* * *
63 வால் வீச்சு

புதுத்துணி வெட்ட
பொல்லாக் கத்தரியும் அழும்
உனக்கு மட்டும் ஏன் நண்பா இத்தனை
ஆனந்தம்

முற்றும் அறிந்தவன் மேதினியில் இல்லையென்ற
பழைய தத்துவம் வேண்டுமானால் ஓர் ஓரமிருக்கட்டும்
புல் தொட்டுப் பொதிகைவரை உனக்குப்
பலவும் தெரியும்தான் ஒப்புக்கொள்கிறேன்
அவற்றோடு உன் நெஞ்சத் தெருக்களில்
பண்பு ரதங்களும் மெல்ல
ஊர்ந்து வந்தாலல்லவா நீ மனிதன்

வெட்டரிவாளாய் நீட்டி நிற்கும் உன்
கொம்புகளைக் கொஞ்சம்
நறுக்கிக்கொள்ளக் கூடாதா
புதியவனின் முகத்தைக் குதறுவதால் மட்டுமே
உன் புத்திக்கூர்மை சபைச்சுடர் வீசிவிடுமா

உன்னிலும் இளையவனிடமிருந்து
ஓர் ஒப்பற்ற கலைவெள்ளம் பொங்கிவந்தால்
நீயேன் தட்டுத் தடுமாறி தறிகெட்டுக் கொதிக்கின்றாய்
நீ சிந்தித்தும் காணாததை
உன் இளையவன் எளிமையாய்க் காண்பான்
என்று உனக்குத் தெரியாதா

வஞ்சனை மகுடி ஊதி
வார்த்தைகளைக் கருநாகமாய்
வளைத்துப் போட்டு வம்புக்கிழுக்கிறாயே
பெட்டிக்குள் அடங்கு நண்பா

உன் அழிவை உன் வால் வீச்சால்
நீயே வரவேற்காதே
காலம் வாள் வீசும்போது
உன் வாலோடு சேர்த்துத் தலையும்
துண்டாடப்படும்

4 comments:

சாந்தி said...

வெட்டரிவாளாய் நீட்டி நிற்கும் உன்
கொம்புகளைக் கொஞ்சம்
நறுக்கிக்கொள்ளக் கூடாதா

ம். நீண்டிருப்பதே நினைவில்லாமலோ


புதியவனின் முகத்தைக் குதறுவதால் மட்டுமே
உன் புத்திக்கூர்மை சபைச்சுடர் வீசிவிடுமா

உன்னிலும் இளையவனிடமிருந்து
ஓர் ஒப்பற்ற கலைவெள்ளம் பொங்கிவந்தால்
நீயேன் தட்டுத் தடுமாறி தறிகெட்டுக் கொதிக்கின்றாய்
நீ சிந்தித்தும் காணாததை
உன் இளையவன் எளிமையாய்க் காண்பான்
என்று உனக்குத் தெரியாதா
தன் மேலே நம்பிக்கையற்றிருப்பதால் பயம்.வஞ்சனை மகுடி ஊதி
வார்த்தைகளைக் கருநாகமாய்
வளைத்துப் போட்டு வம்புக்கிழுக்கிறாயே
பெட்டிக்குள் அடங்கு நண்பா

உன் அழிவை உன் வால் வீச்சால்
நீயே வரவேற்காதே
காலம் வாள் வீசும்போது
உன் வாலோடு சேர்த்துத் தலையும்
துண்டாடப்படும்

ம் நன்று.

சீனா said...

உண்மை உண்மை புகாரி

வாழ்வின் ஆதாரத்தினை - எப்படி வாழ வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டும் கவிதை

இளையவன் எளிமையாகத் தான் காண்பான் - இது நிதர்சன உண்மை

தட்டுத் தடுமாறி தறி கெட்டுத் தவிப்பது நம் வழக்கம் - மாற வேண்டாமா

காலத்தின் வாள் தலையினையும் துண்டிக்கத் தயங்காது

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

பூங்குழலி said...

முற்றும் அறிந்தவன் மேதினியில் இல்லையென்ற
பழைய தத்துவம் வேண்டுமானால் ஓர் ஓரமிருக்கட்டும்
புல் தொட்டுப் பொதிகைவரை உனக்குப்
பலவும் தெரியும்தான் ஒப்புக்கொள்கிறேன்
அவற்றோடு உன் நெஞ்சத் தெருக்களில்
பண்பு ரதங்களும் மெல்ல
ஊர்ந்து வந்தாலல்லவா நீ மனிதன்
ரொம்ப சரி


வெட்டரிவாளாய் நீட்டி நிற்கும் உன்
கொம்புகளைக் கொஞ்சம்
நறுக்கிக்கொள்ளக் கூடாதா

நல்லா இருக்கு இது

புதியவனின் முகத்தைக் குதறுவதால் மட்டுமே
உன் புத்திக்கூர்மை சபைச்சுடர் வீசிவிடுமா

உன்னிலும் இளையவனிடமிருந்து
ஓர் ஒப்பற்ற கலைவெள்ளம் பொங்கிவந்தால்
நீயேன் தட்டுத் தடுமாறி தறிகெட்டுக் கொதிக்கின்றாய்
நீ சிந்தித்தும் காணாததை
உன் இளையவன் எளிமையாய்க் காண்பான்
என்று உனக்குத் தெரியாதா

(இது நேற்றைய இணையத்தோரே கவிதையின் தொடரா ?)

வஞ்சனை மகுடி ஊதி
வார்த்தைகளைக் கருநாகமாய்
வளைத்துப் போட்டு வம்புக்கிழுக்கிறாயே
:))))))))))

புன்னகை மன்னன் said...

அதெப்படிங்க ஆசான்

அழகான நறுக்கான பதில்...

இதுவும் புரியுமா... திருந்துமா... அடங்குமா.....