51

முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே

என்னிடமிருந்து
கவர்ந்த ஞாபகங்களை
விடுவிக்கும் பொறுப்பை
நீதான் ஏற்கவேண்டும்

அவை என் குரல்களைத்
துகள்களாக்கி
நான் விழுந்தழுவதில்
சிரிக்கின்றன

நீ எரித்தெறியும் ஞாபகங்களின்
சாம்பல் கரைக்க
என் இதய நதியைப் பழக்கவேண்டும்

உன்னால் ஞாபகங்களை
மீளப் பெறவே முடியாது என்று
என் உயிர் என்னிடம் பந்தயம் கட்டி
மரண மடியில் படுத்துக்கொள்கிறது

ஆனாலும்
முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

/ஆனாலும்
முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே/

:)). ஆகின்ற காரியமா இது.
சிவா said…
//என்னிடமிருந்து
கவர்ந்த ஞாபகங்களை
விடுவிக்கும் பொறுப்பை
நீதான் ஏற்கவேண்டும்//

ஆமா ...


//நீ எரித்தெறியும் ஞாபகங்களின்
சாம்பல் கரைக்க
என் இதய நதியைப் பழக்கவேண்டும்//

பழகிக்க வேண்டியது தான்

//ஆனாலும்
முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே//

நடந்தா சந்தோசம் தான்
பூங்குழலி said…
முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே
என்னிடமிருந்து
கவர்ந்த ஞாபகங்களை
விடுவிக்கும் பொறுப்பை
நீதான் ஏற்கவேண்டும்


நல்லா இருக்கு புகாரி
காயத்திரி said…
ஆஹா! கவிஞரே எத்தனை அழகான சிந்தனை.. அற்புதம்...

//நீ எரித்தெறியும் ஞாபகங்களின்

சாம்பல் கரைக்க

என் இதய நதியைப் பழக்கவேண்டும்//

மிகவும் ரசித்தேன்...
சக்தி said…
அன்பின் நண்பரே புகாரி,

ஞாபகங்களின் சிறப்பை
நாமறியும் வண்னம்
தேன் தமிழின் வகை கொண்டு
கவியாக்கித் தந்தனையோ
நிந்தன் கவிபாடும் திறன்கண்டு
எந்தன் நெஞ்சமெலாம் பூரிக்கும்
இதைப்போலே கவிதைகள் இன்னும் பல
இனிமையாக பொழியட்டும்
வாழ்க !! கவி மேலும் தருக !!

அன்புடன்
சக்தி
N Suresh said…
நினைக்க நினைப்பவைகளை மறப்பதும் மறக்க நினைப்பவைகளை நினைப்பதும்
மனதின் கருணையற்ற இயக்கம்.

ஆனால் மனம் இருக்கும் வரை தான் மனிதம் உள்ள மனிதன்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்