20160821

பொது அறத்தைப் 
பெரிதும் போற்றுபவர்கள் 
ஆண்கள் அல்ல
பெண்களே

*
அழுகை
ஒரு மிகப்பெரிய
ஆனந்தம்
கொடுந்துயரில் 
இருந்துபாருங்கள்
அழுகையின்
அருமை புரியும்

*
கவிதை எனக்குத்
தொழில் இல்லை
பொழுதுபோக்கு இல்லை
இதயப்போக்கு

*
அம்மா ஜெயலலிதா மீது போட்ட பொய் வழக்கையும் அவர் முறியடித்து ஊழலே இல்லாத தலைவியாய் பவனி வருகிறார்.
உங்கள் தலைவரோ (கலைஞர்) ஒரு பைசாவும் ஊழல் செய்யாத கண்ணியமிக்கவர்
தமிழ்நாடு இந்த இரு கரைபடியாத அற்புதர்களைக் கொண்டு வளமாக செழுமையாக இந்தியாவில் ஊழலே இல்லாத மாநிலமாக சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது
அதன் உண்மையான குடிமகன் நீங்கள் ஒருவரே.
ஐயா சாமி, ஆளை விடுங்கள். எனக்கு வேலை நிறைய இருக்கு.
வெட்டிப்பேச்சுக்கும் உங்கள் அறமற்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேறு தளம் செல்லுங்கள்.
என் நேரம் பொன்னானது!

*
குடித்துவிட்டுச்
செய்யத் தகுந்த காரியங்கள்
என்னென்ன?
குடித்துவிட்டுச் செய்தால்
எந்த எந்தக் காரியங்களைச்
சிறப்பாகச் செய்யலாம்?
குடிக்காமல் இருக்கும்போது
செய்யவே முடியாது
ஆனால் குடித்தால் சூப்பராகச் செய்யலாம்
என்னும் காரியங்கள் யாவை?

*
தண்ணியடிச்சிட்டு போனபோக்கில் திசையறியாமல் எசகுபிசகா கருத்திடுபவர்கள் என் நட்பு வட்டத்திலிருந்து நீங்களாகவே விலகிக்கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இதை தண்ணியில் இல்லாத நேரத்தில் வாசிக்கவும் 
*

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே