அசால்ட்

மொழிகளுக்கிடையே சில வினோதங்கள் நிகழ்ந்தவண்ணமாய் இருக்கின்றன.

அப்படியான நிகழ்வுகளில் ஒரு சுவாரசியமான நிகழ்வு எதுவென்றால் அசால்ட் என்ற சொல்லைத் தமிழில் பயன்படுத்தும் முறை.


ஆங்கிலத்தில் அசால்ட் (assault) என்றால் தாக்குதல் என்று பொருள். அதுவும் குத்து வெட்டு அடி என்பதுபோல உடல் ரீதியான தாக்குதல்.

இது தமிழில் தமிழ்ச் சொல்போலப் புழங்கப்படுகிறது. ஆனால் முற்றிலும் வேறு பொருளில். எப்படி இப்படி ஆனது என்ற சரித்திரம் மட்டும் தெரியவே இல்லை. அதை என்னால் யூகிக்கவும் முடியவில்லை.

’விமானத்துக்கு இன்னும் இரண்டுமணி நேரம்தான் இருக்கு இவன் எப்படி அசால்டா இருக்கான் பாரு’

இங்கே அசால்ட் என்றால் கவனமில்லாமல், அக்கறையில்லாமல் என்று பொருள் வருகிறது

’அப்படியே அசால்டா தூக்கிப் போட்டுப் பந்தாடிட்டான்’

இங்கே அசால்ட் என்றால் மிக இலகுவாக, சர்வசாதாரணமாக.

எப்படி வந்தன இந்தப் பயன்பாடுகள்?

யார் சொல்லித்தந்தார் இதை மக்களுக்கு?

அசால்ட் என்ற சொல்லைத்
தமிழ் அகராதிகளில் சேர்க்க வேண்டுமா?
அது இயலுமா

அல்லது
மக்களின் புழக்கத்திலிருந்து நீக்க வேண்டுமா?
அது முடியுமா?

அன்புடன் புகாரி

No comments: