கேள்வி:
*எங்கள் ஊர் பக்கம் ராவுத்தர் குடும்பதிலிருந்து மற்ற இன முஸ்லிம்களுக்குப் பெண் கொடுப்பதோ எடுப்பதோ இல்லை. இதைத் தட்டி கேட்ட என்னை "நீ முஸ்லிமே இல்லை" எனக் கூறி சண்டை போட்டனர். யாரிடம் குறையுள்ளது. பல பிரிவுகள் பிரிவினைகள் இருப்பது வருத்தமில்லையா?*
முதலில் ஒரு இஸ்லாமியனைப் பார்த்து இன்னொரு இஸ்லாமியன் நீ முஸ்லிமே இல்லை என்று சொல்வதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் அவருக்குக் கொடுக்கவில்லை
*எங்கள் ஊர் பக்கம் ராவுத்தர் குடும்பதிலிருந்து மற்ற இன முஸ்லிம்களுக்குப் பெண் கொடுப்பதோ எடுப்பதோ இல்லை. இதைத் தட்டி கேட்ட என்னை "நீ முஸ்லிமே இல்லை" எனக் கூறி சண்டை போட்டனர். யாரிடம் குறையுள்ளது. பல பிரிவுகள் பிரிவினைகள் இருப்பது வருத்தமில்லையா?*
முதலில் ஒரு இஸ்லாமியனைப் பார்த்து இன்னொரு இஸ்லாமியன் நீ முஸ்லிமே இல்லை என்று சொல்வதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் அவருக்குக் கொடுக்கவில்லை
குடும்பப் பெயர் என்று ஏதேனும் வைத்துக்கொள்ளலாம். அது ராவுத்தரோ மரைக்காயரோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீ உயர்வு நான் உயர்வு என்றாலோ இடையில் மண உறவுகள் இல்லை என்றாலோ அந்த நிமிடம் அவர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் இல்லை.
அவர்களையே காபிர்கள் என்று அழைப்பார்கள்.
*
மார்க்கம் என்றால் அது சாதிகளை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்
இறைவன் என்றால் அவன் மார்க்கங்களை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்
இனி மற்ற சிந்தனைகளை எல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்
*
இந்த ஜமாத்தார்கள் என்று கூறிக்கொண்டு அடித்துக்கொண்டு ஆளாளுக்குப் பிரிகிறார்கள் என்றால் அவர்கள் எவருமே இஸ்லாமியர்கள் இல்லை!
ஆனால் ஜமாத்தார்கள் என்று ஊருக்கும் மார்க்கத்துக்கும் தொண்டு செய்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள்!
*
Jamal Mohamed கவிஞர்அவர்களே.
ராவுத்தருக்கும்.
லெபைக்கும்என்னவித்தியாசம்.
>>>>>>>>>>>
ராவுத்தருக்கும்.
லெபைக்கும்என்னவித்தியாசம்.
>>>>>>>>>>>
இந்து முறைப்படி பிரிக்கப்பட்டார்கள். செய்யும் தொழிலைக்கொண்டு பிரிக்கப்பட்டார்கள்
ராவுத்தர் - அரசாங்கப் பணி செய்பவர்கள், வீரர்கள்
மரைக்காயர் - கப்பல் வணிகம் செய்பவர்கள்
லெப்பை - சமூகச் சேவை செய்பவர்கள், மதச் சேவை செய்பவர்கள்
மரைக்காயர் - கப்பல் வணிகம் செய்பவர்கள்
லெப்பை - சமூகச் சேவை செய்பவர்கள், மதச் சேவை செய்பவர்கள்
இதை அள்ளிக் குப்பையில் போட்டுவிட்டு இஸ்லாமியர்கள் என்று சொன்னால் மட்டுமே அவர்கள் இஸ்லாமியர்கள். இல்லாவிட்டால் காபிர்கள்!
*
>>>சன்னி, சியா, வஹ்ஹாபி எனப்பட்ட பிரிவுகள் எல்லாம் தனது அடிப்படை கொள்கையில் மாறுபட்டவர்கள்.<<<
பொது நீரோடையிலிருந்து விலகியவர்கள். பொது நீரையிலேயேதான் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்கள்.
பிரிந்தவன் பிரியட்டும் நான் மட்டும் குர் ஆனைக் கொண்டு மட்டும் சரியாகச் செல்கிறேன் நான் எந்தப் பிரிவும் இல்லை நான் இஸ்லாமியன் என்று மட்டும் சொல்ல வேண்டும், அவனே உண்மையான இஸ்லாமியன்.
மற்றபடி இறைவனுகும் தனி மனிதனுக்கும் நேருக்கு நேர் தொடர்பு உண்டு. அது பல்லாயிரம் வகையாய் இருக்கும். அதில் யாரும் ஏதும் சொல்வதற்கில்லை. சொல்லவும் வழியில்லை!
*
உலக அரங்கில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று தீய சக்திகள் முழங்கிக்கொண்டே இருக்கின்றன.
எது உண்மை என்று சொல்ல வந்ததே என் முதல் மடல்.
ஆனால் மக்கள் மதச் சண்டையில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள்
அதோடு எந்தப் புரிதலுமே இல்லாதவர்கள்தாம் அதிகம் ஓங்கி ஒங்கிக் கத்துகிறார்கள்
ஆயினும் பலரும் பயனடையும் வண்ணம் நிறைய செய்திகளைக் கொண்டு சேர்த்துவிட்டேன்.
99.99% பேர் இணக்கமாக இருப்பதின் அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள்.
வன்முறையற்று வாழும் வழியைப் புரிந்துகொண்டார்கள்.
ஒரு சிலர் மட்டும் வில்லன்களாகவே நிற்கிறார்கள். அப்படி இருக்கத்தானே செய்வார்கள்.
அவர்களைக் கிள்ளி எறிந்துவிட்டு வன்முறையற்ற இணக்கமான சமுதாயம் வளர்க்க என் பங்கினை சிறப்பாகச் செய்வேன்.
அது இந்த உலகத்துக்கு அவசியமானது.
அதையே ஒவ்வொரு கவிஞனும் செய்ய வேண்டும்.
செய்யாவிட்டால் அவன் கவிஞனே அல்ல!
*
இஸ்லாம் என்ற பொது ஓடையிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பெயர் சூட்டிக்கொண்டு தன்னுடையது பிரிந்த தனியோடை என்று காட்டிக்கொள்பவன் உண்மையான இஸ்லாமியன் அல்ல. அவன் குர் ஆனை அவமதிக்கிறான் என்றே பொருள்.
*
Padmanabhamn Sivathanupillai குர்ஆனைமதிக்காவிட்டால் என்ன? குடியாமுழுகிவிடும்.
இந்திய முசுலிம்கள்யாரும்
சரியத்தை மதிக்காமல்
இந்தியத் தண்டனைச்
சட்டத்தை மதித்தே வாழ்கிறார்கள்.
புகாரி என்று பெயர்
தாடியில்லை மீசைஇருக்கிறது.
>>>>>>
இந்திய முசுலிம்கள்யாரும்
சரியத்தை மதிக்காமல்
இந்தியத் தண்டனைச்
சட்டத்தை மதித்தே வாழ்கிறார்கள்.
புகாரி என்று பெயர்
தாடியில்லை மீசைஇருக்கிறது.
>>>>>>
இந்தியாவில் வாழும் முஸ்லிம் இந்திய சட்டத்டை மதித்தே வாழ்வான். அப்படித்தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது
கனடாவில் இருக்கும் முஸ்லிம் கனடிய சட்டத்தை மதித்தே வாழ்வான். அப்படித்தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது
குர் ஆனை மதிக்காவிட்டால் குடிமட்டுமல்ல பிறப்பே மூழ்கிப் போய்விடும் ஓர் இஸ்லாமியனுக்கு
நீங்கள் கீதையை மதிக்காவிட்டால் குடிமூழ்கிப் போகாதவராய் இருக்கலாம். அப்படியே இருங்கள். ஆனால் உங்களைப் போலல்ல இறைபக்தியுடையவர்கள்.
எனக்கு மீசை இருக்கக் கூடாதா
சில நேரம் நீங்கள் எழுதுவதைக் கண்டால் full ல fullலா இருப்பீங்களோ என்று ஐயம் வருகிறது
*
ஆண் செல்லக்கூடிய ஆனால் ஒரு பெண் செல்லக் கூடாத இடம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? குர் ஆனில் அப்படி ஏதும் தடையில்லை!
*
*
இந்த சூபிகள் என்பவர்கள், வகாபிகளிடம் வெறுத்துப்போய் உருவானவர்களாய் இருப்பார்கள்.
எதை எடுத்தாலும் தொடாதே போகாதே செய்யாதே என்று இஷ்டத்துக்கு அடிப்படைவாதச் சட்டம் போட்டுவிட்டு தாங்கள் மட்டும் எல்லாம் அனுபவித்து மக்களை வெறுப்பேற்றியதால், இந்த சூபிகள் உருவாகி இருப்பார்கள்.
நாங்கள் இசையை விரும்புகிறோம் என்று அவர்கள் சொல்லத் தொடங்குவதிலிருந்தே பாதிப்பு தெரிகிறது.
இஸ்லாத்தில் இசை கூடாது என்று சில மடையர்கள் சொல்லித் திரிகிறார்கள்.
குர் ஆனில் காட்டுங்கள் என்றால் ஓடி ஒழிந்துவிடுவார்கள்
*
>>பெண்கள் உடை விஷயம் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது <<< ஆணின் ஆடை விசயத்திலும் அப்படியே இணையாகக் குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளது.
ஒழுக்கமான ஆசை என்பதே இஸ்லாத்தின் அறம். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். உடல் அமைப்பின்படி மறைக வேண்டியவை குறிப்பிடப்படிருக்கும். அவ்வளவுதான் வேறுபாடு.
*
இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் ஹதீகள்தான் முதல் இடத்தில் பாவம் குர் ஆன் ஏறெடுத்தும் பாராத நிலையில்....
ஒரு இஸ்லாமியனுக்கு ஹதீதுகளுக்குத்தான் பொருள் தெரியும். அதைத்தான் அவன் பொருள் தெரிந்து வாசிக்கிறான்.
குர் ஆனை அரபு மொழியில் வெறுமனே பொருள் தெரியாமல்தான் ஓதுகிறான். அதுதான் நன்மை என்றும் நம்புகின்றான். ஆதாயம் தேடி ஓதும் மனிதர்களே மிக மிக அதிகம்
குர் ஆனில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பெரும்பாலான முஸ்லிம்களுக்குத் தெரியவே தெரியாது என்பதே உண்மை
*
*
Padmanabhamn Sivathanupillai ஏ.ஆர் ரகுமான் அதுபோல் பெரியார் தாசன் இளயராஜா மகன்
இவர்களைப்போல் இஸ்லாத்தில் இணைந்து விட்டால் பிரச்சனை இல்லை.
மத நல்லிணக்கமென்றால்
பிறமதத்தவர் முசுலிமாக
மாறுவது, அல்லது இணைந்து வாழ்வது.
யார் கவிஞ்ஞன் என்ற உங்களின் விளக்கம் அபாரம். பாரதியை யயாரென்று சொல்வீர்கள்.
>>>>>>
இவர்களைப்போல் இஸ்லாத்தில் இணைந்து விட்டால் பிரச்சனை இல்லை.
மத நல்லிணக்கமென்றால்
பிறமதத்தவர் முசுலிமாக
மாறுவது, அல்லது இணைந்து வாழ்வது.
யார் கவிஞ்ஞன் என்ற உங்களின் விளக்கம் அபாரம். பாரதியை யயாரென்று சொல்வீர்கள்.
>>>>>>
>>>மத நல்லிணக்கமென்றால்
பிறமதத்தவர் முசுலிமாக
மாறுவது,<<<
பிறமதத்தவர் முசுலிமாக
மாறுவது,<<<
உங்களை மதம் மாறச் சொல்லி நான் கேட்டேனா? ஏன் இப்படி வயதுக்கு ஏற்பகூட கதைக்கமாட்டேன் என்கிறீர்கள்?
உங்கள் வயதுக்கு நீங்களாவது மரியாதை தரலாமே?
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழவில்லை. கனடாவில் வாழ்கிறேன்.
பரிசுத்தமான இஸ்லாமியர்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்.
பரிசுத்தமான இந்துக்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்
பரிசுத்தமான கிருத்துவர்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்
எங்களிடம் இணக்கம் இருக்கிறது 99%
எங்களிடம் வன்முறை கிடையாது 99%
இங்கே அறவாழ்வுதான் 99 சதவிகிதம்.
நல்ல ஒழுக்கங்களோடு உயர்வாக வாழ்கிறோம் 99%
நான் லஞ்சம் வாங்கியதில்லை லஞ்சம் கொடுத்ததில்லை இங்கே.
திருடியதில்லை திருட்டுக்கொடுப்பதும் இல்லை 99%
இப்படியாய் மதங்கள் சொல்லும் அறம் அனைத்தையும் கொண்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்.
நான் இங்கே மணிக்கணக்காய் கணினிமுன் அமர்ந்து எழுதுவது எனக்காக அல்ல. உங்களுக்காக.
அதை ஒரு நொடியேனும் உணர்ந்துபாருங்கள். இன்னமும் அறிவில்லாமல் இணக்கமில்லாமல் குதர்க்க குணத்தோடு அலையாதீர்கள்
>>>வன்முறையற்ற இணக்கமான சமுதாயம் வளர்க்க என் பங்கினை சிறப்பாகச் செய்வேன்.
அது இந்த உலகத்துக்கு அவசியமானது.
அதையே ஒவ்வொரு கவிஞனும் செய்ய வேண்டும்.
செய்யாவிட்டால் அவன் கவிஞனே அல்ல!<<<
அது இந்த உலகத்துக்கு அவசியமானது.
அதையே ஒவ்வொரு கவிஞனும் செய்ய வேண்டும்.
செய்யாவிட்டால் அவன் கவிஞனே அல்ல!<<<
இதில் துளியும் மாறாமல் பாரதி இருந்தான். ஆக உங்களுக்கு பாரதியையும் தெரியாது
உங்கள் பெயரில் ஏன் சாதிப் பெயர் என்று கேட்டேன் உங்கள் பதில் வரவே இல்லை
உங்களுக்கு இணக்கமாய் இருப்பது பிடிக்காதா என்றேன் பதிலில்லை
வெறுமனே வெறுப்பைக் கொட்டுகிறீர்கள்
அன்பும் தெரியவில்லை அதன் அவசியமும் புரியவில்லை. உங்களைக் கொண்டு இந்த சமுதாயம் அடையும் துயர் மிக அதிகமானது. உங்களின் பிறவி சாத்தானின் பிறவியாய் இருக்கிறது
காலையில் அமர்ந்து இப்படிக் கடுமையாய் எழுதுவதை நான் ஆழமாய் வெறுக்கிறேன். ஆனால் நீங்கள் அர்த்தமற்ற வெறுப்பின் பாராங்கல். உங்களை அசைக்க முயல்வது பரிசுத்தமான அறம் என்பதலால் இப்படி எழுதுகிறேன்
*
Mohamed Imran Bin Issadeen உங்களுக்கு பதில் சொல்லும்முன் உங்களிடம் சில கேள்விகள். அந்த கேள்விகளுக்கான பதில் உங்களிடமிருந்து வந்தபின் நான் பதில் சொன்னால்தான் அது உங்களைச் சரியாகச் சென்றடையும் என்பதால் மட்டுமே இந்தக் கேள்விகள்.
1. குர் ஆன் ஹதீது இவற்றுக்கான ஒற்றுமை என்ன வேற்றுமை என்ன?
2. குர் ஆன் தொகுத்த வரலாறு என்ன ஹதீத் தொகுத்த வரலாறு என்ன?
3. ஹதீதுகள் எந்தக் காலகட்டத்தில் தொகுக்கப்பட்டன யாரால் தொகுக்கப்பட்டன?
4. ஹதீதுகள் மொத்தம் எத்தனை, அவற்றுள் அங்கீகரிக்கப்பட்டவை எத்தனை? ஏன்?
5. ஹதீதுகள் சுன்னாக்களிடம் மட்டும்தான் இருக்கிறதா அல்லது சியாக்களிடமும் உள்ளனவா?
இந்தக் கேள்விகள் போதும். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். இது சிறப்பான உரையாடலாக அமைய இறைவன் துணை நிற்பானாக!
*
Padmanabhamn Sivathanupillai என் ஜாதிப்பெயரை இணைத்தவன் நானல்ல.அதைக்கடவுளின் பெயரால் செய்தவன் மனு
இன்றுவரையிலுமென்றில்லை காலாகாலத்திற்கும் பாரதநாட்டில் நிலையாய் நீடித்திருக்கும்படிச் செய்
திருப்பவன் நவீன மனு
என்றறியப்படும் அம்பேத்கர்
>>>>>>>
இன்றுவரையிலுமென்றில்லை காலாகாலத்திற்கும் பாரதநாட்டில் நிலையாய் நீடித்திருக்கும்படிச் செய்
திருப்பவன் நவீன மனு
என்றறியப்படும் அம்பேத்கர்
>>>>>>>
சிவதானு என்பதோடு நிறுத்திக்கொள்ள உங்களுக்கு ஒரு நிமிடம் போதுமே
என் தந்தை பெயரை அசன்பாவா ராவுத்தர் என்று எழுதினார்கள்.
நான் அன்புடன் புகாரி என்று எழுதுகிறேன்
புகாரி அசன்பாவா ராவுத்தார் என்றா எழுதுகிறேன்?
>>>Gnana Suriyan தான்னைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என எண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை
மேலும் அவரது சாதி அடையாளம் என்ன குற்றம் செய்தது
அவரது பெயர் சாதியைக் குறித்து நிற்பது போலவே தான் அப்துல் கலாம் என்பதில் மதம் குறிக்கப்படுகிறது
சாதி மதம் பேதங்களின் ஊற்று எனவே கலாம் பெயரை மாற்ற வேண்டும் என எண்ண வேண்டுமா என்ன
எம்மைப் பொருத்தவரையில் அவரது பெயரில் உள்ள சாதி என்னை உறுத்தவில்லை அவரை அப்படியாகவே நான் ஏற்கிறேன்<<<<
சாதியை பெயரில் ஏந்திப் பிடிப்பதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்லும் அரசியல்.
மதத்தில் அப்படியல்ல. இது உயர்ந்த மதம் இது தாழ்ந்த மதம் என்று எதையும் சொல்லிவிடமுடியாது.
சிவப்பிள்ளை என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
குருசாமி ஐயர் என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
சீனிவாசன் பறையன் என்று எழுதிப் பார்த்ததில்லை
முருகேசன் சக்கிலியன் என்று எழுதிப் பார்த்ததில்லை
கணபதி தோட்டி என்று எழுதிப் பார்த்ததில்லை.
ஆகவேதான் பாரதியைப் போல பெரியாரைப் போல பாகுபாடுகளை உரத்துச் சொல்லும் சாதியின் பெயரை ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டேன்.
(நான் பிறமதம் தாக்கிப் பேசுவதில்லை. இங்கேயும் அப்படித்தான். என்னிடம் வந்த கேள்விக்கான பதில் மட்டுமே இது. நான் இணக்கம் பாராட்டுபவன். நான் எல்லா மதங்களையும் அள்ளி அனைப்பவன். எல்லா உயிர்களையும் என்னுயிர் போல எண்ணுபவன். வன்முறை விரும்பாதவன்.)
*
சாதியை பெயரில் ஏந்திப் பிடிப்பதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்லும் அரசியல்.
மதத்தில் அப்படியல்ல. இது உயர்ந்த மதம் இது தாழ்ந்த மதம் என்று எதையும் சொல்லிவிடமுடியாது.
சிவப்பிள்ளை என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
குருசாமி ஐயர் என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
சீனிவாசன் பறையன் என்று எழுதிப் பார்த்ததில்லை
முருகேசன் சக்கிலியன் என்று எழுதிப் பார்த்ததில்லை
கணபதி தோட்டி என்று எழுதிப் பார்த்ததில்லை.
ஆகவேதான் பாரதியைப் போல பெரியாரைப் போல பாகுபாடுகளை உரத்துச் சொல்லும் சாதியின் பெயரை ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டேன்.
(நான் பிறமதம் தாக்கிப் பேசுவதில்லை. இங்கேயும் அப்படித்தான். என்னிடம் வந்த கேள்விக்கான பதில் மட்டுமே இது. நான் இணக்கம் பாராட்டுபவன். நான் எல்லா மதங்களையும் அள்ளி அனைப்பவன். எல்லா உயிர்களையும் என்னுயிர் போல எண்ணுபவன். வன்முறை விரும்பாதவன்.)
*
திருக்குறளுக்கு ஏராளமான உரைகள் உண்டு. அதில் கலைஞர் கருணாநிதியின் உரை அவர் சார்ந்த பெரியார் இயக்கத்தை ஒட்டியே விளக்கம் தரப்பட்டு வரும்.
இன்னொரு விளக்கம் அதீத பக்தியுடையவரின் விளக்கம், அது மதம் சார்ந்து சொல்லிப் போகும்.
வள்ளுவரே சொல்வதுபோல, மெய்ப்பொருள் காண்பது மட்டுமே அறிவு
*
இந்த இஸ்லாமிய உரையாடல்களை வேறு ஒரு பக்கத்திற்கு மாற்ற வேண்டும். அன்புடன் புகாரி பக்கம் ஏகமாய் நிரம்பி வழிகிறது.
நான் இணக்கம் பேசத்தான் வந்தேன். நான் வன்முறை களையத்தான் வந்தேன். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று சொல்லத்தான் வந்தேன்.
இப்போது எங்கேயோ நிற்கிறேன்
*
>>>அவர்கள் முன்னிலையில் அந்த தொகுத்த கித்தாபை அவைகள் சரியானது என்றால் எதுவும் அழியாமல் இருக்கட்டும், தவறானது என்றால் அழிந்து போகட்டும் என்று கூறி ஏரியில் விசினார்கள்.
அது பாதுகாப்பாக அவர்களுக்கு திரும்ப கிடைத்தது என்று எங்கள் ஊரில் வருடம்தோரும் ஜாவியாவில் ஹதிது கூறக் கேட்டுள்ளேன்<<<
முதலில் ஒரு இஸ்லாமியன் ஒரு விசயத்தை முழுமையாக நம்பவேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இருக்கக் கூடாது.
இஸ்லாம் மூடநம்பிக்கைகளே இல்லாத அறிவியல் மார்க்கம்.
இதை இஸ்லாமியன் தான் இல்லை என்று சொல்வதுபோல நடந்துகொள்கிறான். அதுதான் மிகக் கொடுமையான ஒன்று.
இஸ்லாமியர்களே, போலிக் கதைகளை நம்பாதீர்கள். எதைக் கேட்கிறீர்களோ அதையெல்லாம் குர் ஆன் என்ற வைரத்தால் அறுத்துப் பாருங்கள்.
அண்ணல் நபியின் பொய்கள் கலக்காத வாழ்க்கையும் அவரின் சத்தியமான உயரிய கருத்துக்களையும் கொண்டு அலசுங்கள்.
போலிகளும் பொய்களும் உங்கள் அறிவின் வெளிச்சத்தில்தான் உதிர்ந்துபோக வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். இஸ்லாம் மூடநம்பிக்கைகளே இல்லாத அறிவியல் மார்க்கம். அதை உயிருடன் புதைத்துவிடாதீர்கள்.
*
*
Gnana Suriyan மலம் அள்ளுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது
ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்
>>>>>>>
>>>>>>>
இதெல்லாம் நடந்துவிட்டால், பிறகு சாதி ஒரு செத்த பாம்புதான். ஆனால் இப்போது அது ஐந்து தலை கருநாகம். அதை உணருங்கள்.
உங்கள் எண்ணம் சரி. ஆனால் பாம்புக்குப் பல்தேய்த்து விடுகிறீர்கள்.
*
பிற மதத்தை விமரிசிக்கத் தேவையில்லை. உங்கள் மதத்தின் நல்ல வற்றை உரக்கச் சொல்லுங்கள். உங்கள் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அழிக்கப் போராடுங்கள்.
இந்தச் செயலைக் கண்டு நீங்கள் செய்வதையே பிற மதத்தவரும் பின் பற்றுவார்கள்.
நல்லவை பாராட்டப்படும்போது, தீயன தானே உதிரும்
*
மார்க்கம் என்பது அன்பும் அறமும் கொண்டு வாழ மக்களுக்குப் போதிப்பது. கட்டாயப்படுத்துவது.
ஒழுக்கமான வாழ்க்கை, உயர்வான வாழ்க்கை ஒவ்வொருவரும் வாழ்ந்து மனித நேயம் பாராட்டவே மார்க்கம்.
மார்க்கத்தின் விதிகள் வெறும் விதிகள் அல்ல, தூயமையான சமுதாயத்தை உருவாக்க தரப்பட்ட கட்டளைகள்.
*
அறிவுக்கேற்ப பொருள் விளங்கிக்கொள்வதே தொடக்கம்.
ஆனால் அது தொடக்கம்தான்.
ஒண்ணாம் வகுப்பு மட்டுமே பி ஹெச் டி ஆகிவிடமுடியாது.
பி ஹெ டி க்கு இன்னும் உழைப்பு வேண்டும். தேடித் தேடி அலையவேணுட்ம். மணிக்கணக்காய் நாள்கணக்காய் கடின உழைப்பைத் தரவேண்டும்.
அறிஞர்களின் கருத்துக்களை எல்லாம் கற்க வேண்டும்.
பின்னும் அலச வேண்டும்
அலசிய வண்ணமேஇருத்தல் வேண்டும்.
புதிய ஒளி தென்படும்போது பழைக இருட்டைக் களைய வேண்டும்.
*
அறிந்தவன் அறியாதவனுக்குச் சொல்லித்தருவதை இஸ்லாம் போற்றுகிறது.
அறிந்தவன் இறைவனுக்குச் சமம் என்று நினைத்தால் அங்கே இஸ்லாம் காணாமல் போய்விடுகிறது
*
இன்னொரு முக்கியமான கேள்வி.
நீங்கள் ஏதேனும் குதர்க்கத்துக்காகவே கேள்விகள் கேட்பீர்கள். அறிந்து கொள்ளும் நிலைப்பாடு அல்ல உங்களுடையது.
இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆகவே நான் உங்களுக்கான பதிலில் மட்டும் விளக்கம் எழுதுவதைவிட, எதிர் அம்பு விடுவதே சரி என்று கண்டிருக்கிறேன்.
ஆனால் பலருக்கும் தெளிவான விளக்கங்களை எழுதுவேன்.
இதை இப்போது ஏன் சொல்கிறேன் என்றால், உங்கள் இஸ்லாத்தின் வெறுப்புக்கான காரணம் இந்த நான்கு மனைவிமார்கள் என்ற ஒன்றுமாத்திரம்தானா?
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
மிகைநாடி மிக்க கொளல்
நீங்கள் நாடிய குணங்கள் எல்லாம் என்னென்ன அதை முதலில் சொல்லுங்கள்.
பிறகு குற்றம் நாடியவற்றைப் பரிசீலிக்கலாம்!
*
மூடநம்பிக்கையோடு எவனாவது உரையாடினால் அவன் இஸ்லாமியன் அல்ல, அப்படியான ஒரு போர்வையில் இருக்கிறான் என்று கண்டுகொள்ளலாம்
*
மெய்ஞான தேடல்!
அப்படியென்றால் என்ன?
அறிவுக்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள இடைவெளியை வெகுவாக உடைத்துவிட்டது இஸ்லாம்.
மெய்ஞானம் என்பது கற்பனையில் திளைக்கும் அறிவு.
மெய்யான அறிவு என்பது பகுத்தறிவில் வளர்ந்து திளைத்திருப்பது.
மெய்ஞானத் தேடல் என்பது பொய்யை நோக்கிய தேடலே!
*
*
ஒரு சர்தார் என்னிடம் வருகிறார். அவர் தலையில் ஒன்றை அணிந்திருக்கிறார். கையில் வாள் வைத்திருக்கிறார், முகத்தில் தாடி நீண்ட கூந்தல். கையில் வளையம். அவற்றுக்கான விளக்கங்கள் அவர் நாவில்.
அவருடன் உரையாடும்போது, ஓர் இஸ்லாமியன் என்ன செய்யவேண்டும்?
அவரைக் கேலியும் கிண்டலும் செய்யவேண்டுமா?
இது கூடாது என்று உபதேசிக்க வேண்டுமா?
அவரைவிட்டு விலகிச் செல்லவேண்டுமா?
அவருடன் விரோதம் பாராட்டவேண்டுமா?
அவரை வெறுக்க வேண்டுமா?
இல்லை.... இது எதுவுமே இல்லை.
உன் வழி உனக்கு
என் வழி எனக்கு
என் வழி எனக்கு
என்றே செல்லவேண்டும்.
உன் வழியில் நீ உறுதியாய் இருப்பதே உன் நம்பிக்கைக்கு நீ செய்யும் உயர்ந்த செயல்.
*
நண்பா தமிழில் எழுதுங்கள். நீங்கள் தமிழர்தானே?
நான் தமிழில் எழுதுவதையே விரும்புகிறேன்.
நான் ஆங்கிலத்தை அலுவலகத்தோடு விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என் தமிழோடு கொஞ்சி விளையாட