பொன்னாடை போத்தி
கட்டித் தழுவுகின்றனர்
பொழுதுக்கும்
அவர்களோடு
முரண்பட்டுக்கொண்டே
இருக்கும்
எனக்கு
உப்புச் சிறகுகள்
படபடக்க
சங்கடத்தோடு
என் விழிகள்
உள்ளுக்குள்
முகம்பொத்தி
அடித்துக்கொள்கின்றன
என்றாலும்
முரண்படும் நிலைதானே
வெளிச்சவேர் பரப்பி
கிளைவிட்டுத் துளிர்க்கிறது
கவிதையாய்
புரட்சியாய்
வளர்ச்சியாய்...
4 comments:
முரண்படுவது கவிதை எழுதுவதற்குத் துணை புரிகிரதென்றால் அதற்காக முரன்படவேண்டுமா என்ன
அன்புடன் ..... சீனா
இணக்கத்தைவிட முரண்பாடுகளால்தான் அழியாத இலக்கியங்களே பிறக்கின்றன சீனா.
இலக்கியங்கள் மட்டுமல்ல, நல்ல விசயங்கள் எல்லாமே ஒரு முரண்பாட்டின் விளைவுதான்.
காந்தி வெள்ளையனோடு முரண்பட்டார், அதுதான் சுதந்திரம் தந்தது.
பாரதி சாதிமத பெண்ணடிமை என்ற பலவற்றோடும் முரண்பட்டார் அதுதான் அவரின் வாழ்க்கையும் கவிதைகளும்.
பெரியார் மூடநம்பிக்கைகளோடு முரண்பட்டார் அதுதான் அவரின் சீர்திருத்தம்.
ஏசுநாதர் யூதர்களோடு முரண்பட்டார் அதுதான் கிருத்துவம்.
முகமதுநபி குறைசிகளோடு முரண்பட்டார் அதுதான் இஸ்லாம்.
முரண்படுவது இங்கு இவர்களல்ல சீனா, மக்களின் அறியாமை!
நட்பின் முரண்பாடும் நன்மை விளைவிக்கும் நணபா !
மகத்தான உண்மை சீனா
Post a Comment