கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல

ஏறிவர வேண்டும் நல் அறிவு - அது
        ஏனோ உந்தன் மண்டலத்தில் குறைவு

ஆயினும் என் அன்பில் குறைவில்லை - ஆம்
        ஏனெனிலோ அது உந்தன் தவறே இல்லை

இறங்கிவர மனம் மட்டும் போதும் - அதை
        மறுக்கும் உன் நெஞ்சொருநாள் மாறும்

கிறங்கித் தினம் கூத்தாடிக் குலவ - இந்தக்
        கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல

விடைபெற்றுப் பாழாகும் தினங்கள் - பெரும்
        வெற்றியென நினைக்கின்ற ரணங்கள்

அடைகாத்த முட்டைகளும் குஞ்சாகும் - ஆனால்
        சினம்காத்த நெஞ்சமோ நஞ்சாகும்

கடக்கின்ற நாளேதும் மீளாது - என்றும்
         கடப்பாறை குடலுக்குள் வேகாது

தடையில்லா வாய்க்காலில் நீரோடும் - தினம்
         தடுகின்ற உள்ளத்தால் எது வாழும்

Comments

/// அடைகாத்த முட்டைகள் குஞ்சாகும் - ஆனால்
சினம்காத்த நெஞ்சமோ நஞ்சாகும் ///

அழகிய சொல்லாடல்...

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே