73

வளர
வளரத்தான் நிலவு
பழக
பழகத்தான் அழகு

பார்த்த
மாத்திரத்திலேயே
நீ மட்டும் எப்படி
பேரழகு

உன்னை
முதன் முதலில்
முகர்ந்தபோதுதான்
என் மூக்கு
மூச்சுவிடத் தொடங்கியது

நான்
மூழ்கக் காத்திருக்கும்
படகு

உன்னிடம்
கவிழ்ந்த பின்தான்
என் பயணமே தொடங்கியது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

nidurali said…
என் மனதில் எழுந்த கருத்துகளை
உமக்கு வார்த்தை வடிவில் தருகிறேன் .
தெரிகின்றது உன்னுருவம் வரிகள் தோறும் பார்க்கின்றேன்
உன் அன்புக் கவிதைகள்
நம்மிடையே பாலம்
அமைத்து நம்மை
ஒன்று படுத்தி விடுகின்றன
இறைவன் இட்டது எல்லோர்க்கும் சேரட்டும்.

அன்புடன் அலி
அன்பின் புகாரி

படிக்கப் படிக்கத்தான் ரசனையே

ஆனால் உனது கவிதைகளைப் பார்த்த மாத்திரத்திலேயெ ரசிக்கத் துவங்குகிறேனே - அது எப்படி

நல்வாழ்த்துகள் புகாரி
சிவா said…
அருமை ஆசான்
சீனா, மிகவும் ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை

அலியாரே, இந்த அன்புக்கு நான் அடிமை

நன்றி இருவருக்கும்
திகழ் said…
/
வளர
வளரத்தான் நிலவு
பழக
பழகத்தான் அழகு

பார்த்த
மாத்திரத்திலேயே
நீ மட்டும் எப்படி
பேரழகு/


அருமை

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ