50

நட்பைத் தவிர்க்கலாம்
காதலைத் தவிர்க்க இயலாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

//பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா//

கிள்ளுவதைத் தவிர முடியாது..

//சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க//

சபாஷ்..

//
காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்//

great-nga..
பின்னிட்டீங்க. அருமை.
கலகலப்பிரியாவுக்கும் வானம்பாடிகளுக்கும் நன்றி
//காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்..//

புகாரி,

யாவுமே...!

காதல்.
நல்லாயிருக்கு... பாராட்டுக்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி சத்ரியன்
சேவியர் said…
//காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்//

அதானே பார்த்தேன்.. புகாரி காதல் எழுதினா சும்மாவா !
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சேவியர்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்