**** 75

என் உயிரின்
அத்தனை துளிகளிலும்
கண்ணீராய் வாழும்
என் உயிரே

என்னை நிராகரிப்பது
உன் உரிமை
எப்படி வேண்டுமானாலும்
என்னை
நிராகரித்துக்கொள்
ஆனால்
என் கண்கள் தொடும்
தொலைவிலேயே
இரு

உன் மீதான
என் பிரியம் என்பது
பைத்தியத்திலும் கேடுகெட்ட
பைத்தியமானது

எனக்குள்
அதை ஊட்டிவிட்டவள்
நீதான்

நெஞ்சில்
எனக்கான அத்தனை
காதலையும் வைத்துக்கொண்டு
நிராகரிப்பதாய்
உதடுகளால் நடிக்கிறாய்

ஒன்று மட்டும் புரிந்துகொள்
நீ விரும்பாத எதையும்
நான் விரும்ப மாட்டேன்

நீ வாழவே
நான் வாழ்வேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

/எப்படி வேண்டுமானாலும்
என்னை நீ நிராகரித்துக்கொள்
ஆனால் என் கண்கள் தொடும்
தொலைவிலேயே இரு

உன் மீதான என் பிரியம் என்பது
பைத்தியத்திலும் கேடுகெட்ட
பைத்தியமானது என்பதை அறிவாயா..//

என்னத்த சொல்ல ஆசான் அருமை அருமை அருமை.
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்