20160816

புலன்களின் தாகங்களை 
அறவழியில் மகிழ்விப்பதே 
வாழ்க்கை

*

தேவி பாலா Padmanabhamn Sivathanupillai///
இதுபோன்ற நாகரீகமற்ற கேள்விகளை
நான் கடந்து போகவே விரும்புவேன்
ஆனால் இந்த கேள்விக்கு
நான் பதில் சொல்வதே சிறப்பாக
இருக்கும் நான் மதம் மாறல இந்துதான்
இந்துவாக கேட்கிறேன்
நம் மதத்தின் சிறப்புகளை சொல்லுங்கள்
நானும் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்
இன்னும் சாதீயால் அழுகி சீழ்பிடித்து போன
நமக்கு இன்னொருவரை கேக்கும் தகுதி இருக்கா?
தலையீல் இருந்து பிறந்தவன்
மூக்கில் இருந்து பிறந்தவன்
காலில் இருந்து பிறந்தவன் என்று
மனிதனை பிரித்து சாதீயால்
அடிமைப்படுத்தும் இழிவான செயலைதானே இன்று வரை செய்கிறிர்
எல்லா மனிதனும்
அதிலிருந்துதான் பிறக்கிறான்
இதிலென்ன தாழ்வு உயர்வு
இப்போது சில நாள் முன்பு கூட
சாதியால் ஒரு சமுகத்தை கோவில் உள்ளே விட மறுத்தீர்களே
இப்படிப்ட்ட மதம் எனக்கு ஏன்
நீயும் சேர்க்க மாட்டாய் பிறகு நான்
எந்த மதம் மாறினால் உங்களுக்கு
எங்க வலிக்கு
காலமெல்லாம்! ஏன் நான் அடிமையா இருக்கனும்
என் விருப்பம் எதை நோக்கி போவது
என்பது
முதலில் நம் மேல் படிந்திருக்கும்
சாக்காடை புத்தியை சீர் செய்து
பிறகு பிறரை கேள்வி கேட்பதே சரியாக
இருக்கும்
உங்கள் கேள்விகளை என்னிடமே
கேளுங்கள்
நான் சொல்கிறேன்
அன்புடன் புகாரி
நன்றி தேவிபாலா, இப்படியெல்லாம் நான் பிறமதங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்றுதான் அமைதியாக இருக்கிறேன்.
இஸ்லாம் சொல்கிறது அவன் வழி அவனுக்கு உன் வழி உனக்கு. நீ அவனை மதிக்கத்தான் வேண்டும் வெறுக்கக்கூடாது என்று.
அந்த இணக்கத்தை நான் விரும்புகிறேன்.
நீ நடக்கும் நடத்தையைக் கண்டு ஒருவன் உன் பின்னால் வந்தால் அதுதான் சிறப்பானது.
எவன் கையையும் பிடித்து நீ இழுத்துவிடாதே!
இதுதான் இஸ்லாத்தின் கட்டளை!

*
உலகெலாம் அறம் தழைக்க வேண்டும் அதற்கொரு வழி சொல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
யாருமே பதில் சொல்லமாட்டேன் என்கிறார்கள்!

*

புலன்களைச் சாகடித்து
பக்தி என்ற பெயரில்
புதைவதை
இறைவன் விருப்பவில்லை

*
////தாயையும் தந்தையையும்
இஸ்லாம் பெரிதும் மதித்துப் பாராட்டச் சொல்கிறது.
அவர்களுக்குச் சேவை செய்யச் சொல்கிறது.
ஆனால் அந்தத் தாய்க்கும் தந்தைக்குமே
அறம் என்ற பாடம் சொல்லியும் தருகிறது.///
>>>>>>>>
முகமதுநபிகள் என்ற
புனிதரை இந்த உலகிற்கு தந்தது
ஒருதாய்தானே
அன்பையும் அறத்தையும்
அவருக்கு போதித்து வளர்த்து
இந்த சமுகம் சீர்பட
வாழ்வெல்லாம் சேவை செய்த நபிகளை
உருவாக்கியது தாய் எனும் தெய்வம்
நானும் அதைதானே சொல்கிறேன்
எனக்கு சரியான பதில் தரவும்
>>>>>>>>>>
அன்பை அள்ளித் தருவதில்
தாய் நிகரில்லாதவள்
பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வதில்
அவளை விஞ்ச யாருமில்லை
தன் சுகங்கள் எல்லாம் இழப்பாள்
தன் உறக்கமெல்லாம் துறப்பாள்
தன் உயிரையும் தருவாள்
இப்படியாய் தாயின் பெருமையைப்
பேசிக்கொண்டே இருக்கலாம்
நாளும் பொழுதும்
அன்பு, பணிவிடை, தியாகம்
இந்த மூன்றின் மொத்த உருவம்தான்
தாய் என்று சுருக்கமாகவும் சொல்லலாம்
நாம் இங்கே அறம் பற்றிப் பேசுகிறோம்.
அறம் என்பது அன்பு அல்ல
அறம் என்பது பணிவிடை அல்ல
அறம் என்பது தியாகம் அல்ல
தாயே இல்லாத பிள்ளைகளுக்கும்
அன்பைத் தர வழிசெய்வது அறம்
பணிவிடை செய்ய வழிசெய்வது அறம்
தியாகம் செய்ய வழிசெய்வது அறம்
ஒரு தாய் சில பிள்ளைகளுக்குத்தான்
தாயாய் இருக்கிறாள்
ஆனால் அறம் என்பது
உலகின் அனைத்துக்
குழந்தைகளுக்கு மட்டுமல்ல
வயோதிகர்களுக்கும்
அனாதைகளுக்கும்
தூக்கியெறிப்பட்டவர்களுக்கும்
தாயாய் இருக்கிறது
அறம் மட்டும் மண்ணில் நிறைந்துவிட்டால்
ஒப்பில்லாத் தாயின் அன்பு
ஏதோ ஓர் மூலையில் இருக்கும்
யாரோ ஒருவருக்கும் பூரணமாய்க் கிடைக்கும்
பெற்ற குழந்தையைக்
குப்பைத் தொட்டியில் இடும் நிலை
ஒரு தாய்க்கு ஏன் வந்தது
உலகில் அறமின்றிப்
போனதால்தானே
வயிற்றில் இருப்பது
பெண்சிசு என்றறிந்ததும்
அதை கலைக்கும் நிலை
ஒரு தாய்க்கு ஏன் வந்தது
உலகில் அறமின்றிப்
போனதால்தானே
பெற்ற பிள்ளைகளைக்
கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு
தானும் மடியும் நிலை
ஒரு தாய்க்கு ஏன் வந்தது
உலகில் அறமின்றிப்
போனதால்தானே
ஒரு பிள்ளைக்கு
அன்பை அள்ளித் தரும் தாய்க்கு
இந்த உலகை மிகச் சரியாகச்
சொல்லித் தரத் தெரியுமா?
அதைச் செய்ய
தந்தையல்லவா தேவையிருக்கிறது
தாயும் தந்தையும் சேர்ந்து
சொல்லித் தருவனதானே
அன்பும் அறமும்
அந்தத் தாய்க்கும் தந்தைக்கும்
எந்த அளவுக்குத் தெரியுமோ
அந்த அளவுக்குத்தானே
அன்பையும் அறத்தையும்
சொல்லித்தரமுடியும்
உலக மக்கள் எல்லோரும்
நலம் வாழத் தேவையான
அறத்தைச் சொல்லித்தர
தாய்க்கும் தந்தைக்குமே
கல்வி தேவையில்லை
அந்தக் கல்வியைத் தருவதுதானே
மார்க்கத்தின் பெரும்பணி
நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்பதிலே என்றால்
இங்கே நிறைந்திருக்கும்
தீயவர்கள் எல்லோரும் தாயின்
வளர்ப்புதானே?
தாய் என்பவள்
உலகப் பொது அறம் அறியாது
தன் பிள்ளைக்கு சொல்லித் தரும்
எல்லாம் சுயநலம் கொண்டதல்லவா
முகம்மது நபி என்கிற புனிதரைத்
தந்த தாய்க்கு அன்புதான் தெரியும்
ஆனால் உலக அறம் தெரியுமா
தெரிந்திருந்தால்
அந்தத்தாய்தான்
இஸ்லாத்தைத் தந்திருப்பார்
ஆனால
ஒரு முக்கிய செய்தியை
நான் இங்கே கூறவேண்டும்
அண்ணல் நபிகளாரின் தந்தை
அவர் பிறக்கும் முன்னேயே
இறந்துவிட்டார்
அவரின் தாய்
நபிபெருமானாருக்கு
விபரம் தெரியும் முன்பேயே
மறைந்துவிட்டார்
அந்த நபிபெருமானருக்க்குத்தானே
மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும்
உலக அறத்தின் அவசியம்
என்னவென்று

*
உலக மக்கள் அனைவருக்குமான
ஒரு பொது அறம் வளர்க்க 
நாம் என்ன செய்யவேண்டும்

*
இந்த உலகம் வன்முறையற்றுப் போக 
ஒரு சிறு கல்லையாவது 
நாம் நகர்த்துவோமே!
*
ஜெ. அப்துர் ரஹ்மான் ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம், ஹலால் என்பது இறைவன் அனுமதித்த ஒழுக்க முறைதானே
>>>>>>>>>>>
அருமையான விளக்கம் தந்தீர்கள். அற்புதமாய் இருக்கிறது.
அறம் என்பதே ஹலால் என்பது ஏகப்பல இஸ்லாமியர்களுக்கே தெரியாது.
உங்கள் விளக்கம் எல்லோரையும் சென்றடையட்டும்.
நன்றிகள் பல!

*
இணக்கம் கேட்டேன்
ஈட்டி எறிகிறார்கள்
அறம் சொன்னேன்
அடிக்க வருகிறார்கள்
அன்பு போற்றுகிறேன்
அசராமல் தூற்றுகிறார்கள்
உன்வழி உனக்கு என்றேன்
எங்கள் வழி கொடுஞ்சொல் என்கிறார்கள்
என்வழி எனக்கு என்றேன்
உனக்கு வலி தருவோம் என்கிறார்கள்

*
நம்மைச் செதுக்குவோம். இங்குள்ளோர் யாவரும் அவரவரை அவரவர் செதுக்கிக்கொள்வோம்.
அதற்கு நாம் அனைவருமே துணை நிற்போம்
முகநூல் முழுவதும் இந்த நற்பணி வளரட்டும் முதலில்...
அப்படியே இந்த உலகம் முழுவதிலும் நுழைவோம்...
ISIS RSS எல்லாம் களத்தில் நிற்கிறார்கள்
நல்லவர்கள் நாம் முடங்கிக்கிடப்பதா?
அறம் உயர்த்தி அன்பு போற்றி அறிவு வளர்த்து ஆயிரம் ISIS வந்தாலும் RSS வந்தாலும் அடக்கி அழித்து அகிலம் காப்போம்!

*
அன்றுமுதல் இன்று வரை அறம் எத்தனையோ அறிஞர்களால் வகுத்துக் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஏத்தனையோ மார்க்கங்களால் அழகாகச் சொல்லப்பட்டுவிட்டது.
இன்றைய கல்வி அறிஞர்களால் அவற்றைத் தொகுத்து பொதுவான ஒன்றைத் தேர்வு செய்து கல்வியாய்ப் போதிப்பது இயலாத காரியமா?
வெறும் வயிற்றுக்கே கல்வி வளர்த்து என்ன கண்டோம்?
வாழ்க்கைக்குக் கல்வி வளர்ப்பதல்லவா மிக மிக அவசியம்.
*
>>>>
என் கேள்வி மிக எளிதான சார்
ஏதேனும் ஒரு மதத்தை
பின் பற்றாமல்
ஒரு மனிதனால்
அறத்தோடு வாழ முடியாதா???
இதற்கு விடை தெரிந்தால் போதும்
தெளிவுறுவேன்
---தேவி பாலா
>>>>>
நீங்கள் எந்தக் கடவுளையும் நம்ப வேண்டாம்
கடவுள் மறுப்பாளராகவே இருங்கள்
அதில் யாதொரு பிழையுமில்லை
சில நட்டங்களே உண்டு
ஆனால் அதுபற்றிய கவலை
உங்களுக்கு இல்லை எனும் பட்சத்தில்
அவை உங்களைப் பொருத்தவரை
நட்டங்களே இல்லை
கடவுள் நம்பிக்கை என்பதை எவரும்
வலுக்கட்டாயமாக ஏற்கவும் முடியாது
விலக்கவும் முடியாது
இருந்தால் அது இருக்கவே செய்யும்
இல்லாவிட்டால் அது இல்லாமலேயே போகும்
ஆனால் ஆள்மனதில் இருந்து
கொள்கைகளுக்காக இல்லாமலிருந்தால்
நிச்சயம் ஒருநாள்
வெடித்துக்கொண்டு வெளிவரும்
அப்படியானவர்களில்
கண்ணதாசன் ஒருவர்
எம் ஜி ஆர் ஒருவர்
கலைஞரையும் நான் இதில்
சேர்த்துக்கொள்வேன்
அவர் உண்மை மறுப்பாளராக
இந்த விடயத்தில் இருக்கிறார்
என்றே எனக்குத் தோன்றுகிறது
எது எப்படியோ
இதுதான் முடிவு
நீங்கள் கடவுள் மறுப்பாளராகவே
தாரளமாக இருக்கலாம்
அடுத்து மதம்!
நீங்கள் எந்த மதத்திலும்
இருக்கத் தேவையில்லை
அப்படியாரும் உங்களைக்
கட்டாயப்படுத்தவும் முடியாது
மதத்துக்குள்ளேயே
இருந்துகொண்டு
மதமற்ற நிலையில் இருபோரே
என்னைப் பொறுத்தவரை
ஏராளமானோர்
ஆனால் அறம் போதித்து
வாழ்க்கையின் வழிகளைச் சொல்லித் தந்ததில்
மார்க்கங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு
வீதியில் சொல்லப்படும்
எதையும் கேட்காதீர்கள்
எல்லா மார்க்கங்களையும்
அதன் அடிப்படை நூல்களை எடுத்துப் படியுங்கள்
உங்கள் மனதுக்கு நெருக்கமானதாக
ஏதோ ஒரு மார்க்கம் இருக்க வழி இருக்கிறது
அந்த மார்க்கத்திலும்
உங்களுக்கு ஏற்புடையவைகளை மட்டும்
ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள்
நீங்கள் அந்த மார்க்கத்தினராய்
ஆகத் தேவையில்லை
ஆனால் ஒன்று
ஏதோ ஒன்றைக் கையில் எடுத்தபின்
எந்த நிலையிலும் மாறாமல்
அதை அப்படியே பின்பற்ற வேண்டும்
அந்த நிர்பந்தத்தைத் தரத்தான்
மார்க்கமும் இறைவனும்
அதை உங்களாலேயே
தானாகவே செய்யமுடியும் என்றால்
எப்போதும்..... செய்யமுடியும் என்றால்
மார்க்கமும் வேண்டாம் இறைவனும் வேண்டாம்
இயல்பிலேயே
உங்களிடம் அறம் இருப்பதால்
நீங்கள் சரியான பாதையைக் கண்டுபிடிப்பீர்கள்
அதே சமயம்
இப்போது உலக மக்கள்
அனைவரைப் பற்றியும் சிந்தியுங்கள்
எத்தனை வகை மக்கள்
எல்லோரும் உங்களைப் போலவா?
சிலருக்கு அறிவு உண்டு
சிலருக்கு இல்லை
சிலர் நல்லவர்
சிலர் மூர்க்கர்
அவர்களுக்கெல்லாம்
எதை எப்படிப் பரிந்துரைப்பது என்பதை
அறிய முயற்சி செய்யுங்கள்
எல்லோரும் மாறினால் மட்டுமே
நாம் வாழும் சூழல் நமக்கு அமையும்
மாறாதவர்களை என்ன செய்யலாம்
என்றும் சிந்திக்க மறக்காதீர்கள்
ஒற்றை மரம் தோப்பாகாது
தோப்புக்குள்
பாதுகாப்பாய் இருக்கும்
அழகிய கூட்டுக்குள்தான்
நம் உட்கிளி
நிம்மதியாய் உறங்கமுடியும்
அந்தத் தோப்புதான்
வன்முறையற்ற உலகம்

*
இறைவனுக்கு இணைவக்காதே என்கிறது இஸ்லாம்.
இணைவைப்பதன் மூலம் இறைவன் பலராய் பெருகுகிறான். பலகோடி கடவுளர்களாய் ஆகிறான். அறம் பொதுநிலை மாறி ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் மாறிநிற்கிறது. அதனால் வேற்றுமைகள் அதிகரிக்கிறது. வன்முறை எழுகிறது
இறைவன் ஒருவனே, அவன் உருவமில்லாதவன்.
இறைவன் மிகப் பெரியவன். அவனிலும் பெரிதென்று ஒன்றில்லை, ஏதுமில்லை, எதுவுமில்லை!
அளவற்ற அன்பும் நிகரற்ற கருணையுமே அவன் குணங்கள்.
இதுதான் இஸ்லாம் சொல்லும் இறைவனின் முக்கியமான வர்ணனை.
இனி அவரவர் விருப்பம்போல் ஆய்ந்து தெளிந்துகொள்ளவேண்டியது அவரவர் பணி.
இதில் முட்டிக்கொண்டு நிற்கவேண்டிய அவசியமே இல்லை.
அதன் பெயர்தான் இணக்கம்.
உன் வழி உனக்கு
என் வழி எனக்கு
எந்த வழி யாருக்குச் சரியெனப் படுகிறதோ அவ்வழி செல்ல எல்லோருக்கும் முழு உரிமை உண்டு.

*
அறம் என்பது 
அன்பு அல்ல
கருணை அல்ல
இணக்கம் அல்ல
இன்பம் அல்ல
ஆனால்
அறம் இருந்தால்
இவை யாவும் கிட்டும்
அதுவே அறம்
*
நீ செய்யும் பாவங்கள் கணக்கெடுக்கப்படும். நீ செய்யும் புண்ணியங்கள் கணக்கெடுக்கப்படும். புண்ணியத்திலிருந்து பாவம் கழிக்கப்படும். புண்ணியம் மீந்தால் நீ சொர்க்கம் செல்வாய். பாவங்கள் மீந்தால் நீ நரகம் செல்வாய்-- இது இந்துமதம்
நீ செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டால் உன் பாவங்கள் எல்லாவற்றையும் ஈசா ஏற்றுக்கொள்வார். நீ எப்படியும் சொர்க்கம் போவாய் --இது கிருத்துவம்
நீ செய்யும் பாவங்கள் கணக்கெடுக்கப்படும். நீ செய்யும் புண்ணியங்கள் கணக்கெடுக்கப்படும். செய்த பாவத்துக்கு நரகமும், செய்த புண்ணியத்துக்கு சொர்க்கமும் விதிக்கப்படும் --இது இஸ்லாம்

*
உலக அறம் வகுத்துத் தந்த ஒவ்வொருவரும் தாயுமானவர் தந்தையுமானவர்.
அவர்களை வணங்குவதை விடுவிட்டு அவர்களின் சொல்கேட்டு வழிநடப்பது அவர்களுக்கு மிகப் பெரிய புகழையும் பெருமையையும் நன்றியையும் சேர்க்கும்.
அவர்களின் மனிதநேய சேவைக்கு அது ஒன்றே முழு அர்த்தம் தரும்.
கடவுள் இல்லை என்று சொல்லி பொது அறம் பேணி வாழும் வாழ்வும் உறுதியாக அறவாழ்வுதான்.
அறத்தை வலியுறுத்த கடவுள் நம்பிக்கை என்பது ஓர் ஆக்கப் பூர்வமான பெருஞ் சக்தி.
அந்தச் சக்திக்கே அவசியமில்லை, துளியும் மாறாமல் நாங்கள் அறவாழ்வு வாழ்வோம் என்றால், வாழ்ந்து காட்டினால் அதில் துளிப்பிழையும் இல்லை!

*
வேந்தன் அரசு >>>எனக்கு என ஒரு அறம் உண்டு,<<<
அது எல்லோருக்கும் நன்மை பயப்பதாய் இருந்தால் அதுவே போதும்.
ஆனால் உங்களிடம் இணக்கம் என்ற ஒரு மிகப்பெரிய முக்கியமான அறம் இல்லை
ஆகவே உங்கள் அறம் குறைபட்டது.
குறையுடை அறமுடையவர் என்று சொல்வதைவிட உங்களிடம் அறம் இல்லை என்றே சொல்லிவிடலாம் !

*
ஒரு கவிஞன் 
தன் மனதுக்குத் தரும் 
அக்கறையை 
உடலுக்குத் தரமுடியாத
மனதையே பெற்றிருக்கிறான்
*
மனதோடு மனதாக 
வாழாத வாழ்வெல்லாம் 
மரணத்தின் சுவடுகள்

*
குடித்துவிட்டுக் காரோட்டாதே
குடித்துவிட்டுக் கவிதை எழுதாதே

*
ஒவ்வொருவர் கையிலும் உயிர் என்னும் அற்புதம் தரப்பட்டுள்ளது.
அதை உள்ளம் என்னும் சிறகுகளில் ஏற்றி உயரே உயரே பறப்பது மட்டும் பேரானந்தம் அல்ல
உடல் என்னும் கூட்டுக்குள் உறங்க வைப்பதும் பேரானந்தம்தான்
ஒன்றைப் பற்றி மற்றதைக் கைவிட்டவர் உயிரிருந்தும் உடலற்றவராகவோ அல்லது உடலிருந்தும் உயிரற்றவராகவோ ஆவார்

*
தன் உயிரைக்
கோப்பையில் நிரப்பிக்
குடிக்கிறான்

*
பொது அறம் 
உலகெங்கும் நிறைந்தால்
தானே அறியாத் தற்கொலைகள் 
குறையும்

*
இணக்கம் இணக்கம்
அதற்கு என் வணக்கம்

*
கலைஞரின் இலக்கியத்திற்கு நான் பெரும் ரசிகன். மிகச் சிறுவயதிலேயே அவரின் எழுத்தினுள்ளும் குரலினுள்ளும் என்னை வெகுவாக இழுத்து அணைத்துக்கொண்டார்.
ஆனால் கலைஞரின் அரசியல் அறிவிற்கு நான் ரசிகன் என்றாலும் கலைஞரின் அரசியல் அட்டூலியங்களுக்கு நான் முதல் எதிரி.
கவிஞர்களின் முகவரிகளில் கலைஞரின் பங்கு நிறைய உண்டு

*
Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்