Padmanabhamn Sivathanupillai
>>>அஸ்ஸலாமு அலைக்கும் பற்றித் தெரிய வில்லை, வணக்கமென்பது பணிவோடுகூடிய, பாசத்துடன்கூடிய, உடன்பாடு. இது மற்றெதுவோடும்
பொருந்துவதாகத் தெரியவில்லை<<<

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
சாந்தியும் சமாதானமும் உண்டாகுக
என்று பொருள்

அதாவது
அன்பும் அமைதியும்
மன உடன்பாடும் நிறைக
என்று பொருள்

நான் சவுதி அரேபியாவில்
வாழ்ந்திருந்த நாளில்
ஒரு வாடிக்கையாளர்
கடுங்கோபத்தில் வந்து
காட்டுக் கத்தாகக்
கத்தத் தொடங்கினார்

அவர் முகத்தில்
சினம் கூத்தாடியது

அடிப்பதற்கு எந்த நேரமும்
கையை ஓங்கிவிடுவார்
என்று தோன்றியது

அல்லது
கையில் இருக்கும்
கெட்டுப்போன தொலைபேசியை
எங்கள்மீது
விட்டு எறிந்துவிடுவார்
என்று தோன்றியது

இதை
எப்படிச் சமாளிக்கப் போகிறோம்
என்ற கவலை
பயமாய் மாறி படுத்தி எடுத்தது

அப்போது
கத்தானி என்கிற
என் மேலாளர்
அந்தக் கடுங் கோபக்காரரிடம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்

என்று
நிதானமான
தெளிவான குரலில்
ஒரு நூறுமுறைக்குமேல்
சொல்லிக்கொண்டே இருந்தார்

வேறு
எந்த பதிலும் சொல்லவும் இல்லை
பதிலுக்குக் கோபமாகத்
திருப்பிக் கத்தவும் இல்லை

வந்தவரின் கோபம்
படிப்படியாகத் தணிந்தது

அலைக்கும் அஸ்ஸலாம்
என்று சொன்னார்

அடுத்த நொடி
இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்
கட்டியணைத்துக் கொண்டார்கள்

வந்தவரின் கோபத்திற்கு
எதுகாரணமோ
அதைச் சரிசெய்து
இணக்கமாக அனுப்பி வைத்தார்
கத்தானி

நான்
கத்தானியிடம்
கற்றுக்கொண்டது
ஏராளம்

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ