நெருப்பெனும் பூதமாவாய் நீ நிகரற்று ஒளிதெறிப்பாய்

ஏதும் மீதமின்றி எக்கதவும் திறப்பின்றி
யாவும் இழந்தே இருட்சிறை வீழ்ந்தனையோ!

மனமே....
நீ ஏதும் இழக்கவில்லை
எத்துயருளும் மூழ்கவில்லை

இழந்தது ஏதாகிலும்
எள்ளளவும் தேடா இதயம் பெறு

ஜென்ம விடுதலையின் பூரணப் பொருள்
உன் உயிரில் பொரிக்கப்படும்

நெருப்பெனும் பூதமாவாய் நீ
நிகரற்று ஒளிதெறிப்பாய்

உனைத் தொடவும் அஞ்சும்
உலகுமேலேறி
என்றுமழியா பிரபஞ்சம் நிறைவாய்

Comments

இதயம் இரும்புப் பெட்டி அல்லவே இழந்ததை நினையாமல் இருப்பதற்கு . வரிகள் அருமை .
நல்ல வரிகள் சார் !

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

மகளின் பிறந்தநாள் வாழ்த்து