47

மொட்டுகள்தாமே
மலர்களாய்ப் பூக்கும்
இருதய மணம்வீசி
காதலாய்ப் பூத்தபின்னர்
எப்படி உன் விழிகள்
மொட்டுகளாய் மூடிக்கொண்டன

உன் நினைவுகள் முரசுகொட்ட
என் இமைகள் ஒளிகின்றன
விழிகள் சிவக்கின்றன
பொழுதுகள் கனக்கின்றன

பளு தாங்காத வண்டிச்சக்கரமாய்
என்னுயிர் கிறீச்சிட்டுக் கதறுவது
இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

ருத்ரா said...

காதல் கனமழையை
காலப்பரிமாணம் எனும்
ச‌ல்ல‌டையில் செய்த‌
ஒரு குடையைப்
பிடித்துக்கொண்டு அல்ல‌வா
க‌ள‌ம் இறங்கியிருக்கிறீர்க‌ள்
தூங்கிவிடுப‌வ‌னுக்கு
தூங்கா விள‌க்கு தேவையில்லை.
தூண்டியும் தூண்டாம‌லும்
ஒரு கீற்று விள‌க்கை
உங்க‌ள் இர‌வுக்க‌ட‌லுக்குள்
தூண்டில் வீசிய‌து அவ‌ள் அல்ல‌வா!


அன்புக்க‌விஞ‌ர் புகாரி அவ‌ர்க‌ளே
உங்க‌ள்
"ஒரு பொழுது" க‌விதை
விர‌க‌ அக்கினியிலிருந்து
இற‌ங்கும்
"ஒரு விழுது."
அற்புத‌ம் அபார‌ம்!


அன்புட‌ன்
ருத்ரா