79

நானொரு ரகசியம்
சொல்லட்டுமா என்றேன்
என் ரகசியம்
என்னை நச்சரிக்க

சொல் சொல் என்றாள்
கண்களில் தீபம்
அசைய

வேண்டாம் இப்போது
பிறகு சொல்கிறேன் என்றேன்
தயக்கம் என்னைத்
தயங்காமல்
உறிஞ்சியதுபோக
மிஞ்சிய நெஞ்சால்

பிறகு எப்போது?

விட்டேனா பார் என்று
பார்வையாலேயே
ராஜ தூண்டில் சுழற்றினாள்

நீ சொல்லப் போவது என்னவென்று
எனக்குத் தெரியும் தெரியும்
அதைச் சொல்லித்தொலையேன்
சீக்கிரம் சீக்கிரம்
என்ற தவிப்பான தவிப்பு
தவித்துக்கொண்டிருந்தது
அவள் மாபெரும்
மைவிழிகளில்

பயம் தந்த தைரியத்தில்
பவ்வியமாய் விலகினேன்
பிறகு எப்போது என்று
பிறகு சொல்கிறேன் என்று
பிதற்றிக்கொண்டே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

சக்தி said...

பின் நண்பரே புகாரி,

உங்களுக்கேயுரிய தனித்தன்மை ஜொலிக்கிறது.

>> நீ சொல்லப் போவது என்னவென்று
எனக்குத் தெரியும் தெரியும்
அதைச் சொல்லித்தொலையேன்
சீக்கிரம் சீக்கிரம் என்ற தவிப்பான தவிப்பு
தவித்துக்கொண்டிருந்தது
அவள் மாபெரும் விழிகளில் >>

அன்புடன்
சக்தி

கவிஞர் சேவியர் said...

சூப்பர் :))