால், வாழ்ந்து காட்டினால் அதில் துளிப்பிழையும் இல்லை!

*
வேந்தன் அரசு >>>எனக்கு என ஒரு அறம் உண்டு,<<<
அது எல்லோருக்கும் நன்மை பயப்பதாய் இருந்தால் அதுவே போதும்.
ஆனால் உங்களிடம் இணக்கம் என்ற ஒரு மிகப்பெரிய முக்கியமான அறம் இல்லை
ஆகவே உங்கள் அறம் குறைபட்டது.
குறையுடை அறமுடையவர் என்று சொல்வதைவிட உங்களிடம் அறம் இல்லை என்றே சொல்லிவிடலாம் !

*
ஒரு கவிஞன் 
தன் மனதுக்குத் தரும் 
அக்கறையை 
உடலுக்குத் தரமுடியாத
மனதையே பெற்றிருக்கிறான்
*
குடித்துவிட்டுக் காரோட்டாதே
குடித்துவிட்டுக் கவிதை எழுதாதே

*
ஒவ்வொருவர் கையிலும் உயிர் என்னும் அற்புதம் தரப்பட்டுள்ளது.
அதை உள்ளம் என்னும் சிறகுகளில் ஏற்றி உயரே உயரே பறப்பது மட்டும் பேரானந்தம் அல்ல
உடல் என்னும் கூட்டுக்குள் உறங்க வைப்பதும் பேரானந்தம்தான்
ஒன்றைப் பற்றி மற்றதைக் கைவிட்டவர் உயிரிருந்தும் உடலற்றவராகவோ அல்லது உடலிருந்தும் உயிரற்றவராகவோ ஆவார்

*
தன் உயிரைக்
கோப்பையில் நிரப்பிக்
குடிக்கிறான்

*
பொது அறம் 
உலகெங்கும் நிறைந்தால்
தானே அறியாத் தற்கொலைகள் 
குறையும்

*
கலைஞரின் இலக்கியத்திற்கு நான் பெரும் ரசிகன். மிகச் சிறுவயதிலேயே அவரின் எழுத்தினுள்ளும் குரலினுள்ளும் என்னை வெகுவாக இழுத்து அணைத்துக்கொண்டார்.
ஆனால் கலைஞரின் அரசியல் அறிவிற்கு நான் ரசிகன் என்றாலும் கலைஞரின் அரசியல் அட்டூலியங்களுக்கு நான் முதல் எதிரி.
கவிஞர்களின் முகவரிகளில் கலைஞரின் பங்கு நிறைய உண்டு

*





20160813

Abdul Sukkur இன்றைய நெருக்கடியே பொய்களை பிரச்சாரங்கள் வழி
உண்மையாக்கி மக்களை ஏமாற்றுவது தான்.
>>>>>>>>>>>>>
பொய் ஒருக்காலும் உண்மை ஆகாது.
முட்டாள்கள் நிறைந்திருந்தால், பொய்தான் எப்போதும் உண்மையாய் ஆகும்.
உண்மை, அறிவோடு அழுதுகொண்டு வெளியேதான் நிற்கும்.

*
Padmanabhamn Sivathanupillai நீங்கள் சொல்லும் கடவுளை வணங்காதவனெல்லாம்
ஊங்களுக்கு காபிருகளா.?
>>>>>>>>>>>>>>>>>>>>
காபிர் என்று வேற்றுமொழியில் சொல்லிப் பார்க்காமல் தமிழிலேயே சொல்லிப் பாருங்கள் ”கடவுளை வணங்காதவர்கள்” என்று. பிழை தெரிந்தால் சுட்டுங்கள் !
மொழியில் என்ன இருக்கிறது.
நாத்திகன் என்றால் என்ன பொருள் தமிழில்?
(நாஸ்திகன்)
நாசம் செய்பவன் என்று பொருள்.
காபிர் என்றால் நாசம் செய்பவன் என்று பொருள் அல்ல. கடவுளை மறுப்பவன் என்று மட்டுமே பொருள்.

*
Saravanan Mds கடவுள் நம்பாதவனா மசூதிய இடித்தான்.. சகோ இருப்பதை விட்டு பறப்பதை தேடுங்கள் அது உங்கள் விருப்பம்... கடவுள் என்பது கடந்து போ உள்ளே என்பதே... எந்த கடவுள் மருப்பாளனும் குண்டு வைக்கல கொலை பன்னல...
>>>>>>>>>>>>>>>
ஆமாம் கடவுளை நம்பாவதன் தான் மசூதியை இடித்தான்.
அவனுடையது உண்மையான கடவுள் நம்பிக்கை இல்லை.
அவன் கடவுள் மறுப்பாளனும் இல்லை.
கடவுள் மறுப்பாளனுக்கு கோவில் மாதாகோவில் மசூதிகளை இடிப்பதில் விருப்பமில்லை.
அவற்றை எல்லாம் இடிப்பவன், மூர்க்கன், முரடன், முட்டாள், வக்கிரக் காரன், சுயநலவாதி, கடவுள் பக்தி இல்லாதவன், மார்க்கம் சொல்லும் அறம் இல்லாதவன்.
ஒரு சொல்லில் சொல்வதானால் அவன் மனிதனே அல்ல.
அவன் மக்களாட்சி அரசால் முற்று முழுதாக அழிக்கப்படவேண்டியவன்

*

20160812

Mohamed Raja
>>>>>>>>>>>>>>>
வணக்கம் என்ற சொல் பண்டைய தமிழ் மரபில் ஒருவரை வாழ்த்துவதற்காகப் பயன்படுத்த வில்லை யென்றே கருதுகிறேன்.
இந்த வணக்கத்தை மேல்மட்டத்தினர்களிடம், சாமியார்கள், சங்கராச்சாரியார்களிடம் நீங்கள் கூறினால் அதே பதில் உங்களுக்குத் திருப்பிக் கிடைக்குமா..?
நாம் அந்தச் சொல்லை எப்படிப் பார்க்கிறோம்..!
வணக்கமும், வழிபாடும் இறைவனுக்கு மட்டுமே என்று நம்புகிறோம்.
நான் உனக்கு முழுவதுமாகப் கட்டுப்படுகிறேன் என்பது பொருள்.
இறைவனை -கடவுளை வணங்குவதற்குப் பயன் படுத்தும் இந்த வார்த்தையை தவறுகள் செய்யக்கூடிய மனிதனுக்குப் பயன்படுத்தலாமா...?
<<<<<<<<<<<
ஆங்கிலத்தில் இதற்கு ஓர் அழகான உதாரணம் இருக்கிறது. ஏன் இதற்கு ஆங்கிலத்தை நாடுகிறேன் என்றால் அது ஆங்கிலமாக அல்லாமல் தமிழாகி இன்னும் பிறமொழிகளாகி சில நூற்றாண்டுகளே ஆகிவிட்டன 
ஐ லவ் யூ!
நான் என் தாயைப் பார்த்து ஐ லவ் யூ அம்மா என்கிறேன்
என் காதலியைப் பார்த்து ஐ லவ் யூ டா என்கிறேன்
என் மனைவியைப் பார்த்து ஐ லவ் யூ பொன்ஸ் என்கிறேன்
என் மகளைப் பார்த்து ஐ லவ்யூ செல்லம் என்கிறேன்
என் வீட்டுப் பூனையைப் பார்த்து ஐ லவ் யூ குட்டி என்கிறேன்
பக்கத்து வீட்டுப் பொடியனைப் பார்த்து ஐ லவ் யூ நாட்டி என்கிறேன்
கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து ஐ லவ் யூ இடியட் என்று சொல்கிறேன்
இது எல்லாவற்றுக்குமே பொருள் ஒன்றுதானா?

*
கடவுள் இருக்கிறார் என்பவனை விட்டுவிடுங்கள்
கடவுள் இல்லை என்பவனையும் விட்டுவிடுங்கள்
நான் தான் கடவுள் என்பவனை உறித்து ஊறுகாய்ப் போட்டுவிடுங்கள் 
*

உன் ஜீவன்
உன்னை மீண்டும் தேடி வந்தால்
அந்த ஜீவன்
ஏன் வந்தது என்று
அந்த ஜீவனே 
செப்பும்வரைக் காத்திரு
உன்
நெஞ்சப் பெருக்கையும்
நெகிழ்ச்சி ஊற்றையும்
குவித்துக் கொண்டாடி
குத்தாட்டம் போட்டுவிடாதே
உனக்குத் தெரியாது
உன் ஜீவன்
என்று நீ நினைப்பது
உண்மையில்
உன் ஜீவனே அல்ல என்பது

*
தமிழன் அதீத உணர்வுகளால் ஆக்கப்பட்டவன்.
அதுவே அவனுக்கான சாபமாய் ஆனதுதான் பெருங் கொடுமை.
தலைவன் தலைவன் என்று கண்ட கண்ட நாய்களையும் உச்சத்தில் ஏற்றி எந்தக் கேட்டுக்கேள்வியும் இல்லாமல் அவன் சகதிப் பாதத்தை உதடுகளால் கழுவி முத்தமிட்டு கடைசிவரை தலைவனுக்கான எந்த எதிர்மறை ஆய்வையும் ஏற்காமல் விசுவாசமாகவே இருந்து மடிந்துபோவான்.
தலைவனோ இவன் பொண்டாட்டியைக் கூட விட்டுவைக்கமாட்டான்.
இது இந்தியத் தமிழன், இலங்கைத் தமிழன் மலேசியத் தமிழன் என்ற எந்த பாகுபாடுமின்றி நிகழ்ந்தேறும் கொடுங் கேடு.

*
அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் !!!
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்
38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்

*
கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார் அவர் உங்களிலும் நிறைந்திருக்கிறார் என்பது வேறு நான் தான் கடவுள் என்பது வேறு.
ஏதாவது புரிகிறதா?

*

அறமிலா மனிதன் 
பாழ்பன்றிக்குடற்புழு
*
நிறுவனங்களும்
நிராயுதபாணிகளும்
மொத்தமாய் விழுங்குவதைச்
சுத்தமாய் அறியாமல்
வாழ்க்கையை விற்று
வேண்டாத வசதிகள்
சமூகக் கௌரவங்களாய்
வெட்டிச் செலவுப் பழக்கத்தை உருவாக்கி
தொடர் கடனாளிகளாய் ஆக்கி
பொருள் குவிக்கும் சக்திகள்
உலகை மயாண வெளிகளாக்கும்
நாசங்கள் மோசங்கள் துவேசங்கள்
அறமற்ற நிறுவனங்கள்

*
சாதியப் பாகுபாடுகளில்
இந்த நூற்றாண்டிலும்
நெளியும் ஒருவனை
எங்கு கண்டாலும்

மெய்யாக
உண்மையாக
நிச்சயமாக
சத்தியமாக
நீ
மனித சாதியே
இல்லை
கொடு நஞ்சே
என்று
கறுத்துச் சிறுத்த
அவன் முகத்தில்
காரிக் காரி உமிழ்வோம்
மனிதம் வளர்ப்போம்
*
>>>மக்கள் எவரும் நான்தான் கடவுள் என்பவரை ஒருபோதும் நம்புவதில்லை
மாறாக நான் தான் கடவுளின் நெருங்கிய சேவகன் எனும் போது அவரை மலைபோல நம்பத் துவங்குகிறார்கள் ஏமாறுகிறார்கள்>>>>
அவனையும் நம்புகிறார்கள் இவனையும் நம்புகிறார்கள். நம்பாமலா அவன்கள் இத்தனை ஆட்டம் போடுகிறான்கள்?
அதனால்தான் மார்க்கம் தெளிவாகச் சொல்கிறது, இறைவனுக்கும் உனக்கும் இடையில் எவனும் இல்லை என்று.

*

இறைவனுக்கும் 
உனக்கும் இடையில் 
எவனும் இல்லை

*
அறிவாளிகள் உயர்ந்தவர்கள் என்றில்லை
ஏனெனில் அறிவு இருவகைப்படும்
ஒன்று அறம்போற்றிச் செயல்படும் நல்ல அறிவு
மற்றது அழுக்குநோக்கிச் செயல்படும் கெட்ட அறிவு
எல்லாம் அறிவுதான்

*

இந்தியா
அது நம் 
சாதி 
மத 
இன 
மொழி
சகிப்பின்
வெற்றி

*
கொலைவெறி வியாபாரம்
இந்தியாவில் மருத்துவம்

*

மார்க்கங்கள் வேறு வேறு அடையாளங்களைத் தருவதில்லை. அறம்கொண்ட மனிதன் இவன் என்ற ஒற்றை அடையாளத்தைத்தான் தருகிறது!

*
பிறமொழிப் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுத வசதி வேண்டும் என்று நான் தமிழ் எழுத்துக்களுக்குள் கோடுகளைக் கொண்டுவருவதைத் துளியும் ஏற்கவில்லை.
ஆனால் இருக்கும் ஆய்த எழுத்தையும் ஐந்து கிரந்த எழுத்தையும் பெயர்ச் சொற்களில் மட்டும் அதுவும் கட்டாயம் கருதி மட்டும் பயன்படுத்துவேன்.
இப்படியே எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் எழுதிச் செல்வதையும் கண்டிருக்கிறேன்.
தனித்தமிழ் போற்றும் பாரதிதாசனின் பெயரில் பாரதியும் தமிழில்லை தாசனும் தமிழில்லை. ஆனால் அவர் அதுபற்றிக் கவலையுற்றதாகத் தெரியவில்லை.
தமிழராய் இருப்போம் தமிழ் போற்றுவோம் அதேசமயம் வளையத் தெரியாத தமிழராய் ஆகவும் மட்டோம்

*
தெரியும், நிச்சயமாக நீங்கள் ஜிகாத்தை பிழையாகத்தான் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று.
அது உங்கள் தவறு இல்லை.
உங்களுக்கு அது அப்படி மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. யார் சொன்னார்கள் என்று அலசத் தேவையில்லை.
ஆனால் எது சரியோ அந்த வழியில் சென்று பார்ப்போமா?
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டும் என்றால் நீங்கள் யாரைக்கேட்பீர்கள்?
நான் ஒரு நல்ல தரமான அகராதியை எடுத்துப் பார்ப்பேன். போதாதென்று இன்னும் சில அகராதிகளையும் பார்த்துத் தெளிவேன்.
என்றால் நீங்கள் ஜிகாத் என்பதன் பொருள் என்னவென்று அறிய என்ன செய்யவேண்டும்?
கள்ளுக்கடைக்குச் சென்று கற்பூரம் கேட்பது சரியா?

*
>>>கட்டுமரம் என்று சொல்லிக்கொள்ள ஆங்கிலேயன் மெனக்கெட வில்லை.
அவனுடைய ஒலிஉருவில் கட்டுமரான்
என்று சொல்லிக்கொண்ணடான்.<<<
ஒரு முட்டாப்பயலையா இதற்கு உதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
வெள்ளையன் சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்ற நம் அடைமைத்தனம் எப்போதுதான் ஒழியுமோ தெரியலயே பகவானே 
நான் தமிழன். என் தமிழ் இந்தத் தமிழ்த்தாக தமிழனுக்கு இனிப்பாய் இயல்பாய் சிறப்பாய் வளையும்.

*
உடையக் கூடாது, பண்போடு நாணலாய் வளைய வேண்டும்.
தமிழன் மூன்று விசயங்களில்தான் வளையவே கூடாது. அது
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில்

2. பேசுவது உயிர் பிரியும்போதும் தமிழ் என்பதில்
3. அறம் என்பதே வீரம் என்பதில்
*
விருந்தினர் வருகிறார் என்பதற்காக அவலங்களை மறைத்துத் திரைச் சீலைகள் இடுவது கள்ளத்தனம் அல்ல விருந்தோம்பல் என்ற உயர் செயல்.

*
மூடப்பய, தமிழ்நாடு வந்தான்
தஞ்சாவூரைத் டேஞ்சூர் என்றான்
மதுரையை மெஜ்ரா என்றான்
தூத்துக்குடியைத் டூட்டிக்கோரின் என்றான்
தூ என்று துப்புகிறேன் அதை நினைக்க்கும் போதெல்லாம்.
அப்படி ஒரு ஈனச் செயலை நான் எந்த மொழிக்காரருக்கும் செய்யவே மாட்டேன்.
என் அன்புத் தமிழ் மொழியை எவரின் பெயர்ச்சொற்களுக்காகவும் அழகாக வளைப்பேன்

*

>>>அடயாளங்கள் என்பதே இஸ்லாம் கிருத்துவம் சைவம் வைணவம் என்பதாக சொன்னேண்.<<<
அவை நூல்களைப் போன்றன. அவை தரும் அறிவுதான் அடையாளம் ஆகும்.
அவை தரும் அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அதன் பெயர் ***அறம்***

*
>>எனக்கு கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் மமுட்டாள்கள்தான்.<<<<
உங்களின் இந்த வெறி தனிந்து நீங்களும் மனிதநேயம் கொண்ட மனிதராய் மாறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இப்போதைக்கு உங்கள் உள்ளே இருக்கும் கசடுகளை எல்லாம் கொட்டித் தீருங்கள்.
தீர்ந்து முடித்ததும் நல்வழிக்கு வந்துவிடுங்கள்.
வாழ்த்துக்கள்!

*
பிடிக்கவில்லை என்பதால்
வேண்டாம் என்று சொல்லவில்லை
பிடித்திருப்பதால்
வேண்டாம் என்று சொன்னேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*
காபிர் என்றால் கெட்ட வார்த்தை இல்லை. கடவுள் மறுப்பாளர் அதாவது ஏதிஸ்ட் என்று பொருள்.
அல்லது Non-Muslim என்றும் சொல்லலாம்.
ஹராம் என்றால் அறமற்றது, கூடாதது, தடுக்கப்பட்டது, தகாதது என்று பொருள்.
இனி இந்த வார்த்தைகளை யார் எப்படிப் பயன்படுத்தினார்களோ அவர்களின் தரம் அதுதான்.
ஆனால் மொழியில் சொல்லில் மார்க்கத்தில் பிழையில்லை!

*
தமிழிக்குச் செய்யும் கேடுகளில் முதன்மையானதை விட்டுவிட்டு அவசியமில்லாததைக் கையில் எடுக்கிறீர்கள்.
தமிழுக்குக் கேடுகள்:
1. தமிழன் தமிழில் பேசாதது
2. தமிழன் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாதது
3. தமிழனின் வாழ்வாதாரம் அவன் மொழியில் இல்லாதது

*









20160805


Padmanabhamn Sivathanupillai
வன்முறையை அவசியமென நியாயப்படுத்துவதால் மட்டுமே அது வாழ்கிறது.
சரியாச்சொன்னீங்க!
ஆதாயம் தேடுபவர்களால் அது வளர்க்கப்படுகிறது
அரசியல் வெற்றிக்காக அது உருவாக்கப்படுகிறது
ஊழலை மறைப்பதற்காக அது பயன்படுத்தப்படுகிறது
சொந்த வெறுப்பைப் பொதுவெறுப்பாய் ஆக்குவதற்காக அது கையாளப்படுகிறது
சுயநலத்தை மூடி மறைக்க அது எடுத்துக்கொள்ளப்படுகிறது
தான் செய்த பிழைகளைத் திசைதிருப்பிவிட அது தூண்டப்படுகிறது
பாதுகாப்பின்மை காரணமாக அது வெடித்துப் பரவுகிறது
ஒடுக்கப்படுவதிலிருந்து அது துளிர் விடுகிறது
தீண்டாமையால் அது எழுந்து எரிகிறது
ஆண்டான் அடிமை நிலைப்பாட்டால் அது நியாயமானதாய் ஆக்கப்படுகிறது
அதிகாரத்திற்கு எதிராக அது முளைக்கப்ப் பார்க்கிறது
அறிவில்லாதவர்களிடம் அன்பும் இல்லாவிட்டால் அதுதான் வழமையாகிறது
இன்னும் எத்தனையோ சொல்லலாம்..... சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
ஆனால் உண்மை அன்பு, அறம், அறிவு இம்மூன்றும் நிலைபெற்றிருந்தால் வன்முறை புதைக்கப்பட்ட இடத்தில் ரோஜாக்கள் பூக்கும்

*

Padmanabhamn Sivathanupillai
>>>>நல்லிணக்கமென்றால்
எப்படி எதனோடு யார்
யாரோடூ என்பதையெல்லாமறியஆவல்<<<<
உங்களோடும் என்னோடும் என்று முதலில் தொடங்குங்கள்.
எவரை சந்திக்கிறீர்களோ அத்தனை பேருடனும் என்று இறுதியாய் உறுதிகொள்ளுங்கள்

*
Kulam Rasool
------------------------------
//காட்டுமிராண்டிக் காலங்களில் மனிதர்களை நல்வழிப்படுத்த மகான்கள் தோன்றினார்கள். வாழ்க்கையை வகுத்துக்கொடுத்தார்கள்.//
அந்த மகான்களில் எத்துனை பேர் கடவுள் மறுப்பாளர்கள். யாராவது அறியத்தருவார்காளா? இடையில் வந்தது தானே இந்த தீய கொள்கை.
-----------------------------
தீய கொள்கை என்று சொல்லத் தேவையில்லை. அவரவர் வழி அவரவர்க்கு. யாருக்கும் தீங்கு இழைக்காத எந்தக் கொள்கையும் தீயகொள்கை அல்ல.

*
நம் வீட்டுப் பிரச்சினை 
சிறிதென்றும் 
அடுத்தவர் வீட்டுப் பிரச்சினை 
பெரிதென்றும் 
சொல்வதைவிட 
ஒரு துடைப்பத்தை எடுத்து
நம் அறையை
நம் வீட்டை
நம் ஊரை
நம் நாட்டைச்
சுத்தப்படித்தினாலே
போதுமானது மட்டுமல்ல
அவசியமானதும் கூட

*
புறாக்கள் கழுகுகள் என்றில்லை.... ஜாதி பிரிக்க விரும்புபவர்கள் எப்படியும் பிரிப்பார்கள். புறாக்கள் மட்டும் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.
அதில் எப்படி ஜாதி பிரிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
முதலில் ஜாதிப் புறா என்று ஒரு ஜாதி பிரிப்பார்கள்.

பிறகு சாம்பல் நிறக் கோடுடைய என்று ஒரு ஜாதி பிரிப்பார்கள்
பிறகு ஏதும் அகப்படவில்லையென்றால் தஞ்சாவூர் புறா பட்டுக்கோட்டைப் புறா என்பார்கள்
பிறகு கீழத்தெரு புறா மேலத்தெரு புறா என்பார்கள்
பிறகு கோவில் புறா மசூதிப் புறா என்பார்கள்.
நான் இப்படியெல்லாம் அவர்கள் பிரித்துக் கூறுவதைக் கூட குறையாகக் காணவில்லை. ஆனால் பிரித்தவற்றுக்கு இடையில் பாகுபாடுகள் பேசுகிறார்கள் பாருங்கள் அதைத்தான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாகுபாடற்ற சமுதாயமே அமைதி அன்பு அறிவு அறம் கொண்ட சமுதாயம்!

*
எதிராளி இணங்கினால்தான் நான் இணங்குவேன் என்றால் இணக்கம் என்பது வரவே வராது.
நாம் தான் இணங்க வேண்டும். மீண்டும் மீண்டும் இணங்க வேண்டும். தொடர்ந்து இணங்க வேண்டும். சளைக்காமல் இணங்கவேண்டும். சாகும்வரை இணங்க வேண்டும்.
இப்படியே ஒவ்வொருவரும் இணங்கினால்..... என்னாகும்?
அதோடு
இணக்குவோரைப் பாராட்டவேண்டும்
இணங்குவோரைப் புகழவேண்டும்
இணங்குவோரை உயர்வானவர்கள் என்று அடையாளம் காணவேண்டும்

20160803 2

>>>புகாரி தோழரே அந்த சதுர அமைப்பை வணங்குவதற்கு காரணம் தான் புரியவில்லை. அகற்றப்பட்ட சிலைகள் எங்கு உள்ளன<<<
சதுர அமைப்பை யாரும் வணங்கவில்லை.
ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் என்ன இருக்கின்றதோ அதே தான் அந்தச் சதுரத்துக்குள்ளும் இருக்கின்றது
இஸ்லாம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன என்றால் நீங்கள் கொஞ்சம் இஸ்லாம் பயிலுங்கள்.

*
தீவிரமாய் இருப்பதால் 
வரவில்லை 
தவறாய் இருப்பதால்தான் 
வருகிறது
வன்முறை

*
வணக்கம் என்ற சொல்லுக்கும் வழிபாடு, தொழுகை என்பனவற்றுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
வணக்கம் என்பது இங்கே மரியாதை தருவது.
வணக்கம் என்பது சில இடங்களில் அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம் என்பது சில இடங்களில் குட் மார்னிங்
வணக்கம் என்பது சில இடங்களில் ஹலோ

*