20160805


Padmanabhamn Sivathanupillai
வன்முறையை அவசியமென நியாயப்படுத்துவதால் மட்டுமே அது வாழ்கிறது.
சரியாச்சொன்னீங்க!
ஆதாயம் தேடுபவர்களால் அது வளர்க்கப்படுகிறது
அரசியல் வெற்றிக்காக அது உருவாக்கப்படுகிறது
ஊழலை மறைப்பதற்காக அது பயன்படுத்தப்படுகிறது
சொந்த வெறுப்பைப் பொதுவெறுப்பாய் ஆக்குவதற்காக அது கையாளப்படுகிறது
சுயநலத்தை மூடி மறைக்க அது எடுத்துக்கொள்ளப்படுகிறது
தான் செய்த பிழைகளைத் திசைதிருப்பிவிட அது தூண்டப்படுகிறது
பாதுகாப்பின்மை காரணமாக அது வெடித்துப் பரவுகிறது
ஒடுக்கப்படுவதிலிருந்து அது துளிர் விடுகிறது
தீண்டாமையால் அது எழுந்து எரிகிறது
ஆண்டான் அடிமை நிலைப்பாட்டால் அது நியாயமானதாய் ஆக்கப்படுகிறது
அதிகாரத்திற்கு எதிராக அது முளைக்கப்ப் பார்க்கிறது
அறிவில்லாதவர்களிடம் அன்பும் இல்லாவிட்டால் அதுதான் வழமையாகிறது
இன்னும் எத்தனையோ சொல்லலாம்..... சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
ஆனால் உண்மை அன்பு, அறம், அறிவு இம்மூன்றும் நிலைபெற்றிருந்தால் வன்முறை புதைக்கப்பட்ட இடத்தில் ரோஜாக்கள் பூக்கும்

*

Padmanabhamn Sivathanupillai
>>>>நல்லிணக்கமென்றால்
எப்படி எதனோடு யார்
யாரோடூ என்பதையெல்லாமறியஆவல்<<<<
உங்களோடும் என்னோடும் என்று முதலில் தொடங்குங்கள்.
எவரை சந்திக்கிறீர்களோ அத்தனை பேருடனும் என்று இறுதியாய் உறுதிகொள்ளுங்கள்

*
Kulam Rasool
------------------------------
//காட்டுமிராண்டிக் காலங்களில் மனிதர்களை நல்வழிப்படுத்த மகான்கள் தோன்றினார்கள். வாழ்க்கையை வகுத்துக்கொடுத்தார்கள்.//
அந்த மகான்களில் எத்துனை பேர் கடவுள் மறுப்பாளர்கள். யாராவது அறியத்தருவார்காளா? இடையில் வந்தது தானே இந்த தீய கொள்கை.
-----------------------------
தீய கொள்கை என்று சொல்லத் தேவையில்லை. அவரவர் வழி அவரவர்க்கு. யாருக்கும் தீங்கு இழைக்காத எந்தக் கொள்கையும் தீயகொள்கை அல்ல.

*
நம் வீட்டுப் பிரச்சினை 
சிறிதென்றும் 
அடுத்தவர் வீட்டுப் பிரச்சினை 
பெரிதென்றும் 
சொல்வதைவிட 
ஒரு துடைப்பத்தை எடுத்து
நம் அறையை
நம் வீட்டை
நம் ஊரை
நம் நாட்டைச்
சுத்தப்படித்தினாலே
போதுமானது மட்டுமல்ல
அவசியமானதும் கூட

*
புறாக்கள் கழுகுகள் என்றில்லை.... ஜாதி பிரிக்க விரும்புபவர்கள் எப்படியும் பிரிப்பார்கள். புறாக்கள் மட்டும் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.
அதில் எப்படி ஜாதி பிரிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
முதலில் ஜாதிப் புறா என்று ஒரு ஜாதி பிரிப்பார்கள்.

பிறகு சாம்பல் நிறக் கோடுடைய என்று ஒரு ஜாதி பிரிப்பார்கள்
பிறகு ஏதும் அகப்படவில்லையென்றால் தஞ்சாவூர் புறா பட்டுக்கோட்டைப் புறா என்பார்கள்
பிறகு கீழத்தெரு புறா மேலத்தெரு புறா என்பார்கள்
பிறகு கோவில் புறா மசூதிப் புறா என்பார்கள்.
நான் இப்படியெல்லாம் அவர்கள் பிரித்துக் கூறுவதைக் கூட குறையாகக் காணவில்லை. ஆனால் பிரித்தவற்றுக்கு இடையில் பாகுபாடுகள் பேசுகிறார்கள் பாருங்கள் அதைத்தான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாகுபாடற்ற சமுதாயமே அமைதி அன்பு அறிவு அறம் கொண்ட சமுதாயம்!

*
எதிராளி இணங்கினால்தான் நான் இணங்குவேன் என்றால் இணக்கம் என்பது வரவே வராது.
நாம் தான் இணங்க வேண்டும். மீண்டும் மீண்டும் இணங்க வேண்டும். தொடர்ந்து இணங்க வேண்டும். சளைக்காமல் இணங்கவேண்டும். சாகும்வரை இணங்க வேண்டும்.
இப்படியே ஒவ்வொருவரும் இணங்கினால்..... என்னாகும்?
அதோடு
இணக்குவோரைப் பாராட்டவேண்டும்
இணங்குவோரைப் புகழவேண்டும்
இணங்குவோரை உயர்வானவர்கள் என்று அடையாளம் காணவேண்டும்

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்