22 உயிரோடிருக்கலாம்காதலி மடியில்
அரசியல் வனத்தில்
பக்திக் கடலில்
இலக்கிய வெளியில்
என்று
ஏதோ ஒன்றில்
எல்லாம் அழிய
செத்துப்போ

நாற்பதுக்குப்
பின்னும்
நீ
உயிரோடிருக்கலாம்

Comments

M Gurumoorthy said…
அன்புள்ள புகாரி,

மடி,கடல்,வனம்....இவையெல்லாம் எல்லைக்குட்பட்டவை. நீங்கள் குறிப்பிட்ட வெளி கற்பனைக்குள் அடங்காதது. சொற்பிரயோகம் சரியானதுதான். இலக்கியவெளி என்பது சரியான தேர்வு.

அன்புள்ள,
மு.குருமூர்த்தி
இப்படியான அலசல் பார்வைகளால்தான் என்னை அந்தச் சிறுவயதிலேயே அசத்தி எடுத்தீர்கள். ஒரு கதாநாயகனாகக் காட்சி தந்தீர்கள். இப்போதுமா?

நன்றி குருமூர்த்திசார்
Anonymous said…
நாற்பதுக்குப் பின் உயிர்வாழ இதுதான் வழியா..? ஏன் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்?
அன்பு நவன்,
நீங்கள் தேர்வுசெய்யாமலேயே இருங்கள். அது தானே தேர்வாகிவிடும். இலக்கியம் என்பதனுள் கலையை உள்ளடக்கிக் கொள்ளுங்கள். அந்தப் பொருளில்தான் எழுதியிருக்கிறேன்.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ