ஓ நானென்ன கவிஞனோ


என் இதயச் சத்திரத்தில்
ஒரு நாளிரவில்
வலுக்கட்டாயக் குடிபுகுந்து
அட்டகாசம் செய்த
எண்ண நாடோடிகளை
உருவமைக்க
என் பிஞ்சு விரல்களை
விளையாட விட்டபோது
ஓர் அற்புதக் கவிதை
சுகப் பிரவசத்தில்

ஓ நானென்ன கவிஞனோ
என்று உள்ளம் துள்ள
ஊனின்றி உறக்கமுமின்றி

சுருட்டிக் கொள்ளும்
சிந்தனை வாலை
வருத்தி வரவழைத்த
கற்பனை நதிகளில்
தோய்த்துத் தோய்த்து
நிமிர்த்தி நிமிர்த்தி
கவிதைப் பூக்களென
மலரவிட்ட போது

என் வீட்டுக்
குப்பைக் கூடைகள்
ஏப்பம் விட்டன

1 comment:

Anonymous said...

சுருட்டிக் கொள்ளும்
சிந்தனை வாலை
வருத்தி வரவழைத்த
கற்பனை நதிகளில்
தோய்த்துத் தோய்த்து
நிமிர்த்தி நிமிர்த்தி
கவிதைப் பூக்களென
மலரவிட்ட போது

ஆகா... என்ன வரிகள் ஆசான்... எனக்கும் கொஞ்சம் அந்த சிந்தனை வாலை நிமிர்த்துவது எப்படி என்று சொல்லித்தாருங்களேன்
--

அன்புடன்
சிவா...