2 தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

நரபலி மறுத்து
மனிதம் காத்தத் திருநாள்தான்
ஹஜ் பெருநாள்

பெற்ற பிள்ளையையே
மும்முறை கனவில் வந்து
பலியிடக் கேட்டதாகக் கூறி
இறைவனுக்குத் தியாகம் செய்ய
முற்படுகிறார் பக்தர்

ஆனால்
கூர் வாளும்
வெட்ட மறுக்கிறது

சாத்தான்கூட
தடுக்கின்றான்

பின்னரோ
பலியிடுவதெனில்
ஓர் ஆடு போதுமென்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது
கருணை நிறைகிறது

மனித உயிர் பலியிடுவது
தியாகமன்று
உன் உள்ளத்தினின்று
தீயவற்றைப் பலியிடுவதே
தியாகம் என்றறியவைத்து
நரபலியை மறுதலித்த இறைவனின்
கட்டளை வந்த நாளே
தியாகத் திருநாள்

உலகமக்கள் யாவருக்கும்
உயர்வான உறுதியான உண்மையான
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

4 comments:

mohamedali jinnah said...

தியாக திருநாள் வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன்.இனி தொடர்வேன்.
தியாக திருநாள் வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன்.இனி தொடர்வேன்,
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி said...

நன்றி கரந்தை ஜெயக்குமார். நீங்கள் தஞ்சை அருகில் உள்ள கரந்தட்டான்குடிக்காராரா? என் உயிர் காத்த ஒரு மூலிகை மருத்துவர் அந்த ஊர்தான். நினைவுகூர்கிறேன் நன்றியோடு.