***62

நான் வில்லனா கதாநாயகனா

எத்தனையோ நான்
கெஞ்சிக் கூத்தாடியும்
”இவர்கள்” எனக்கு
வில்லன் வேடம்தான்
கொடுத்தார்கள்

கதறி அழுதும்
ஒரு மாற்றமும் இல்லை

நான்
எதுவுமே கேட்கவில்லை
”அவர்களோ” எனக்கு
கதாநாயகன் வேசத்தையே
கொடுத்தார்கள்

எப்போது நீங்களும் என்னை
வில்லனாய் ஆக்குவீர்கள் என்ற
பழைய பயத்தில்
ஐயக் கேள்வி கேட்டுக்கொண்டே
நிற்கிறேன்

எப்படியானாலும்
எங்கும்
நடிக்கத்தான் வேண்டும்
என்பது மட்டும்
வாழ்க்கை நாடகத்தின்
அசைக்கமுடியாத கலைதான்

Comments

சீதாம்மா said…
வாழ்க்கை அரங்கில் எல்லோரும் கூத்தாடிகள்
சீதாம்மா
முத்துமணி said…
கவிதை நல்லா இருக்கு.
வில்லன் said…
எதோ நானே என்னை கேட்டுக்கிற மாதிரி இருக்கு.
Tamil fonts not working.

This is not only fit for you

Whole life/leaders/Prabhakaran etc

Good Thanks.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்