நற்றமிழ்
தற்காலத்தமிழ், தனித்தமிழ், தமிங்கிலிஷ், மணிபிரவாளம், ஜனூன்தமிழ் ஆகியவற்றுக்கெல்லாம் தீர்வாக ”நற்றமிழ்” என்று தமிழ் சிறப்பாக வளர வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.
தீவிரம் மிதம் இரண்டிற்கும் இடையில் இந்த உலகம் செழிப்பது நடுநிலை என்ற ஒன்றில்தான் என்று நான் நம்புகின்றேன்.
வடசொல்லுக்குத் தமிழ்ச்சொல் வழங்கும் அகராதி உள்ளதா? மாற்றித்தரும் கணிநிரலி உள்ளதா?
இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
இருப்போரில் பலருக்கும் அதுதானே கூடு
சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
சிரிக்கின்ற தமிழ்நாடோ வைரப்பொன் மாலை
வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
வளமான மண்ணுக்குப் பொருள்தந்த பெருமை
செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
செழித்தோங்க நெல்வார்க்கும் எழிலான நஞ்சை
நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
நாளெல்லாந் தொழுகின்றேன் நல்லதமிழ்ச் சொல்லை
வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
வார்த்தைக்குள் உயிராக வரவேண்டும் ஓடி
மானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற
மண்தாண்டி வந்தும்மண் மறந்ததே இல்லை
தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
டொராண்டோ தமிழர்க்கென் நன்றிகளோ கோடி
அன்புடன் புகாரி

No comments:
Post a Comment