67

சுரக்காத மார் சுரந்து
உனக்காகப் பாலூட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மடியில் அள்ளிவைத்துச்
சோறூட்டிச் சீராட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

காலை எழுந்ததும்
உன் தலைகோதி நான் மயங்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

சிணுங்கிச் சிணுங்கி உன்னோடு
பொழுதெலாம் விளையாட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

எண்ணி முடியாமல்
ஈரம் குறையாத இதழ் முத்தமிட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

இடைவெளியும் இடைவலியும்
இல்லாமல் கட்டித்தழுவ
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விட்டுப் பிரியாமலும்
தொட்டு அகலாமலும்
மூச்சோடு மூச்சாகி சுவாசிக்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

உயிரோடு உயிர்வைத்து
ஓருயிராய் உருகி ஒன்றாக
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

6 comments:

சீனா said...

அன்பின் புகாரி

அருமை அருமை கவிதை அருமை

காதல் ரசம் சொட்டச் சொட்ட - கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்க - ஒரு அழகிய கவிதை. மிகவும் ரசித்தேன் - மகிழ்ந்தேன்.

காதலையினைக் காதலிப்பது எதற்காக ?

காதலன் கூறுகிறான் காரணங்கள்

பாலூட்ட வேண்டுமாம்
சோறூட்ட வேண்டுமாம்
சீராட்ட வேண்டுமாம்
தலை கோத வேண்டுமாம்
சிணுங்கலோடு விளையாட வேண்டுமாம்
எண்னி முடியாத ஈரம் குறையாத முத்தம் இட வேண்டுமாம்
இடைவெளியும் இடைவலியும் இலலாத கட்டித்தழுவல் வேண்டுமாம்
மூச்சோடு மூச்சாய் உயிரோடு உயிராய் காதலிக்க வேண்டுமாம்

காதல் பித்தம் தலைக்கேறி - கட்டுக்கடங்காமல் - கற்பனை ஊற்று பெருக்கெடுத்தோடி - அருமையான கவிதை -அனுபவித்து எழுதிய கவிதை

எழுதுகோலின் நுனி எழுதவில்லை புகாரி
உள்ளத்தின் அடித்தளத்தில் இருக்கும் கவிதை எழுதும் திறமை
உணர்ச்சி கொப்பளித்து எழுதுகிறது புகாரி

நன்று நன்று நல்வாழ்த்துகள்

பூங்குழலி said...

தாயன்போடு கூடிய காதல் போலிருக்கிறது ...நல்லா இருக்கு

Unknown said...

ஆம் பூங்குழலி, தாயன்பு மட்டுமல்ல, கவிதையில் சொல்வது கொஞ்சம் சொல்லாதவற்றையும் நாம் புரிந்துகொள்ளலாம். தாயுணர்வைத் தொட்டு காதல் ஒருங்கிணைப்பு வரை எல்லாமானவளாய்ப் பார்க்கிறான் காதலன் என்றும் கொள்ளலாமா?

அன்புடன் புகாரி

புன்னகையரசன் said...

அன்புல என்ன தாயன்பு... தந்தை அன்பு... மனைவி அன்பு...

எல்லாமே காதல் தானே... அவதான் எல்லாம் அப்படினா... அவளுக்காக தான் எல்லாம் இல்லையா.... அதனால் அன்பு அத்தனை பிரிவும் அவள் தான்... அவளுக்குதான்....

வழக்கம் போல் அருமை ஆசான்..

சிவா said...

சுரக்காத என் மார்சுரந்து
உனக்காக பாலூட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

வித்தியாசமான கற்பனை ஆசான்

என் மடியில் அள்ளிவைத்து
சோறூட்டிச் சீராட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

காலையில் எழுந்து
உன் தலைகோதி நான் மயங்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

சிணுங்கிச் சிணுங்கி உன்னோடு
பொழுதெலாம் விளையாட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அட அட அட

எண்ணி முடியாமல்
ஈரம் குறையாத இதழ் முத்தமிட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

இடைவெளியும் இடைவலியும்
இல்லாமல் கட்டித்தழுவ
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விட்டுப் பிரியாமலும்
தொட்டு அகலாமலும்
மூச்சோடு மூச்சாகி சுவாசிக்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

உயிரோடு உயிர்வைத்து
ஓருயிராய் உருகி ஒன்றாக
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
மிக மிக மிக மிக அருமை ஆசான்

ஆயிஷா said...

ஆசான் கவிதை அருமை. காதலிக்காதவர்களையும் காதலிக்க வைத்துவிடுவீர்கள் நீங்கள். நானும் முயன்று தான் பார்க்கின்றேன். முடியவில்லை. அருமையான கற்பனை வளம்.

அன்புடன் ஆயிஷா