61

கம்பிகளுக்குப் பின் அலையும்
கைதிகளைப்போல் அலைகின்றன
உன் கண்கள்

இதய நடுக்கத்தின் அதிர்வுகளைக்
கசிந்த வண்ணம் இருக்கின்றன
உன் கைவிரல்கள்

ஆழ்மன ஆசைகளைப் படம்பிடித்துக்காட்டும்
ஆப்பிள் திரைகளாய் ஒளிர்கின்றன
உன் கன்னங்கள்

மௌன கன்னிமரா நூலகத்தின்
அத்தனை நூல்களுமாய் விரிந்துகிடக்கின்றன
உன் இதழ்கள்

மறைக்க நினைத்து
மறைக்க நினைத்து
மேலும் அதிகமாக வெளிக்காட்டாதே

மேகம் முழுவதும் சூல்கொண்ட மழை
மனம் முழுவதும் ஆக்கிரமித்த காதல்
வெளியேறியே தீரும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சக்தி said…
அன்பின் நண்பரே புகாரி,

காதலின் கனத்தை கவிநயத்துடன் வெளிப்படுத்தியமை அருமை.

அன்புடன்
சக்தி
சாந்தி said…
> மௌன கன்னிமரா நூலகத்தின்
> அத்தனை நூல்களுமாய் விரிந்துகிடக்கின்றன
> உன் இதழ்கள்


புதுமை..

>
> மறைக்க நினைத்து
> மறைக்க நினைத்து
> மேலும் அதிகமாக வெளிக்காட்டாதே
>
> மேகம் முழுவதும் சூழ்கொண்ட மழை
> மனம் முழுவதும் ஆக்கிரமித்த காதல்
> வெளியேறியே தீரும்


அழகான ஒப்பீடு..

> என் செல்லமே


அடடா 16 வயதின் கவிதை..
பூங்குழலி said…
மறைக்க நினைத்து
மறைக்க நினைத்து
மேலும் அதிகமாக வெளிக்காட்டாதே

ஆகா அழகான வரிகள்
இஸ்மாயில் புகாரி said…
ரசிச்சு ரசிச்சு வாழ்கிறீர்கள்...

காதல் மட்டும் தான் மனிதம் வளர்க்கும்... அடுத்த தலைமுறை ஆயுத இயந்திர கலாசாரம் ஓழிய காதல் வேணும்...

வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்