52

கண்ணின் மையையும்
வெளிச்சமென்றாக்கும் இருட்டுக்குள்
தடம் தெரியாமல் வாழச் சம்மதமா

துடியாய்த் துடித்து
சுக்கு நூறாய்ச் சிதறியழியும் இதயத்தை
வாரி அள்ளிக்கொண்டு
திசை தெரியாமல் ஓட விருப்பமா

எங்கு ஓடியும்
எவ்வழியும் தெரியாமல் விழுந்து புரண்டு
வெடித்துக் கதறப் பிடிக்குமா

ஒரு சில்லறையைச் சுண்டும்போதுகூட
பூவா தலையா என்ற பதட்டம்
வீறிட்டுப் பறந்து வேதனையில் துவளும்
தோல்வியின் எண்ண மின்னல்கள்
தெளிவற்ற புலம்பல்களாய்
எத்தனை திசைகளில் பாயும் என்று
கணக்கிட முடியுமா

கண்களின் மாய வெளிச்சத்தில்
காதலிக்கத்தான் போகிறாயா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

6 comments:

vasu balaji said...

/கண்களின் மாய வெளிச்சத்தில்
காதலிக்கத்தான் போகிறாயா/

ஆமாம். அதுக்குதான் கண்ணில்லன்னுட்டாங்களே.:)

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

இந்த ராகம் படுவது புகாரிதானா - முதல் முறையென நினைக்கிறேன் - காதலில் சோகம் - காதலிக்குப் பயமூட்டும் சொற்கள் - இருப்பினும் காதல் வாழும்

நல்வாழ்த்துகள்

பூங்குழலி said...

கண்ணின் மையையும்
வெளிச்சமென்றாக்கும் இருட்டுக்குள்

அழகான கற்பனை ....

கண்களின் மாய வெளிச்சத்தில்
காதலிக்கத்தான் போகிறாயா
மாய வெளிச்சம் ....நன்றாக இருக்கிறது

விஷ்ணு said...

அன்பின் புகாரி ..
உங்கள் கவிதைகளில் கொஞ்சம் வித்தியாசமான கவிதை என
நினைக்கிறேன் ....கவிதை அருமை ..
நம்பிக்கை இழக்கும் வரிகளை
உங்கள் கவிதையில் முதன் முதலில் பார்க்கிறேன் ..


அன்புடன்
விஷ்ணு

சிவா said...

ஒரு சில்லறையைச் சுண்டும்போதுகூட
பூவா தலையா என்ற பதட்டம்
வீறிட்டுப் பறந்து வேதனையில் துவளும்
தோல்வியின் எண்ண மின்னல்கள்


அருமையான வரிகள் ஆசான்

ஆயிஷா said...

ஒரு சில்லறையைச் சுண்டும்போதுகூட
பூவா தலையா என்ற பதட்டம்
வீறிட்டுப் பறந்து வேதனையில் துவளும்
தோல்வியின் எண்ண மின்னல்கள்
தெளிவற்ற புலம்பல்களாய்
எத்தனை திசைகளில் பாயும் என்று
கணக்கிட முடியுமா

தோல்விதான். தாலாட்டப்படும் தொட்டில்கள்.
அன்புடன் ஆயிஷா