ஆயிரம் வேர்கள்

ஒரு
மரத்துக்கு மட்டும்
ஆயிரம் வேர்கள் அல்ல
ஒரு
மனிதனுக்கும்
ஆயிரம் வேர்கள்தாம்

வாய்மொழி
வட்டாரமொழி
தாய்மொழி
மரபணு
மரபு
இனம்
குடும்பம்
சமூகம்
மார்க்கம்
தெரு
பிறந்த ஊர்
வளர்ந்த ஊர்
படித்த ஊர்
வாழ்ந்த ஊர்
தாய்நாடு
புலம்பெயர் நாடு
உலகம்
பிரபஞ்சம்

இன்னும்
இன்னுமாய்...
இவை
அத்தனையும்
நெஞ்சு விம்மிப்
பெருமைப்படத்
தகுதி மிகக் கொண்டனதாம்

இவற்றுள் எதுவும்
குறைவும் இல்லை
உயர்வும் இல்லை

அனைத்து வேர்களாலும்
ஆனவனே மனிதன்

இன்னும்
கோடி கோடி
இலைகளையும் கிளைகளையும்
பரப்பிச் செல்பவனே
மனிதன்

1 comment:

அன்புடன் சீசன்ஸ் said...

எண்ணக் குவியல் பெருமையெல்லாம்
போட்ற உம்மால் முடிவதுண்டு

எண்ணம் உணர்ச்சியாய் இயற்கையாய்
வண்ணம் பெருக்கெடுத்து எழிலாகிறது