20160920


நீ 
அழுக்கா புனிதமா
*
கழிப்பிடத்திற்கும்
தொழுகைக்கும்
ஒன்றே தேகம்


*
தொழுகை என்பது
உடலையும் மனதையும்
தூய்மைப் படுத்திக் கொள்வதற்கான
தொடர்ப் பயிற்சி

*
இன்றைய
உன்
வாழ்க்கை
உன்னுடையதல்ல
வணிகர்களினுடையது

*

எல்லோருமே கிழித்த கோட்டைத் தாண்டும் சீதைகளாய்.....
ராவணனுக்கு யாரைத்தான் கவர்ந்துசெல்வது என்றே அறியாத பெருங் குழப்பம்....
மூக்கறுபட்ட நிலையிலேயே வாகனச் சட்டங்கள்...
மாயமான்களாகக் கட்டற்ற மூர்க்கச் சுதந்திரம்...
வனம்தான்... வாசம்தான்... வனம்விட்டு எப்போது வருவார்களோ நாட்டுக்குள்...
ஊரும் ஊர்திகளும் நடு இரவுக் கொடுங்கனவுகளாய்...
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு எத்தனைமுறைதான் எழுவது

*
அரசியலைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அரசியலுக்குள் நல்லவர்கள் வரவேண்டும்
மதவெறிகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் மதங்களுக்குள் உள்ள நல்லவர்கள் பேசவேண்டும்

*
பாரபட்சம் பார்த்து வந்தால் அது அற அன்பு கிடையாது.
நாச திசையில் பயணப்பட்டால் அது அற அறிவு கிடையாது
அறம்தான் அனைத்திற்குமான மையப்புள்ளி
அறம் சொல்லித் தருவது மட்டுமே நல்ல பாடசாலை, நல்ல மார்க்கம், நல்ல வீடு, நல்ல நாடு, நல்ல உலகம்!
*
நீரைவிட
ரத்தம்
மலிவானது
காவிரி

*
தீண்டாமை தீண்டப்படாது
சாதி சாதிக்காது
மூடநம்பிக்கை மூடப்பட்டிருக்கும்
ஏழ்மை ஏழ்மைப்பட்டிருக்கும்
இஸ்லாம்
*
குர் ஆனை பொருள் தெரியாமல் மனப்பாடமாக ஓதிக்கொண்டே இருந்தால் அதுவே சொர்க்கம் செல்லும் வழி என்று நினைப்பது மூடநம்பிக்கை!
பொருள் தெரியாமல் ஓதப்படும் எதுவும் எதையும் தராது.
பொருள் தெரிந்து ஓதப்படும் ஒற்றைச் சொல்லும் இறைவனின் அருகாமைக்கு அழைத்துச் செல்லும்

மூட நம்பிக்கை களைவோம்!
ரமதான் மாதம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களால் மீண்டும் பலமுறை குர் ஆன் பொருள் தெரிந்து ஓதப்படுகிறது. அவர்களுள் ஒருவராய் இணைவதே மார்க்கம் பேணுவது!
*
ரத்த ஆற்றிலேயே நீந்தாமல், கொஞ்சம் நல்லது கெட்டதையும் பார்த்தால்தானே ரத்த ஆறு நிற்கும்?
எந்த ஆட்சி மழை நீரைச் சேகரித்தது?
எல்லா ஏரிகளையும் பிளாட் போட்டுத்தானே விற்றது?
குழியை நீங்களே தோண்டிக்கொண்டு, பழியை யார் மீதும் போடவேண்டாம்
*

*
கருநாகங்களை முடக்க வேண்டியவர்கள் அறம் சார்ந்து ஆட்சியில் இருப்பவர்கள்.
இன்று அறம் சார்ந்த ஓர் அரசைச் சொல்லுங்கள் நண்பரே
இன்று எல்லாமே கருநாகங்களில் பிடியில்தான். அதில் மயங்கித்தான் நீங்கள் பேசுகிறீர்கள்>
கருநாகங்களை எதிர்த்து அதை அழிக்க எது சரியான வழியென்று அறிந்து அதையே உலகுக்குச் சொல்லும் நல்ல மனம் உங்களிடம் வளரவேண்டும்.
அதை விட்டுவிட்டு அறம் சொல்ல வந்த மார்க்கம்மீது எகிறுவது கருநாகங்கள் உங்களை ஆளுகின்றன என்பதையே காட்டுகின்றது
*
வேலு.ஞானம். பெருஞ்சேரிரி >>>>கருநாகங்கள் நாச வேலைகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது அல்லாஹூஅக்பர் என்று முழங்குகிறார்கள்.
நாச வேலைகளுக்கான ஆயத்த பணிகளின் போது அல்லாஹு அக்பர் என்றே முழங்குகிறார்கள்.
நாசவேலைகளை செய்து முடித்துவிட்டும் அல்லாஹூ அக்பர் என்றே முழங்கிறார்கள்.
நாச நிகழ்வுகளில் பலியாகிறவர்களும் அல்லாஹூ அக்பர் என்று முழங்கியபடியே பலியாகிறார்கள்.
பலியானவர்களுக்கான சிறப்பு தொழுகையிலும் அல்லாஹூ அக்பர் என்றே முழங்குகிறார்கள்.
என்னங்க இது.
யாருங்க இந்த அல்லா?
எதை தவிர்க்கலாமோ
எதை தடுக்கலாமோ அதையெல்லாம் விட்டுவிட்டு ...
போங்க.. போங்க.<<<<
நீங்கள் குழந்தைத்தனமாகக் கேட்கிறீர்களா? அல்லது உங்களின் சிந்தனையின் உயரமே அவ்வளவுதானா?
பசுத்தோல் போர்த்திய புலி தன்னைப் பசு என்று அழைத்துக்கொள்ளுமா அல்லது புலி என்று அழைத்துக்கொள்ளுமா?
அடிப்படையே தெரியவில்லையே உங்களுக்கு நண்பா, வருந்துகிறேன்.
விழித்துக்கொள்ளுங்கள்!
எது சரி எது பிழை என்று அறிவது பகுத்தறிவு. அது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் வேண்டும்

*No comments: