வளைகாப்பு


நெற்றி நிறைய குங்குமம்
நெஞ்சு நிறைய ஆனந்தம்
தலை நிறைய மல்லிப்பூ
இடை நிறைய பட்டுச்சேலை
கை நிறைய வளையல்கள்
வயிறு நிறைய பிள்ளை

தள்ளாடும் தேன்குடம்
தந்தவனின் மடிதேடும்
உள்ளாடும் பூரிப்பில்
உலகமே மறந்துவிடும்

1 comment:

cheena (சீனா) said...

மணமாகி, அடுத்த சில மாதங்களில், மணமகளுக்கு நடைபெறும் வளைகாப்பை இவ்வளவு அழகாக வர்ணித்தவர்கள் கிடையாது. ஒரு சாதாரண நிகழ்வை கவிதையில் சிறப்பிக்க ஒரு சிறந்த கவிஞனால் தான் முடியும்.

//தள்ளாடும் தேன்குடம்
தந்தவனின் மடிதேடும்//

வைர வரிகள் - பாராட்டுகள்