கண்ணா
உன் காலம் வேறு
ஏசுவே
உன் காலம் வேறு

ஆனால் நீங்கள்
கைகோத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நிறம் கறுப்பு
ஏசுவே
உன் நிறம் சிவப்பு

ஆனால் நீங்கள்
எங்களை
நிறங்களற்ற
எண்ணங்கள் கொண்டவர்களாய்
ஆக்குவீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நூல் கீதை
ஏசுவே
உன் நூல் பைபிள்

ஆனால் நீங்கள்
கீதைக்கும் பைபிளுக்கும்
வித்தியாசம் ஏதுமில்லையென
உணரச்செய்வீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

Comments

சீனா said…
அன்பின் புகாரி

வேண்டுதல் நிறைவேற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Anonymous said…
கிருஷ்ணரும், கிருஸ்துவும் உங்கள் ஆசைகள் விரைவில் நிறைவேற்றட்டும்.
விசாலம் said…
அன்பு புஹாரி அவர்களே இன்றைய காலக்கட்டத்திற்குப்பொருத்தமான ஆசை
தான் இது நிறைவேறினால் அமைதி காணலாம்
சீதாம்மா said…
நல்ல எண்ணம்
நடந்தால் நல்லது
shanthi said…
How long will it take for the world to realise it......
அருமையான எண்ணம் நண்பரே

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே