58

உன் நகத்தில் கீறலென்றாலும்
என் உயிரில் எரிமலை விழுந்ததாய்
துடித்துப் போகிறேன்

இந்த அன்பை
எனக்குள் வாரி இறைத்தது
உன் அன்புதானே அன்பே

இந்தப் பாசத்தை
எனக்குள் அள்ளிப் பொழிந்தது
உன் பாசம்தானே கண்ணே

இந்த நேசத்தை
எனக்குள் கொட்டிக் குவித்தது
உன் நேசம்தானே செல்லமே

இந்தப் பிரியத்தை
எனக்குள் பொங்க வைத்தது
உன் பிரியம்தானே மலரே

இந்த உயிரை
இப்படித் தவிக்கச் செய்தது
என்னிடம் இருக்கும்
உன் உயிர்தானே உயிரே

இப்படி எழுதும்போதே
என் கண்களும் எழுத வருகின்றன
கண்ணீர் மையெடுத்து

உற்றுப்பார்
உனக்காக உதிரும்
இந்த விழி முத்துக்களில்
என் உயிர் துகள்களாய் மிதக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சிவா said…
இன்னும் எத்தனை வார்த்தைகள் இருக்கிறது ஆசான் காதலியை அழைக்க :)
வாணி said…
வாவ்வ்வ்வ்!!

வாவ் சொல்லி சொல்லி எனக்கும் போர் அடிச்சிருச்சு புகாரி...
உங்க கவிதைகளை படிச்சுட்டு இனி சொல்ல ஏதாவது வார்த்தை கண்டுபிடிக்கணும்...:)

அன்புடன்...
வாணி
பூங்குழலி said…
உன் நகத்தில் கீறலென்றாலும்
என் உயிரில் எரிமலை விழுந்ததாய்
துடித்துப் போகிறேன்
இந்த அன்பை
எனக்குள் வாரி இறைத்தது
உன் அன்புதானே அன்பே

அருமை
/இப்படி எழுதும்போதே
என் கண்களும் எழுத வருகின்றன
கண்ணீர் மையெடுத்து

உற்றுப்பார்
உனக்காக உதிரும்
இந்த விழி முத்துக்களில்
என் உயிர் துகள்களாய் மிதக்கும்/

உங்களிடமிருந்தே வார்த்தைத் திருட்டு. தீம்பலா

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்