69

பூக்கள்
இல்லாப் பூமிக்கு
என்னைப் பொட்டலம் கட்டுங்கள்

வாசனை
இல்லா வெளியில்
என்னை வீசி எறியுங்கள்

நட்சத்திரங்கள்
இல்லா வானத்தில்
என்னை அள்ளிக் கொட்டுங்கள்

கவிதைகள்
இல்லா சூன்யத்தில்
என்னைப் போட்டுப் புதையுங்கள்

புலன்கள்
கழிந்த தேகமாய்
என்னை மாற்றிப் போடுங்கள்

நான்
என் காதலியை
மறக்க வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

5 comments:

shanthi said...

Apadi seidhaal, ungalaal avalai marakka mudiyuma enna?

சாதிக் said...

திரும்பவும் ஆரம்பிச்சுட்டாரா காதலை புஹாரி சார்,,,


மூச்சு இழுக்கவும் விடவும் இடையேயான ஒரு நொடிப் பொழுதின் பகுதியில் தான் அவர் காதலை மறந்து மற்ற சப்ஜெக்ட்-ஐ பற்றி நினைக்கிறார். திரும்பவும் காதலை சுவாசிக்க ஆரம்பித்து விடுகிறார்.


காதல் என்றால் அப்படி ஒரு சுவாரஸ்யமா புஹாரி சார்.


பதினெட்டு வருட எம் இனிமையான திருமண வாழ்க்கையில் உங்களைப் போல் காதலித்திருந்தால் இன்னும் இனிமை சேர்த்திருக்கலாமோ என நினைத்துப் பார்க்கிறேன்.

சிவா said...

கவிதைகள்
இல்லா சூன்யத்தில்
என்னைப் போட்டுப் புதையுங்கள்


நமக்கு சாத்தியமில்லையே ஆசான்....

புன்னகையரசன் said...

இயலாததை செய்ய இயன்றால் மட்டுமே காதலியை மறக்க இயலுமா ஆசான்...?
காதல் காதல் காதல்... காதல் காதல் ஆசான்...

ஆயிஷா said...

ஒன்றும் தேவையில்லையே ஆசான்..........ஒரு காதலை மறக்க இன்னொரு காதல். ஒரு காதலியை மறக்க இன்னுமொரு காதலி. போதுமே.

இதை நான் சொல்லவில்லை. நீங்க தான் எப்பவோ சொன்ன ஞாபகம்.
அன்புடன் ஆயிஷா