நைஜீரியாவின் பிரதமர்தான் என் மிகப்பெரிய எதிரி


நைஜீரியாவின் பிரதமர்தான் என் மிகப்பெரிய எதிரி

நான் ஒரு தமிழ்க் கவிஞன், என் எழுத்துக்கள் இணையம் முழுவதும் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் நண்பர்கள் அறிமுகம் ஆகும்போது இணையத்தில் உங்கள் கவிதைகளை எங்கே வாசிக்கலாம் என்று கேட்டால், என் பெயரை கூகிளில் இட்டுத் தேடுங்கள் என்று என்னால் சொல்ல முடியாது. காரணம் நைஜீரியாவின் பிரதமர் புகாரி.

வெகுகாலம் தொடர்பு விட்டுப்போன பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உறவுகள் என்று எவரும் புகாரி என்று என் பெயரை இட்டுக் கூகுளில் தேடி என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. என்றால் இந்த நைஜீரியா புகாரி எனக்கு எத்தனைப் பெரிய எதிரி?

கடந்த ஞாயிறு 2019 பிப்ரவரி 24 அன்று தமிழர் தகவல் எனக்கு ஒரு விருதும் தங்கப்பதக்கமும் தந்து கௌரவித்தது. அதே வாரம் நைஜீரியா தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மீண்டும் பிரதமராய் ஆனால் நைஜீரியா புகாரி. Buhari என்று எவராவது என்னைத் தேடி கூகுள் தேடல் நிகழ்த்தினால் இந்த நைஜீரியா மனுசனின் சுட்டிகள்தான் படபடவென்று வந்து குவியும். என் செய்தி ஒன்றுமே கண்ணில் படாது. என்றால் இந்த நைஜீரியா புகாரி எனக்கு எத்தனைப் பெரிய எதிரி?

என் மின்னஞ்சல் பெட்டி நிறைய வாழ்த்துச் செய்திகள். திறந்து பார்த்தால் பெரும்பாலானவை நைஜீரியா பிரதமருக்கானதுதான். ஏனெனில் என் மின்னஞ்சல் முகவரி buhari@gmail.com. நைஜீரியாவின் பிரதமருக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் முகவரி இல்லை. நைஜீரியா பிரதமருக்கு மட்டுமல்ல, இன்னும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான புகாரிகளுக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் இல்லை. எனக்கு மட்டுமே கிடைத்த வரம் அது.

எப்படி என்றால் நான் இணையத்தில் தொடங்ககாமல் முதலாகவே கவிதைகள் எழுதிவருவதால் கருத்தாடல்களில் கலந்துகொள்வதால், கூகுளின் மின்னஞ்சல் சேவை தொடங்கியபோது எனக்கு என் பெயரிலேயே கிடைத்துவிட்டது.

கூகுள் தன் மின்னஞ்சல் சேவையை மக்களுக்கு வழங்கியபோது வெறுமனே அதைப் பெற்றுவிட முடியாது. ஏற்கனவே ஜிமெயில் வைத்திருப்பவர்கள்தான் அழைப்பு விடுக்கமுடியும். எழுத்துத்துறை நண்பர்கள் எனக்கு ஜீமெயில் தொடங்கியபோதே அழைப்பு விடுத்துவிட்டார்கள், ஆகவேதான் buhari@gmail.com எனக்குக் கிடைத்தது இல்லாவிட்டால் buhari2000, buhari3000, buhari123 என்று ஏதோ எண்கள் இட்டுத்தான் எனக்குக் கிடைத்திருக்கும்.

அந்த வகையில் நைஜீரியா பிரதமர் புகாரிக்கு நான் பெரும் எதிரியாகிவிடுகிறேன்.

ஆகவே நண்பர்களே, என்னைத் தேட கூகுள் வந்தால் வெறும் buhari என்று இட்டுத் தேடாதீர்கள் anbudan buhari என்று இட்டுத் தேடுங்கள், Kavingar Buhari என்று இட்டுத் தேடுங்கள், நிச்சயம் நான் வருவேன். என் ஆக்கங்கள் வரும். நன்றி

https://www.bbc.com/news/world-africa-47380663

கவிஞர் புகாரி

கமல் ஓர் அரசியல் சீர்திருத்தவாதி

அறிவு அம்மியில் வைத்து
அழகாய் அரைத்தெடுத்து
அன்பாய் நட்பாய்
சகோதரமாய்த் தாய்மனமாய்

தெளிவாய்ப் பதமாய்
தொட்டுத் தொட்டு இட்டு
நேற்றைய சுயநல அறிவிலி
குருட்டு அரசியல் கால்கள்

மிதித்து மிதித்துப் பதித்த
அவல ரத்தக் காயங்களுக்கு
நடுநிலை அறமும் அன்பும்  கமழ
மாமருந்திடும் மய்யக் கமல்

தமிழ்மண்ணுக்குக் கிடைத்த
புத்தம்புது அரசியல்வாதியல்ல
இந்தியா இதுவரை கண்டிராத
ஆழநீள அரசியல் சீர்திருத்தவாதி

அன்புடன் புகாரி
உலகம் ஜாதி மதம் இனம் மொழி ஆகிய அனைத்து வெறிகளிலிருந்தும் விடுதலை பெறவேண்டும்.

போர் இல்லாத பூமியே வேண்டும்
வன்முறை அற்ற வாழ்க்கையே வேண்டும்
காதல் நிறைந்த உயிர்களே வேண்டும்

அதுவே உலகச் சுதந்திர நாள்
அந்நாள் விரைந்து மலர வேண்டும்

அன்புடன் புகாரி


உயிர்களைக் குடிக்கும் எந்தத் தாக்குதலும் மனிதத்துவம் கொண்டதல்ல.

அந்தத் தாக்குதலை நடத்தியவரும் குற்றவாளி. நடத்தத் தூண்டிய அத்தனைபேரும் குற்றவாளிகள்.

உலகில் வன்முறையால் ஒரு உயிரும் பிரியக் கூடாது.

அப்படி வன்முறையால் ஓர் உயிர் பிரியும்போதெல்லாம் உலக மக்கள் அனைவருமே வெட்கித்தலை குனிய வேண்டும்



அன்புடன் புகாரி


காஷ்மிர் ஓர் இந்து நாடும் அல்ல முஸ்லிம் நாடும் அல்ல. அது காஷ்மிர் மக்களின் நாடு.

காஷ்மீரில் முஸ்லிம் மூன்றில் இரண்டு பங்கு இருக்கிறார்கள் என்பதனாலே அது முஸ்லிம் நாடு என்று சொல்லக் கூடாது.

காஷ்மிர் மக்கள் விரும்பதுவது சுதந்திர காஷ்மீர் மண்ணைத்தான்.

காஷ்மீர் யாருக்கும் சொந்தமானதல்ல, காஷ்மீர் மக்களுக்கே சொந்தமானது.

70 ஆண்டுகளாய் அங்கே மக்களைக் கொத்தித் தின்னும் பிணக் கழுகுகள் வெளியேறவேண்டும்.


அன்புடன் புகாரி

இந்தியாவுக்கு இந்தியப் பார்வை, பாகிஸ்தானுக்குப் பாகிஸ்தான் பார்வை. இந்தப் பார்வைகள் குருட்டுப் பார்வைகள். காஷ்மீர் மக்களின் பார்வையே அவசியமான வாழ்க்கைப் பார்வை
பிப்ரவரி என்றாலே
பனிப் பொழிவுக் கொண்டாட்டம்தான்
கனடாவில்

உப்புக் கடல் எழுந்து
தித்திப்புப்
பனிப்பூக்களாய் உறைந்து
நிலம் விழுந்து
வெண்தலை சாய்த்து
நீண்டு படுத்துறங்கும்
பேரெழில் மெத்தை
எங்கள் கனடா 

அசால்ட்

மொழிகளுக்கிடையே சில வினோதங்கள் நிகழ்ந்தவண்ணமாய் இருக்கின்றன.

அப்படியான நிகழ்வுகளில் ஒரு சுவாரசியமான நிகழ்வு எதுவென்றால் அசால்ட் என்ற சொல்லைத் தமிழில் பயன்படுத்தும் முறை.


ஆங்கிலத்தில் அசால்ட் (assault) என்றால் தாக்குதல் என்று பொருள். அதுவும் குத்து வெட்டு அடி என்பதுபோல உடல் ரீதியான தாக்குதல்.

இது தமிழில் தமிழ்ச் சொல்போலப் புழங்கப்படுகிறது. ஆனால் முற்றிலும் வேறு பொருளில். எப்படி இப்படி ஆனது என்ற சரித்திரம் மட்டும் தெரியவே இல்லை. அதை என்னால் யூகிக்கவும் முடியவில்லை.

’விமானத்துக்கு இன்னும் இரண்டுமணி நேரம்தான் இருக்கு இவன் எப்படி அசால்டா இருக்கான் பாரு’

இங்கே அசால்ட் என்றால் கவனமில்லாமல், அக்கறையில்லாமல் என்று பொருள் வருகிறது

’அப்படியே அசால்டா தூக்கிப் போட்டுப் பந்தாடிட்டான்’

இங்கே அசால்ட் என்றால் மிக இலகுவாக, சர்வசாதாரணமாக.

எப்படி வந்தன இந்தப் பயன்பாடுகள்?

யார் சொல்லித்தந்தார் இதை மக்களுக்கு?

அசால்ட் என்ற சொல்லைத்
தமிழ் அகராதிகளில் சேர்க்க வேண்டுமா?
அது இயலுமா

அல்லது
மக்களின் புழக்கத்திலிருந்து நீக்க வேண்டுமா?
அது முடியுமா?

அன்புடன் புகாரி

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்


அன்றைய ணா ணோ ணோ ணை எல்லாம் இன்று இல்லை
றா றொ றோ என்பதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்பது இப்போது பலருக்கும் தெரியவில்லை
இந்த மாற்றங்கள் சரியா பிழையா?
அ இ உ எ ஒ
இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டுமே தமிழின் மூல உயிர் எழுத்துக்கள்
க எப்படி கால்வாங்கினால் கா ஆகிறதோ
அதேபோல அ பக்கத்தில் ஒரு கால்வாங்கினால் அது ஆ என்றாகிவிடும். பிறகு அ போதும் ஆ தேவை இல்லை என்ற காலம் வரக்கூடும்.
எல்லாம் தட்டச்சு இயந்திரத்தின் வசதிக்காகத்தான்
இப்படியே
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
ஒ ஓ
பிறகு
அய்
அவ்
இப்போது தமிழின் மூல உயர் எழுத்துக்கள் 5 மட்டுமே என்றாகிறது இது பிற மொழிகளோடு ஒத்துப் போகிறது
a e i o u
ஆனால் தமிழின் கூட்டெழுத்துக்களைக் கைவிடுவது கண்ணையும் கருத்தையும் கொன்று தின்றுவிடும்
க என்பதை க் + அ என்று ஆங்கிலத்தைப் போல எழுதமுடியாது k + a
அன்புடன் புகாரி