புலவர்கள், கவிஞர்கள் எல்லோரும் பொய் மூட்டைகளா?

பொய்யிலே பிறந்து பொய்யில வளர்ந்த
புலவர் பெருமானே என்று
கண்ணதாசன் பாடினார்

என்றால்
புலவர்கள் கவிஞர்கள் எல்லாம்
பொய் மூட்டைகளா

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்

பொய்யிலே பிறந்து என்றால்
காயம் என்ற பொய்யிலே பிறந்து

காயம் = உடல்

உலகே மாயம் வாழ்வே மாயம்
என்றான் ஒரு திரையிசைக்கவிஞன்

பொய்யிலே வளர்ந்து என்றால்
உலகம் என்ற பொய்யிலே வளர்ந்து
உலகம் = மாயம் = பொய்

ஆக
புலவர் பெருமான் மட்டுமல்ல
உலகின் ஒவ்வோர் உயிரும்
உடல் என்ற பொய்யிலே
பிறந்து
உலகம் என்ற பொய்யிலே
வளர்ந்தவைதான்

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே