அறிவு ஞானம்

Ncr Kumar This is the trouble. If I feel comfortable to express in a language that you can also understand, why enforce? If I insist on your posting in a language of my choice then am I not a dictator?
1. இங்குள்ளோர் எல்லோருக்கும் நீங்கள் எழுதுவது போய்ச்சேரவேண்டும்
2. தமிழில் கருத்தாடவே என் முகநூல் பக்கம்
3. இங்காவது தமிழில் உரையாடுவோமே?
4. இங்ககூடவா தமிழில் எழுதமாட்டாய் தமிழா?
5. ஒரு தமிழன் தமிழில் எழுதுவதைவிட வேறு செய்யத் தகுந்த நல்ல செயல் உண்டா
*
அறிதல் என்பது ஒரு தொடர்
ஆதியும் அல்லாத அந்தமும் அல்லாத
ஓர் உயிர்த் தொடர்
மிகச் சிறிய எண்ணும் இல்லை
மிகப்பெரிய எண்ணும் இல்லை
அறிவும் அவ்வண்ணமே

*
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
என்பதெல்லாம் கவிதை.
நயம் கருதி உருவாக்கப்படுவது.
சுவாரசியம் கருதி எழுதப்படுவது.
ஒன்றின் துக்கத்தையும் துயரத்தையும் சொல்லும்போது இப்படியான அதீத உணர்ச்சியைக் கொட்டுவது.
அது ஒரு கலை. அவ்வளவுதான் அந்தக் கலையும் அறிவுதான். ஞானம் இல்லை.
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
என்றால் மனித வாழ்வு நிலையானதில்லை என்றுதான் பொருள், ஆனால் மனிதவாழ்வே பொய் என்பது விரக்தியின் உச்சக்கட்டம்

*
யூகங்களால் கணிக்கப்படுவதை ஞானம் என்று சொல்வார்களேயானால் அது பிழை. அதுவும் அறிவுதான்.
இருப்பதைக் கொண்டு இல்லாதவற்றை உருவாக்கிப் பார்க்கும் அறிவு
இப்படி நடந்திர்ந்தால் அப்படி நடந்திருக்கும் என்று ஒரு சாதாரண மனிதன் கூடச் செய்யக்கூடியது
மூளையின் வீச்சம் எட்டுத் திக்கல்ல எண்ணாயிரம் திக்குகளில் எகிறிப் பாயும்.
*
அறிவு எத்தனை வகைப்படும் தெரியுங்களா? அதைக் குறிப்பாக
படிப்பறிவு
பட்டறிவு
என்று எளிமையாகப் பிரிக்கலாம்.
பின் பொது அறிவு, அடிப்படை அறிவு, பகுத்தறிவு, அறிவியல் அறிவு என்று போய்க்கொண்டே இருக்கும்
நீங்கள் சொல்லும் தானாக வருவது அடிப்படை அறிவு
அனுபவத்தில் வருவது பட்டறிவு
தேடலில் வருவது பகுத்தறிவு
மற்றபடி ஞானம் என்பது அறிவுக்கான சமஸ்கிருதச் சொல்.
கேள்வி ஞானம் என்றால் என்ன?
விஞ்ஞானம் என்றால் என்ன?
என்றெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்
*
ஞானம் என்பது அறிவு
அறிவு எகிறிப் பாய்ம் என்றால் ஞானம் எகிறிப் பாயும் என்று பொருள்
யூகங்கள் என்பது அறிவின் வழி வருவது. அறிவின்றி யாதொரு யூகமும் இல்லை
தேடுதல் நடத்துவது அறிவு. அறிவில்லாமல் எந்தத் தேடுதலும் இல்லை
*
இவ்வகை அறிவைத் தத்துவ அறிவு என்பார்கள்.
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
உச்சி நனையும்வரை உன் தூக்கம் கலையும்வரை
மலர்ந்தும் மலராத பாதிமலராக
வளர்ந்த இளந்தென்றலே
சுவாரசியமான கற்பனை உலகம்
இதெல்லாமும் அறிவுதான். தனியே ஞானம் என்று ஏதும் இல்லை
அறிவு = ஞானம்

*
ஒரு எஸ் பி பால சுப்ரமணியன்
ஒரு பி சுசீலா
ஒரு கமல்ஹாசன்
ஒரு அப்துல்கலாம்
ஒரு ராமானுஜம்
ஒரு சாக்ரடீஸ்
பிறந்தவண்ணமே இருப்பார்கள். இது மரபில் மரபுக் கூறுகளில் நிகழும் உன்னதங்கள்.
சிலர் இதை இறையருள் என்பார்கள், சிலர் இதை இயற்கை விதி என்பார்கள்.
அறிவு கருவிலேயே உருவாகிறது என்பதை அறிதல் வேண்டும்.
பட்டறிவையும் படிப்பறிவையும் மட்டுமே எண்ணி இருத்தல் கூடாது
*
அறிவுக்குமேல் அறிவேயன்றி வேறில்லை அறிக!
அறிவுக்குமேல் ஒன்று வேண்டுமெனில் அது அன்பாகவும் அறமாகவுமே இருக்கவியலும்.
ஞானம் என்ற மொழிமாற்றுச் சொல்லாக இருக்க முடியாது.
*
அன்பும் அறிவும் ஒன்று சேர்ந்தால் அதன் பெயர் நல்லறிவு !
அறிவும் வக்கிரமும் ஒன்று சேர்ந்தால் அதன் பெயர் கெட்டறிவு
இதில் அறிவு என்னும் இடத்திலெல்லாம் ஞானம் என்ற சொல்லைப் போட்டும் வாசித்துக்கொள்ளலாம்.
தவிர ஞானம் என்பது எவ்வகையிலும் மேதாவித்தனமான சொல் அல்ல.

*
>>> மெய்ஞானம் -- சரீரரத்தின் உள்தாங்குதல் இல்லாமல் அமையும் சிந்தனையில் கிடைக்கப் பெறும் இறை தொடர்பு<<<<
சரீரத்தின் உள்வாங்கும் திறன் - ஐம்புலன்களும் மூளையும் செய்யும் பணி
சிந்தனை - மூளையின் செயல்பாடு

இறைத் தொடர்பு - நம்பிக்கை
இப்போது இவை மூன்றையும் ஒன்றாக இணையுங்கள்.
ஐம்புலன்களாலும் மூளையாலும் உள்வாங்காமல் சிந்தனை செய்து நம்பிக்கை கொள்ளும் காரியம்
இடிக்கிறதா இல்லையா?
ஐம்புலன்களாலும் மூளையாலும் உள்வாங்காமல் சிந்தனை என்றால் என்னபொருள்?
உங்களின் மூளை தன் செயல்பாட்டைச் சுத்தமாக இழந்துவிட்டபின், கோமா நிலைகூட இல்லை, பிண நிலை.
பிணநிலையில் சிந்தனையா?
குழப்பிக்கொள்ளாதீர்கள், தெளிவாகச் சிந்தியுங்கள். மீண்டும் ஒருமுறை முயலுங்கள், நான் காத்திருக்கிறேன்
அறிவு = ஞானம்
அறிவு தமிழ்ச்சொல்
ஞானம் சமஸ்கிருதச் சொல்
இன்னும் பலமொழிகளிலும் பல சொற்கள் உள்ளன.
எந்த மொழியும் தேவமொழியும் அல்ல நீச மொழியும் அல்ல. எல்லா மொழியும் அதனதன் வழியில் நல்ல மொழிகளே!
அரபு மொழி என்றால் உயர்ந்தமொழியும் அல்ல அரபிகள் என்றால் உயர்ந்தவர்களும் அல்லர் என்று இஸ்லாம் மிக அழுத்தமாகச் சொல்லும்.
*
>>>ஞானம் என்பது தமிழ் சொல் அல்ல என்பதை விஞ்ஞானம் மற்றும் அஞ்ஞானம் எனும் தமிழ் சொற்களால் மறுக்கப்படுவதைப் போலவே , மெயஞானம் என்பது இறைத் தொடர்பினை ஏற்படுத்தும் மெய்யறிவே என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்களின் மறுக்க முடியாத உண்மை வரிகள்.<<<
விஞ்ஞானம் = அறிவியல்
அஞ்ஞானம் = அறிவின்மை
மெய்ஞானம் = மெய்யறிவு
அனுபவம் என்ற பெயரில் சிலரின் கற்பனை கரைபுரண்டு ஓடும்.
தனக்குப் பின் ஏதோ ஒளிவட்டம் வந்ததாய் கிளர்ச்சியடைவார்கள்.
எல்லாம் மனோவியாதிதானே அன்றி வேறில்லை.
நானும் அப்படியே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு
என் கற்பனையைத் தட்டிவிட்டால்
அப்படியே போகாத இடமெல்லாம் போய்விட்டுவந்துவிடுவேன்
விவரிக்க முடியாத கற்பனை வெளிகளை எல்லாம் சாத்தியப்படுத்தித் தருவது எது?
மூளை மூளை மூளை
மூளைக்கு அப்படியானதொரு ஆற்றல் உண்டு. மூளையைக் கணினியால்கூட இதுவரை வெல்ல முடியவில்லை. இனி வருங்காலங்களால் வெல்லமுடியுமா என்று தெரியவில்லை.
வெறும் வேற்றுமொழிச் சொற்களில் மயங்கவேண்டாம். தரையிறங்கி வாருங்கள்!

*
>>>சிந்தனைத் திறன் அற்ற அல்லது நீங்கிய நிலையில் இறைத் தொடர்பு கிட்டுகிறது<<<
சிந்தனை அற்ற நிலையில் ஒன்று கிட்டினால் அதை உணர முடியுமா?
சிந்தியுங்கள்!
சும்மா இருடா என்ற என் கவிதையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன். அதைப் பகிர்கிறேன் மீண்டும்.
*
உனக்குச் சொன்னால் புரியாது என்று இறுதியாகச் சொல்லப் போகிறீர்கள்
நான் கண்டதை நீ காணவில்ல என்று அடுத்துச் சொல்லக் கூடும்
நாம் நம் கற்பனைகளிலிருந்து வெளிவருவது என்பது சிரமமான காரியம்தான்.
ஆனால் காலத்தின் ஓட்டத்தில் அது ஓடுடைத்து வெளிவரும் குஞ்சுகளாக வெளிவரும்.
நான் உங்களை நோகடிப்பதாக நினைத்தால் அதற்காகக் கவலைப்படுகிறேன். ஆனால் நான் தெளிவுகளை முன்வைத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் எனக்கு உறக்கம் வராது

*
>>>அனுபவ பாடங்களை ஏற்க மறுக்கும் அறிவுத் திறனை நாம் பெற்றதே அநீதிகள் பெருகும் வாய்ப்புகளை உருவாக்கியது <<<
அனுபவப் பாடங்களை முழுக்க முழுக்க ஏற்பதுதான் அறிவு.
நேற்றைய அனுபவம் இன்றைய பாடம். இன்றைய அனுபவம் நாளைய பாடம்.
அப்படியாய் வளர்ந்ததே அறிவு. ஆகவேதான் அது வளர்ந்த வண்ணமாகவே இருக்கிறது.
>>>சிலிர்க்கும் உணர்வுகள் இறைத் தொடர்பில் கிட்டாது<<<
இறைபக்தி பெருகி நிறைந்து நிற்போர் சிலிர்ப்பில்தான் எழுகிறார்கள். அதையே பேரின்பம் என்கிறார்கள். பெண்வழி வருவதோ வெறும் சிற்றின்பம் என்கிறார்கள்.
>>>>எம்பெருமான் நபிகள், இந்த நிலையிலேயே இறைவனிடம் செய்திகளை பெற்றார் <<<
அவர் ஆழ்ந்த தியானத்தில் கடுந் தவத்தில் ஒன்றையே நினைத்திருந்து ஒன்றையே பெற்றார். சிந்தனையைத் தீட்டித் தீட்டித் தீட்டி மகா அறிவினைப் பெற்றார்.
எனக்கொரு வேதனை இப்போது. ஞானம் என்ற பிறமொழிச் சொல் பற்றிய இக்கருத்தாடலில் நான் மீண்டும் மார்க்கத்துக்குள் இழுத்துடப்படுகிறேன்.
*



 









 




 

No comments: