41

காலமெல்லாம் கனாக்கண்டு
கண்டெடுத்ததும்
கனவாகிப் போனால்...

கண்கள் நான்கினின்றும்
கண்ணீர்த் துளிகள்
ஈருயிரையும் ஈரப்படுத்தியபோது
காதல் நிறைகுடமானது

ஆசையாய் முட்டையிட்டு
ஆழ்மனதில் அடைகாத்தப்
பறவைக்கு
முட்டையிலிருந்து
நெருப்புத் துண்டங்கள் வெளிவந்தால்...

விழி விதைகளை
கண்ணீரில் விதைத்தாகிவிட்டது
இதயத்தை
துடிப்புகளுக்குள் புதைத்தாகிவிட்டது
இனி வாழ்க்கையை
வேறெங்கே சென்று தேடுவது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

தேவன் said...

வரிகள் வேதனையின் உச்சத்தை

உச் ... கொட்ட வைக்கின்றன!!!

கலகலப்ரியா said...

ennanga aachchu... vara vara sogam..

cheena (சீனா) said...

அன்பின் புகாரி - காதல் இனிமையும் கசப்பும் - இன்பமும் துயரமும் கலந்தது என்பதை அவ்வப்பொழுது நினைவூட்டிக்கொண்டே இருப்பது கவிஞனின் வேலை. சரியாகச் சொல்லப்பட்ட கவிதை

நல்வாழ்த்துகள்

பூங்குழலி said...

ஆசையாய் முட்டையிட்டு
ஆழ்மனதில் அடைகாத்த பறவைக்கு
முட்டையிலிருந்து
நெருப்புத் துண்டங்கள் வெளிவந்தால்?

என்ன புகாரி ?இத்தனை சோகமும் விரக்தியும் கலந்ததாய்?
உங்கள் கவிதைகள் தொகுப்பு முடியப் போகிறதா ?காதல் ஆரம்பித்து ,சுவைத்து ,இப்போது பிரிவுத் துயர் வரை வந்துவிட்டீர்களே ?