அன்பும் அமைதியும் நிறைக

இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.

ஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது "அன்பும் அமைதியும் நிறைக" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா?

இஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது "அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்" பிறகு அங்கே வெட்டு குத்து பேசுவதற்கோ ஆதரிப்பதற்கோ இடமுண்டா?

உண்மையான இஸ்லாம் குர்-ஆனில் உள்ளது. அதை முழுமையாக நடைமுறியில் காண இன்னும் எத்தனைக் காலமோ என்று மனம் ஏங்குகிறது. இஸ்லாத்தில் பாதிக்குப் பாதி உண்மையான மார்க்கச் செயல்பாடுகளின் அறிதலில்லாதவர்களாய் இருப்பது வேதனையாய் இருக்கிறது. ஆனால் அதைவிட வேதனை ஏதெனில்... பிற மதங்களில் இருப்பவர்களைப்போலவே இஸ்லாத்திலும் ஒரு சதவிகிதத்தினர் தீவிரவாதிகளாய் இருப்பதுதான்.

3 comments:

தருமி said...

//பிற மதங்களில் இருப்பவர்களைப்போலவே இஸ்லாத்திலும் ஒரு சதவிகிதத்தினர் தீவிரவாதிகளாய் இருப்பதுதான்.//

இதில் உள்ள விழுக்காடு வித்தியாசங்களைப் பற்றி நான் அடிக்கடி எழுதியுள்ளேன்.
:(

தருமி said...

உங்கள் நல்ல எழுத்துகள் நல்ல பயன் பெற விழைகிறேன்.

mohamedali jinnah said...

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன...
மனிதன் பிறக்கும் போது ஒன்றும் அறியாத பாலகனாகவே பிறக்கிறான். நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் வளர்க்கப் படும் விதத்தினாலும் சூழ்நிலையாலும் மாற்றப்படுகிறான். .
இறைவன் மனிதனையும் படைத்து சைத்தானையும் படைத்துள்ளான். அந்த சைத்தானிடமிருந்து பாதுகாப்பு நாட இறைவனைத்தான் நாட வேண்டும்.
http://nidurseasons.blogspot.in/2013/02/blog-post_4055.html