புடலங்காய்ப் பந்தல்

காலில் கல்கட்டி
சுமையோடு தொங்கும்
புடலங்காய்கள்

நிமிர்த்தி
வளர்த்தால்தான்
நல்ல விலைக்குப்
போகும் சந்தையில்

இயல்போடு
வளர
புடலங்காய்களுக்கு
வழியே இல்லை

சுமைகள்
நீங்கும்போதும்
சாம்பாருக்குள்
செத்துவிடுகின்றன

மனிதர்கள்தாம்
இப்போது அதிகம்
தொங்குகிறார்கள்
புடலங்காய்ப் பந்தல்களில்

6 comments:

Anonymous said...

நீங்கள் சொன்னதுபோல, இவர்களின் முடிவிடமும் சாம்பார்தான், புகாரி.

Anonymous said...

புடலங்காயின் வாழ்க்கை இவ்வளவுதான். இயல்பு மாறினால் மனிதர்களும் புடலைதான்.

அன்புடன் ..... சீனா

சேதுக்கரசி said...

இந்தக் கவிதையை முதன்முறை வாசித்தபோது புரிந்துகொள்ள சிரமப்பட்டேன் (2005ல் என்று நினைக்கிறேன்) இப்போது... மிக எளிமையாகத் தோன்றுகிறது :-) நல்ல கருத்து.

Anonymous said...

"பெரிய புடலங்காய் விஷயம்".. அப்படி என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு... ஆனால் இந்த புடலங்காய் கொண்டு இப்படி ஒரு கருத்து... அற்புதம் ஆசான்...

Anonymous said...

அன்புள்ள புகாரி,
புடலங்காய் மனிதருக்கு உவமையாகக் கொள்ளப்பட்டுள்ளது. அருமையான தேர்வு.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழுக்கு பெருமையளிக்கும்
பழமொழி.
ஐந்தில் வளைக்கப்பட்டவன் ஐம்பதில் நல்லமனிதனாகிறான்.
புடலங்காயின் பிறவிப்பயன் சாம்பாரில் இணைவது.
மனிதனின் பிறவிப்பயன் மனிதனோடு கலப்பது.
வாழ்த்துக்கள்.
அன்புள்ள,
மு.குருமூர்த்தி

Anonymous said...

இது என்ன பெரிய புடலங்காய்க் கவிதை? :)