அருகாமை என்றால் என்ன?

இந்த ஆமையை கவிழ்த்துப் போட்டும் குறுக்காகப் போட்டும் நிமிர்த்திப் போட்டும் நிறைய உரையாடல்கள் பலகாலமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஒரு மொழி வளரக்கூடியது என்ற உண்மையை சிலர் உணர்வதே இல்லை. அப்படியே உறைந்துபோன ஒன்று என்ற நினைப்பிலேயே உரையாடிக்கொண்டிருப்பார்கள்.

நாற்றம் என்றால் என்ன? சங்க இலக்கியங்களில் அது நல்ல மணம். இப்போது அது கெட்ட மணம். ஏற்கவில்லையா நீங்கள்?

காமம் என்றால் என்ன? சங்ககால இலக்கியங்கள் அது காதல். இப்போது அது செக்ஸ். ஏற்க வில்லையா நீங்கள்?

அவைகள் என்றால் என்ன? சங்ககாலதில் அவை அரங்குகள் மன்றங்கள். இன்று அவர்கள் என்ற பொருளிலும். ஏற்கவில்லையா நீங்கள்?

அசால்ட் என்பது ஆங்கிலத்தில் அட்டாக். தமிழில் அதன் பொருள் என்ன? ஏற்கவில்லையா நீங்கள்? (இதை ஏற்பது சிரமம்தான் ;-))

அருகாமை என்பதை மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

அருகாமை என்றால் அருகில் செல்லாமை அருகில் இல்லாமை என்று சொல்லிப் பாருங்கள், பெரிய பெரிய எழுத்தாளர்களும் சிரிப்பார்கள்.

அருகாமையில் இளமாமயில் என்று ஒரு கவிஞன் திரையில் பாடினான். எவருக்கும் ஐயம் ஏதும் வரவில்லை. சரியாகவே புரிந்துகொண்டு ரசித்தார்கள்.

தமிழ் மக்கள் மொழி. புழக்கம் சில சொற்களைப் படைக்கும். அவற்றை ஏற்கும் மொழி. ஆனால் சிலர் ஏற்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஏற்போரே பெரும்பான்மையினர் என்பதைக் கருத்தில் கொள்க.

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88

இதில் இரண்டு வாதங்களையும் பார்க்கலாம்.

க்ரியா தற்காலத் தமிழ் அகராதியில் அருகாமைக்கு அருகில் என்ற பொருள் கொடுக்கப்பட்டு ஆண்டுகள் 30க்கும் மேல் ஆகிவிட்டன.

அன்புடன் புகாரி

No comments: