54

நீ ஏற்றிவைத்த
மெழுகுவத்தி நான்
நீ இறக்கிவிட்ட
பச்சைக்குழந்தை நான்

நீ மறந்துபோன
ஞாபகம் நான்
நீ சிந்திக்கவிடுத்த
எண்ணம் நான்

நீ பிரித்துவைத்த
இமைகள் நான்
நீ எழுப்பிவிட்ட
அலைகள் நான்

நீ நீர் மறுத்த
வேர்கள் நான்
நீ தரையில் எறிந்த
நெத்திலி நான்

நீ உறையவைக்கும்
சூரியன் நான்
நீ உலரவைக்கும்
உயிர் ஈரம் நான்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

சீனா said...

இருக்கட்டுமே நண்பா

இத்தனை துயரத்தினையும் மறந்து மறு வாழ்வு வாழ வழி இல்லையா

அன்புடன் புகாரி said...

அச்சச்சோ நான் அப்படியெல்லாம் வழியே இல்லைன்னு சொல்லலியே சீனா.
இது ஒரு தோல்விக் கதை அவ்வளவுதான்

ஜெயபாரதன் said...

புகாரி,

///இது ஒரு தோல்விக் கதை அவ்வளவுதான்////

இதில் காதல் மணம் வீசுவதைத் தவிர தோல்வி அவலம் ஒரு வரியில் கூட தொனிக்கவில்லை.


ஜெயபாரதன்.