****70

இமைத்
துப்பட்டாவோடு
பிறந்த பேரழிகள் கண்கள்
நாகரிகமும் நாணமும்
கொண்ட பண்பு மணிகள்
கண்கள்

இதழ்கள்
கூடினாலும் சரி
இடைகள் கூடினாலும் சரி
நாணம் மிகக்கொண்டு
துப்பட்டாவை இழுத்து மூடிப்
பதுங்கிக் கொண்டுவிடுவார்கள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சாதிக் said…
ஆஹா ஆஹா... என்ன இனிமை இந்தக் கவிதை....


புஹாரி சார் நான் பெரும்பாலும் பெரிய கவிதைகளை வாசிப்பது மிகக் குறைவு,,,


பெரியக் கவிதைகளை முழுவதுமாக படிக்கணும் என்று ஆசை நிறைய இருந்தாலும் பொருமை போதவிலை.


சின்னச் சின்ன கவிதைகள் நெத்திலி மீன் போல மிக இனிமையானவை.


திருக்குறள் மாதிரி சிம்பிளா சில வரிகளில் ஹைக்கூ என்பார்களே அதுமாதிரி கவிதைகளில்


காணும் பொருளில் படிப்பவர் விழி விரியும், மனம் இனிமையில் நிறையும்.

அது மாதிரி இந்த இமைத் துப்பட்டா கவிதை. அதில் உள்ளாடும் உறவு நிலைகள் எண்ண எண்ண சுகந்தம்.


வாரேவா.... (மன்னிக்கவும் ஆர்வத்தில் கத்தி விட்டேன்)

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்